search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125869"

    • தொழிலாளியை கத்தியால் குத்தி பணம், செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    • ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கத்தியால் சங்குபாண்டியை குத்திவிட்டு அவர் வைத்திருந்த ரூ. 1000-த்தை பறித்தது.

    மதுரை

    மதுரை கணேசபுரம் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 24). இவரது சகோதரர் சங்குபாண்டி (26). கட்டிட தொழிலாளியான இவர்கள் சம்பவத்தன்று நள்ளிரவு தத்தனேரி மயான பகுதியில் மது அருந்தினார்கள்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணராஜா மகன் பீடை சூர்யா (19), தவளை சரவணன், திரவியம், ரெண்டு மண்டை ஆகிய 4 பேர் சங்குபாண்டியிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் பணம் தருமாறும் கத்தியை காட்டி மிரட்டினர். ஆனால் சங்குபாண்டி பணம் தர மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கத்தியால் சங்குபாண்டியை குத்திவிட்டு அவர் வைத்திருந்த ரூ. 1000-த்தை பறித்தது. இதனை தடுக்க வந்த மருதுபாண்டியையும் அந்த கும்பல் தாக்கி அவரது செல்போனையும் பறித்துச் சென்றன. கத்தியால் குத்தப்பட்ட சங்குபாண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறித்த பீடை சூர்யாவை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    • ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது.
    • இது குறித்து சென்னிமலை போலீார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கட்டுமான பிரிவில் திட்ட பொறியாளராக பணி புரிந்து வருபவர் கோசல்குமார் (வயது 49).

    இவரது நிறுவனம் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்திய தொலைதொடர்புத் துறையில் பதிவு பெற்று நாடு முழுவதும் செல்போன் டவர்கள் அமைத்து அதனை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி இந்த நிறு வனத்தின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு இட ங்களில் ஏர்செல் டவர்க ளை சுவாதீனத்தில் எடுத்து மற்றொரு தொலை த்தொடர்பு நிறுவனத்தி ற்காக (ஜியோ நெட்வொர்க்) பராமரித்து வந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 1-9-2017 முதல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாள்ளக்காட்டு தோட்ட த்தில் உள்ள ரங்கசாமி என்பவரின் நிலத்தில் செல்போன் டவர் அமைத்து அதனை பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தொலை த்தொடர்பு நிறுவன திட்ட பொறியாளர் கோசல்குமார் செல்போன் டவரை ஆய்வு செய்ய சென்னிமலைக்கு வந்தார். அப்போது ரங்கசாமி என்பவரின் பட்டா நிலத்தில் இருந்த 40 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர், 3 டீசல் ஜெனரேட்டர், பேட்டரிகள் மற்றும் குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.31½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    இதையடுத்து அவர் செல்போன் டவர் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார்.

    ஆனால் சரியான தகவல் கிடைக்க வில்லை. இது குறித்து கோசல் குமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். பின்னர் இது குறித்து பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இது குறித்து சென்னிமலை போலீசில் அவர் புகார் கொடுத்தார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி (பொறுப்பு), சப் இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்போன் டவர் குறித்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • முன்பதிவு இல்லாதரெயிலுக்கும் செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கலாம்.
    • பயணச்சீட்டு பரி சோதகர் கேட்கும்போது செயலியில் உள்ள show ticket குறியீட்டை அழுத்தி செல்போன் பயணச்சீட்டை காண்பிக்கலாம்.

    மதுரை

    செல்போன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இயலும். அதேபோல முன்பதிவு இல்லாத ரெயில் டிக்கெட்டுகளையும் செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால் பயணிகள் டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

    செல்போனில் உள்ள பிளே ஸ்டோரில் யூ.டி.எஸ். செயலியை தரவிறக்கம் செய்து அதில் செல்போன் எண், பெயர், பாஸ்வேர்டு, பாலினம், பிறந்த தேதியை பதிவு செய்தால், தகவல்களை சரிபார்க்க ஓ.டி.பி. நம்பர் வரும். அதையும் செல்போனில் பதிவு செய்ய வேண்டும்.

    அதன் பிறகு பயணச்சீட்டு தேவைப்படும் நேரத்தில் பதிவு செய்து கொள்ளலாம் .யு.டி.எஸ். ஆப் செயலியில் செல்போன் எண், பாஸ்வேர்டு பதிவு செய்து தேவையான ரெயில் நிலையத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை மொபைல் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆர்வாலட் மூலம் செலுத்தினால் பயணச்சீட்டு பதிவாகி விடும்.

    பயணச்சீட்டு பரி சோதகர் கேட்கும்போது செயலியில் உள்ள show ticket குறியீட்டை அழுத்தி செல்போன் பயணச்சீட்டை காண்பிக்கலாம்.

