search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கதேசம்"

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. #BangladeshFire
    டாக்கா:

    வங்கதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்று சாவ்க்பஜார். இந்த பகுதியில் உள்ள மிகப் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்பின் ஒரு பகுதி ரசாயனப் பொருட்களை சேமித்து வைக்கும் குடோனாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த குடோனில் பிடித்த தீ, பின்னர் மளமளவென பரவியது. 
     
    தகவலறிந்த தீயணைப்பு படையினர் சுமார் 200 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனப் பொருட்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியது. தீயை அணைக்க நீண்ட நேரம் ஆனது. இந்த தீ விபத்தில் சிக்கி 69 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். #BangladeshFire
    உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RajnathSingh #Bangladesh
    புதுடெல்லி:

    வங்கதேசத்தின் உள்துறை மந்திரி  அசாதுஸமான் கான் விடுத்த அழைப்பை ஏற்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஜூலை 13 முதல் 15 வரை 3 நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 வருடங்களுக்கு பிறகு இருநாட்டு உள்துறை மந்திரிகள் இடையேயான சந்திப்பு நடைபெற உள்ளது.

    இந்த சந்திப்பின் போது ராஜ்நாத் சிங் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்க உள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் வங்கதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய விசா அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

    உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் இந்த அரசு முறை பயணத்தில் இருநாட்டு உறவுகள் மற்றும் எல்லைப்பாதுகாப்புகள் குறித்து பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #RajnathSingh #Bangladesh
    வங்கதேசத்தில் பெய்து வரும் அடை மழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான விபத்துக்களில் ரோகிங்கியா அகதிகள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். #BangladeshRain
    டாக்கா:

    வங்கதேசத்தில் இந்த ஆண்டின் முதல் பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த மூன்று தினங்களாக அடைமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ரோகிங்கியா அகதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரோகிங்கியா அகதிகள் வசிக்கும் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. அகதிகளின் கூடாரங்கள் மழையால் சேதமடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் பேரை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.



    இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் ரோகிங்கியா அகதிகள் 2 பேர் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக  அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் ரங்கமதி மற்றும் காக்ஸ் பஜார் மாவட்டங்களில் மேலும் நிலச்சரிவு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.  #BangladeshRain
    இரண்டு நாட்களாக வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் பல ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் இருப்பிடத்தை இழந்து தவித்து வருகின்றனர். #Rohingyarefugee
    டாக்கா:

    மியான்மர் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனையில் ரோஹிங்கியா என்ற இஸ்லாமிய இன மக்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்து ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். பெரும்பாலான அகதிகள் வங்கதேசத்திற்கு சென்றனர். சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்கதேசம் நாட்டில் குடியேறி உள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ரோஹிங்கியா அகதிகள் அதிகம் வாழும் பகுதியான தென்கிழக்கு வங்கதேசத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

    இதனால் ரோஹிங்கியா மக்கள் வாழ்ந்து வந்த சுமார் 30 ஆயிரம் கூடாரங்கள் வெள்ளத்தாலும், மண் சரிவினாலும் அழிக்கப்பட்டன.  9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்து நீடித்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. #Rohingyarefugee
    ×