search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபுதாபி"

    அபுதாபி டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பகர் சமான், சர்ப்ராஸ் அகமது ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 282 ரன்களை எடுத்துள்ளது. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் பகர் சமான், முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் ஹபீஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பகர் சமான் உடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார்.
     
    ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பாகிஸ்தான் வீரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அவர் தொடர்ந்து இரு ஓவர்களில் 4 விக்கெட் வீழ்த்தினார். நாதன் லயன் 6 பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த பாகிஸ்தான் 57 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.



    6-வது விக்கெட்டுக்கு பகர் சமான் உடன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அரை சதம் அடித்தனர். 147 ரன்கள் ஜோடி சேர்ந்த நிலையில் பகர் சமான் 94 ரன்னில் அவுட்டானார். அதேபோல், சர்ப்ராஸ் அகமதும் 94 ரன்னில் அவுட்டானார். இறுதியில், பாகிஸ்தான் அணி 81 ஓவரில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.  

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், மார்னஸ் லபுஷங்கே 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, விளையாடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 20 ரன்கள் எடுத்துள்ளது. #PAKvAUS
    அபுதாபியில் வேலைபார்த்து வந்த கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் ரூ.13 கோடி பம்பர் பரிசு விழுந்துள்ளது. #LotteryPrize
    அபிதாபி:

    கேர மாநிலம் காசர் கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது குஞ்சு மய்யலாத். இவர் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

    சமீபத்தில் அங்கு விற்பனையான ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டு வாங்கினார். அதன் குலுக்கல் நடந்தது. அதில் பம்பர் பரிசு தொகையான 70 லட்சம் திர்ஹாம் விழுந்தது.

    இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 கோடியாகும். இவரது சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர். அதை முதலில் அவர் நம்பவில்லை. விளையாட்டாக கேலி செய்கிறார்கள் என நினைத்தார். பின்னர் உண்மையில் பரிசு கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

    லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையில் இருந்து ஒரு பகுதியை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார். இவருடன் பணிபுரியும் நண்பரின் 2 சிறுநீரங்களும் செயலிழந்துவிட்டன. அவரது சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய இருப்பதாகவும் கூறினார்.

    வழக்கமாக நண்பர்களுடன் இணைந்து தான் பரிசு சீட்டு வாங்குவேன். முதன் முறையாக நானே தனியாக லாட்டரி சீட்டு வாங்கினேன். அதற்கு தான் பரிசு கிடைத்துள்ளது என்றார். #Keralaman #LotteryPrize
    குற்றச்செயல்களை கண்டுபிடிக்க போலீசார் ஏதேதோ வழிகளை பயன்படுத்தி வரும் நிலையில், அபுதாபி போலீசார் பூச்சிகளை கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்து வருகின்றனர். #AbuDhabi
    துபாய்:

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலீசார் தங்களை கண்டுபிடிக்க இயலாத வகையில் குற்றவாளிகள் மிக சாதுர்யமாக செயல்படுகின்றனர்.

    ஆனால், அபுதாபி காவல்துறையினர், தடயம் இல்லாத வழக்குகளையும் அலசி ஆராய்ந்து நிஜ குற்றவாளிகளை பிடித்துவிடுகின்றனர். எப்படி என்கிறீர்களா...? அவர்கள் பூச்சிகளையும் ரகசிய உளவாளிகளாக மாற்றி, அதன்மூலம் ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கின்றனர். இது குறித்து அபுதாபி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    ‘‘குற்றச் சம்பவம் எப்போது நடந்தது?, எங்கு நடந்தது?, கொலையானவர் இறந்து எத்தனை மணிநேரம் இருக்கும்? என்பதை அடிப்படையாக வைத்தே, கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியும். ஆனால் ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, மறு இடத்தில் உடல் வீசப்பட்டால் மேல் குறிப்பிட்டவற்றை சரியாக யூகிக்க முடியாது.

    உடற்கூறு ஆய்வுகள் குற்ற புலனாய்வு விசாரணையில் கை கொடுத்தாலும், குற்றவாளிகளை நெருங்குவதில் தாமதம் ஏற்படலாம். இல்லையேல் காவல்துறையின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டு குற்றவாளிகள் தப்பிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. அதனால்தான் தற்போது பூச்சி உளவாளிகளை பயன்படுத்துகிறோம்.

    ஈக்களும், பூச்சிகளும் இறந்த உடல்களில் அமரக்கூடியவை. அதேசமயம் உடலை வீசிச்செல்ல வரும் கொலையாளிகளின் மீதும் உட்காரும். சில கொசுக்கள், கொலையாளிகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

    சில ஈக்களும், பூச்சிகளும் மனிதர்களின் உடல் திரவங்களை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அதனால் கொலையாளிகளின் தகவலும், கொலை செய்யப்பட்டவரின் தகவலும் பூச்சிகளின் வயிற்றில் சேமிக்கப்படுகின்றன.