    குறிப்பிட்ட நிலையத்திற்கு அடிக்கடி சென்றால், அதை பதிவு செய்து Quick booking முறையில் விரைவாக பயணச்சீட்டு பெறலாம். பயணச் சீட்டுகள் மட்டுமின்றி நடைமேடை, சீசன் டிக்கெட்டுகளையும் இந்த செயலி மூலம் எளிதாக பதிவு செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மதுரை அருகே கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிக்கப்பட்டது.
    • நேற்று மதியம் டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்றார்.

    மதுரை

    மதுரை முத்துப்பட்டி, மகாலட்சுமி நகரைச் சேர்ந்த முருகன் மகள் கமலவேணி (வயது 22). கல்லூரி மாணவியான இவர் நேற்று மதியம் டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் திடீரென கமலவேணி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து ஓடினார். உடனே மாணவி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் திரண்டு குற்றவாளியை பிடித்து திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி னார். இதில் அவர் சிவகங்கை மாவட்டம், மானா மதுரை, அன்பு நகரைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 50) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்பு க்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • செல்போனில் பேசும் நபர்களிடம் வங்கி கணக்கு விபரங்களை அளிக்க வேண்டாம் என போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.
    • மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மூலம் இதுவரை ரூ.1.01 கோடி மதிப்பு உடைய 726 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போன வழக்குகளில், சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 2 வாரங்களில் மட்டும் தொலைந்துபோன ரூ.4.67 லட்சம் மதிப்பு உடைய 30 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அந்த செல்போ ன்களை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உரியவர்க ளிடம் ஒப்படைத்தார். இதனைத்தொடர்ந்து பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மூலம் இதுவரை ரூ.1.01 கோடி மதிப்பு உடைய 726 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படை க்கப்பட்டு உள்ளன.

    அடுத்தபடியாக வங்கி களில் இருந்து பேசு வதாக கூறி, பொதுமக்களின் வங்கி கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு நூதன திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அது தொடர் பாகவும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக கடந்த 2 வாரங்களில் ரூ.1.69 லட்சம் மீட்கப்பட்டு, ஊழியர்களின் வங்கி கணக்குகளில் மீண்டும் செலுத்தப்பட்டு உள்ளன.

    மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் மூலம் இதுவரை ரூ.26.64 லட்சம் மீட்கப்பட்டு உள்ளது. எனவே வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். முன்பின் தெரியாதவர்களிடம் வங்கிகணக்கு எண், சி.வி.வி மற்றும் ஓ.டி.பி ஆகிய விபரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம்.

    இதேபோல பண இரட்டிப்பு வாக்குறுதி தரும் இன்வெஸ்ட் மெண்ட் ஆப்-களை நம்பியும், ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஆன்லைன் லோன் ஆப்களிடம் ஏமாற வேண்டாம். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை எடுக்க வேண்டாம், வங்கி கணக்கு விபரங்களை அப்டேட் செய்யுமாறு வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம், ரிமோட் ஆக்சஸ் ஆப்-களான 'எனி டெஸ்க்', 'டீம் வியூவர்' போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

    அப்படி யாரேனும் மேற்கண்ட வகையில் பணம் இழக்க நேர்ந்தால் 1930 இலவச அழைப்பு எண் அல்லது www.cybercrime.gov.in இணையதள முகவரியில் தொடர்புகொண்டு 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுசீந்திரம் அருகே பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரத்தை அடுத்த வண்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் அஜய் (வயது 18). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் அஜய் தனது பெற்றோரிடம் புதிய செல்போன் ஒன்று வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்கவில்லை. இதில் அஜய் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார்.

    கடந்த 11-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜய் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். வீடு திரும்பிய பெற்றோர் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அஜயை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அஜய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் கண்ணன் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் செல்போனே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
    முனீச்:

    ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    “போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் மொபைல் போன்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை தூக்கிகொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். 

    இந்த போரட்டத்தை ஏழு வயது எமில் என்ற சிறுவனின் தலைமையில் தான் நடைபெற்றது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. “இந்த போரட்டத்துக்கு பிறகாவது பெற்றோர்கள் செல்போன்களை பார்ப்பதை விட்டுவிட்டு குழந்தைகளை பார்ப்பார்கள்” என்று நம்புகிறோம் என எமில் கூறியுள்ளார்.

    ஹம்பர்க்கில் எமில் தலைமையில் நடந்துள்ள இந்த போராட்டம் அவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி. 
    சமூக வலைத்தளங்கள் வழியாக என்னென்ன பிரச்சனைகள் பிள்ளைகளுக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்களிடம் எடுத்துச்சொல்லி அவர்களை பெற்றோர் நெறிப்படுத்த வேண்டும்.
    பிள்ளைகள் போனில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க வேண்டும்; சமூக வலைத்தளங்கள் வழியாக என்னென்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்களிடம் எடுத்துச்சொல்லி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்; ஒருவேளை, எதிர்பாராத பிரச்சனை ஒன்றில் பிள்ளைகள் மாட்டிக்கொண்டால், அதிலிருந்து அவர்களை மீட்கவும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

    உங்கள் பிள்ளைகள் வாட்ஸ்அப்பில் இருக்கிறார்கள் என்றால், அந்த ஸ்டேட்டஸைப் பாருங்கள். அவர்களுடைய தினசரி நடவடிக்கைகள், மன உணர்வுகள், நண்பர்கள், பப்பி லவ் என எல்லாவற்றையும் இதன்மூலம் அறியலாம். பிறகு, உங்கள் பிள்ளைகளின் இயல்பைப் பொறுத்து கண்டிப்பது, தண்டிப்பது, எடுத்துச்சொல்லித் திருத்துவது எனப் பொறுமையாக செயல்படுங்கள்.

