search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125628"

    • திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.
    • தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஆனித்தேரோட்டம் சிறப்பு பெற்றது. 516-வது ஆண்டு ஆனித்தேரோட்டம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 7.40 மணிக்கு சுவாமி -அம்மாள் பூக்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது ஆனித்திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை )நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு நடக்கும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.

    • நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. மேலும் விழாவில் காலை, மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல் நடக்கின்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது.

    இந்த தேரோட்டத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இந்த நிலையில் தேர் சுத்தம் செய்யப்பட்டு சாரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சுவாமி தேரை தீயணைப்புப்படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே தேரோட்டத்தை பார்க்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லையப்பர் கோவிலில் நேற்று பக்தானந்தா சுவாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

    • நெல்லையப்பர் கோவிலில் ஜூலை 11-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • தமிழகத்தில் 3-வது பெரிய தேராக நெல்லையப்பர் தேர் உள்ளது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கால் கோவில்களில் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை விலக்கப்பட்ட பிறகு நெல்லையப்பர் கோவிலில் தொடர் பூஜை, விழாக்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலின் மிகப்பெரிய திருவிழாவான ஆனிப்பெருந்திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து செய்து வருகிறது

    தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் ஓடும். தேரோட்டத்தை காணவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரதவீதிகளுக்கு வருவார்கள். இதில் சுவாமி தேர் ஆசியாவிலேயே அதிக எடைகொண்டதாகவும், தமிழகத்தில் 3-வது பெரிய தேராகவும் இந்த தேர் உள்ளது.

    இந்த தேர்களை தேரோட்டத்துக்கு தயார் படுத்தும் பணி நேற்று தொடங்கியது. தேர் பாதுகாப்பு கருதியும், பக்தர்கள் தேரை வெளியே இருந்து பார்க்க வசதியாகவும் கண்ணாடி இழையால் மூடி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை நேற்று கோவில் ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆனித்திருவிழா நடைபெறவில்லை.
    • தேரோட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ளது.

    நெல்லை: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் உடைய கோவிலுமானது நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆனித்திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு தொற்று குறைந்ததால் வழக்கம் போல பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆனித் திருவிழாவையொட்டி பந்தல்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோவில் வாசல் மண்டபத்திற்கு அருகே நாட்டப்பட்டது. ஆனிப் பெருந்திருவிழாயொட்டி வருகிற 3-ந்தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து திருவிழாவிற்கான ஏற்பாடுகள் திவிரமாக நடந்து வருகிறது. சுவாமி, அம்மன் தேரை சுற்றி கண்ணாடி கூண்டுகள் வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு டவுன் கீழரத வீதியில் காந்திமதி அம்மன் தேர் நிற்கும் இடத்தில் உள்ள கண்ணாடி கூண்டுகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து தேர் நிறுத்தப்பட்டிந்த பகுதியில் கிடந்த பாட்டில்கள் மற்றும் குப்பைகள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டு தூய்மை பணிகள் இன்று நடைபெற்றது. மேலும் தேரை சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

    நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முன்பொரு காலத்தில் சைவ மதத்துக்கும், சமண மதத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையொட்டி சமண மதத்தினர், சைவ சமய குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியை சோதித்தனர். அதாவது அப்பர் பெருமானை கல்லில் கட்டி கடலில் தூக்கிப்போட்டனர். அப்போது அப்பர் பெருமான், “கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” என்று சிவபெருமானை நினைத்து பாடினார்.

    அப்போது சிவனின் அருளால் அப்பர் பெருமான் கட்டப்பட்டிருந்த கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. இதன்மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளை உலகுக்கு உணர்த்தி, இறைவனின் திருக்காட்சியை பெற்றார் என்று புராணங்கள் கூறுகிறது.

    அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த தெப்ப வரலாற்றுக்கு ஏற்ப, பாடல் பெற்ற சைவ திருத்தலமான நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் ஆண்டுதோறும் அப்பர் பெருமான் தெப்ப உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

    மாசி மகத்தையொட்டி நேற்று பொற்றாமரை குளக்கரையில் அப்பர் பெருமானை யானை காலால் தள்ளுவது போலவும், தண்ணீரில் தூக்கிப்போடுவது போல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அப்பர் பெருமான் ஏறி சுற்றி வந்தார். அப்போது தெப்ப மண்டபத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழாவில் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் அப்பர் பெருமானை வழிபட்டனர்.
    ×