search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருமாம்பாக்கம்"

    கிருமாம்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.

    பாகூர்:

    சிதம்பரத்தை அடுத்த சீர்காழியை சேர்ந்தவர் முருகன் (வயது35), என்ஜினீயர். இவரும் அதே பகுதியை சேர்ந்த சிலரும் சென்னையில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார்கள். இவர் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்து பின்னர் மோட்டார் சைக்கிள்களில் செல்வது வழக்கம்.

    அதுபோல் நேற்று இரவு முருகன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் வழியில் புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது சுமார் 50 வயதுமதிக்கதக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குபதிவு செய்து இறந்த முதியவர் யார்-எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கிருமாம்பாக்கம் அருகே சொத்து தகராறில் தாய்- மகனை தாக்கிய உறவினர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே மணப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது தம்பிகள் ரவிச்சந்திரன், கிருஷ்ணராஜ். இவர்கள் 3 பேருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் 3 பேருக்கும் பொதுவான இடத்தில் இருந்த வாழை மரங்கள் புயல் காற்றினால் சாய்ந்து போனது. இதனை நாகராஜனின் மகன் ராஜேந்திரன் (வயது 24) அப்புறப்படுத்தினார்.

    அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன், கிருஷ்ணராஜ் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 3 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதில், ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரனும், கிருஷ்ணராஜும் சேர்ந்து ராஜேந்திரனை கையாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் ராஜேந்திரனின் வலது கையை கடித்து காயப்படுத்தினர்.

    இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இதுபற்றி கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    பின்னர் அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போலீசில் புகார் கொடுத்த ஆத்திரத்தில் ரவிச் சந்திரனும், கிருஷ்ணராஜும், ராஜேந்திரனின் தாய் கமலத்தை தாக்கி அங்கிருந்த குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தினர்.

    இதுபற்றி ராஜேந்திரன் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரன், மற்றும் கிருஷ்ணராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.

    கிருமாம்பாக்கம் அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருமாம்பாக்கம்:

    கிருமாம்பாக்கம் அருகே மணப்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 46). விவசாயி.

    இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் 2 மணியளவில் இவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கும் சத்தம் கேட்டது.

    திடுக்கிட்டு ஜெயராமன் எழுந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுபற்றி உடனே ஜெயராமன் கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் கிருமாம்பாக்கம் ஏரிக்கரையில் சந்தேகத்திற் கிடமான முறையில் நின்ற 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பேட் பகுதியை சேர்ந்த ராஜி (35) மற்றும் ஜானகிராமன் (19) என்பதும் இவர்கள் ஜெயராமன் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    ×