    அதனால் குற்றச்சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் சுற்றித்திரியும் பூச்சிகளை பிடித்து பரிசோதித்தால், எத்தனை நபர்கள் வந்தனர், யார் யார் வந்தனர், எப்போது வந்தனர் போன்ற தகவல்களை கண்டுபிடித்துவிட முடியும்.



    பூச்சிகளும், கொசுக்களும் பலர் மீதும் அமர்வதால், நிரபராதிகளை குற்றவாளிகளாக கைது செய்துவிடுவோமோ? என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் கலீபா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் இணைந்து பூச்சிகளை தீவிரமாக அலசி ஆராய்வதால் திரவம் மற்றும் ரத்தம் பூச்சிகளின் வயிற்றில் எப்போது சேமிக்கப்பட்டது? கொலை செய்யப்பட்ட நபருக்கும், சந்தேகப்படும் நபருக்கும் என்ன சம்பந்தம்? கொலை நடந்த நேரத்தில் சந்தேகப்படும் நபர் எங்கு இருந்தார்? உண்மை கண்டறியும் சோதனை என பல ஆய்வுகளை நிகழ்த்துவதால், முக்கிய குற்றவாளிகளும், குற்றவாளிகளுக்கு உதவியவர்களும் சிக்கிவிடுகிறார்கள்.

    இப்படி தடயங்களை சேமித்துக்கொடுக்கும் பூச்சிகள், உடற்கூறு ஆய்வு முடிவுகளையும் துல்லியமாக விளக்கிவிடுகின்றன. ஏனெனில் ‘புளோ பிளை’ எனப்படும் ஈக்கள்தான் இறந்த சடலத்தில் முதலில் அமரும் பூச்சியினம். இவை இறந்த சடலத்தின் மீது அமர்வதோடு, அங்கேயே முட்டைகளையும் ஈடுகின்றன.

    முட்டைகள் லார்வா எனப்படும் புழுக்களாக மாறி, அந்த சடலத்திலேயே வளர்வதால் இந்த பூச்சிகளை கொண்டு விவரமான உடற்கூறு ஆய்வுகளை எழுதிவிட முடியும். உடற்கூறு ஆய்வில் கிடைக்கும் அத்தனை விவரங்களையும், இறந்த உடலில் வளர்ந்த பூச்சிகளின் மூலம் பெறமுடியும்’’ என்கிறார், அபுதாபி காவல்துறையின் உயர் அதிகாரி.

    இதுவரை பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள் அபுதாபி காவல்துறையினர். இங்கு கொள்ளை, கொலை நடந்த இடங்களுக்கு மோப்ப நாய் வரவழைக்கப்படுவதை போன்றே அமீரகத்தில் பூச்சிகளை சேகரிக்கும் குழுவையும் வரவழைக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சுற்றித்திரியும் பூச்சிகளை பிடித்து ஆராய்ச்சி நடத்தி, தடயங்களை சேகரிக்கிறார்கள்.

    20 பூச்சிகளை பிடித்தால், அதில் ஒன்றில்தான் தடயத்திற்கான சாத்தியக்கூறுகள் இருக்குமாம். அதனால் கவனமாக பூச்சி உளவாளிகளை தேடிப்பிடிக்கிறார்கள். இவற்றை தகுந்த முறையில் ஆராய்வதற்காகவே அபுதாபி நகரம், அல் அய்ன் மற்றும் அல் தப்ரா ஆகிய மூன்று இடங்களில் நவீன ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியினால், அமீரக காவல்துறையினருக்கு மட்டுமின்றி பூச்சிகளுக்கும் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள். #AbuDhabi
    யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் உள்ள புராதன தளங்களை 12 மணி நேரத்தில் சுற்றி பார்த்ததற்காக துபாயைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தந்தைக்கும், மகனுக்கும் கின்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட துபாயில் வாழும் முகமது தாகிர் என்பவரும், அவரது மகன் முகமது ஆயான் உடன் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் நடத்திய சாகச போட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்த போட்டியில் 22 பேர் பங்கேற்றனர்.

    இந்த போட்டியின்போது இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நினைவிடங்களை 11 மணி நேரம் 33 நிமிடங்களில் சுற்றி பார்த்து சாதனை படைத்துள்ளனர் அந்த தந்தையும், மகனும்.

    இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த பயணத்துக்கு அவர்கள் பயன்படுத்தியது முழுக்க முழுக்க பொதுத்துறை வாகனங்கள் மட்டுமே. அதாவது இந்தியாவில் உள்ள போக்குவரத்து நெரிசலில், ஆட்டோ ரிக்‌ஷா, டாக்ஸி, அரசு பேருந்து, மற்றும் ரெயில்களில் பயணித்து சுமார் 300 கிலோ மீட்டர்களை அந்த குறைந்த நேரத்தில் கடந்துள்ளனர்.

    இந்த பயணத்தில் தாஜ் மகால் துவங்கி, ஆக்ரா கோட்டை,  உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஃபதேபூர் சிக்ரி, ராஜஸ்தானில் உள்ள கியோலடியோ தேசிய பூங்கா,  டெல்லியில் உள்ள முகலாய அரசர் உமாயுனின் கல்லறை, செங்கோட்டை, குதூப்மினார் உள்ளிட்ட இடங்களை அவர்கள் சுற்றிவந்துள்ளனர்.

    இதற்கு முன்னதாக கின்னஸ் சாதனையில் 24 மணி நேரத்தில் முடிக்கப்பட்ட இந்த சாதனை தற்போது 12 மணி நேரத்தில் முடிக்கப்பட்டு தந்தையும் மகனும் கின்னஸில் இடம் பிடித்துள்ளனர். இதுதொடர்பாக துபாய் பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்த தந்தை முகமது தாகிர், இந்த முழு பயணத்திலும், பேருந்துக்காகவும், ரெயிலுக்காகவும் காத்திருந்த சமயங்களில் மட்டுமே ஓய்வெடுத்ததாகவும், அந்த நேரத்திலேயே தங்களது சாப்பாட்டை முடித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
    அபுதாபியில் இருந்து வரும்போது விமான நிலையத்தில் இந்தியர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 13 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. #TojoMathew #UAEraffledraw
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் சூப்பர்வைசராக பணியாற்றிவந்த இந்தியர் டோஜோ மேத்யூ(30). கேரள மாநிலத்தை சேர்ந்தவரான இவரது மனைவிக்கு சமீபத்தில் டெல்லியில் நர்சு வேலை கிடைத்தது.

    மனைவியை சந்திப்பதற்காக கடந்த மாதம் 24-ம் தேதி இந்தியா புறப்பட்ட டோஜோ மேத்யூ, அபுதாபி விமான நிலையத்தில் அந்நாட்டு அரசு நடத்தி வரும் மாதாந்திர ‘பிக் லாட்டரி’ பரிசு சீட்டை வாங்கினார்.

    இந்தியா வந்து சேர்ந்த பின்னர் ‘பிக் லாட்டரி’ இணையதளத்தை பார்வையிட்டபோது, நேற்று நடைபெற்ற குலுக்கலில் முதல் பரிசான 70 லட்சம் திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 13 கோடி ரூபாய்) தனக்கு கிடைத்துள்ளதை அறிந்து டோஜோ மேத்யூ, ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனார்.

    இவரைத்தவிர, 5 இந்தியர்கள் உள்பட 9 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசாக  தலா ஒரு லட்சம் திர்ஹம்கள் கிடைத்துள்ளது.



    முன்னதாக, அபுதாபி லாட்டரி குலுக்கல் வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஜனவரி மாதம் கேரளாவை சேர்ந்தவர் 1.2 கோடி திர்ஹம்களை ஜாக்பாட் பரிசாக பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.

    தற்போது கிடைத்துள்ள பரிசு தொகையின் மூலம் கேரளாவில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்னும் தனது நெடுங்கால கனவு பலித்துள்ளதாக டோஜோ மேத்யூ தெரிவித்துள்ளார். #TojoMathew  #UAEraffledraw
    துபாயில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் அபுதாபி என்ற லாட்டரியில் இந்தியர் ஒருவர் 18 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
    அபுதாபி:

    அபுதாபியின் சர்வதேச விமானநிலையத்தில் பல காலமாக விற்கப்படும் பிரசித்தி பெற்ற லாட்டரியாக பிக் டிக்கெட் அபுதாபி திகழ்ந்து வருகிறது.

    சமீபத்தில், பிக் டிக்கெட் அபுதாபி வெளியிட்ட 10 அதிஷ்டசாலிகள் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக நைஜீரியாவில் வாழும் இந்தியரான திக்சன் கட்டிதாரா ஆபிரகாம் என்பவருக்கு 10 மில்லியன் திர்காம் பரிசு அறிவிக்கப்பட்டது.

    இது இந்திய ரூபாய் மதிப்பில் 18 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே பிக் டிக்கெட் அபுதாபி லாட்டரியில் இந்தியர்கள் அதிக அளவில் பரிசு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    ×