    அடுத்தது, முகநூல். ஸ்கூல் படிக்கும் காலத்தில் இது அவசியமில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள். பிள்ளைகள் காது கொடுக்கவில்லை என்றால், அவர்களுடைய புகைப்படங்களை முகநூலில் பதிய வேண்டாம் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

    கை தவறுதலாக ஏதோ ஒன்றை டச் செய்துவிட்டாலும், இணையதளத்திலிருந்து கடகடவென ஆபாச வீடியோக்கள் கொட்டிவிடுகின்றன. பிள்ளைகள் ஆர்வக்கோளாறில் அவற்றை ஓப்பன் செய்துவிடலாம். அதனால், வாரம் ஒருமுறையாவது பிள்ளைகளுடைய போன் ஹிஸ்டரியை செக் செய்வது நல்லது.

    முகநூலில் பதிவேற்றப்பட்ட படங்களின் முகத்தை மட்டும் எடுத்து, அதை எப்படி ஆபாசப் படமாக மாற்றி மிரட்டுகிறார்கள் என்பதை, இதுபோன்ற செய்திகளை இணையத்தில் தேடியெடுத்து அவர்களுக்குக் காட்டுங்கள். இதுபோன்ற குற்றங்களால் உயிரைவிட்ட இளம் பெண்களைப் பற்றிய செய்திகளையும் பிள்ளைகள் பார்வைக்குக் கொண்டு செல்லுங்கள்.

    முகநூலில் இருக்கிறதுபோது, அறிமுகம் இல்லாதவர்கள், இன்பாக்ஸில் வந்து ஹாய் சொன்னால், அதற்குப் பதில் அளிக்காமல் இருப்பதுதான் நாகரிகம், மரியாதை எனப் பிள்ளைகளுக்குப் புரியவையுங்கள்.

    முகநூலில் வரும் ஆபாச வீடியோக்களை ஓப்பன் செய்தால், அது நீ அனுப்பியதாக உன்னுடைய மற்ற முகநூல் நண்பர்களுக்குச் சென்றுவிடும் என்ற தகவலைச் சொல்லி, பிள்ளைகளை உஷார்படுத்துங்கள்.

    * 'உனக்குச் சமூக வலைத்தளங்களின் வழியாக ஏதாவது பிரச்சனை வந்தால், அதை உடனே அம்மாவிடம் சொல். நான் உன்னைக் காப்பாற்றுவேன்' எனச் சொல்லி பிள்ளைகளின் மனதில் நம்பிக்கையைப் பதியவையுங்கள்.

    * உங்கள் மகளின் முகத்தை வைத்து மார்பிங் செய்வது போன்ற பிரச்சனை வந்தால், தைரியமாக சைபர் கிரைம் மூலம் தீர்வு காணுங்கள்.

    கடைசியாக, ஸ்மார்ட்போன் வழியாக உலகத்தில் இருக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும், பிள்ளைகளுக்கு நீங்களே அறிமுகப்படுத்தி விடுங்கள். போன் வழியாக நல்லவற்றைப் பார்க்க ஆரம்பித்துவிட்ட பிள்ளைகள், அதன்பின் தீயவற்றை அவர்களாகவே இனம்கண்டு புறம் தள்ளிவிடுவார்கள். 
    குழந்தைகள் பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போனில் வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன.
    இன்றைய குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகிறார்கள். பெற்றோர்களும் அதனைப் பார்த்து பூரித்துப் போகிறார்கள். மேலும் மேலும் அதனைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறார்கள். ஆனால் மருத்துவத்துறை இதனை கடுமையாக கண்டிக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு எலும்பு சிகிச்சை நிபுணர்களிடமும் பிசியோதெரபி மையங்களுக்கும் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும், பெற்றோர்களை பூரிப்பில் ஆழ்த்தும் இந்த மொபைல்தான்.

    பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. மேலும் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பில் சிக்கிக்கொள்கின்றன.

    சும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் விரல்களுக்கோ கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை. இயல்பாக குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகள் அந்த வயதில் பெறவேண்டிய ஆற்றலைப் பெறுவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி அடைவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேரும்போது பிரச்சினை முளைக்கத் தொடங்குகிறது. அவர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிப் போகிறார்கள். கைகள் எழுத ஒத்துழைப்பதில்லை.



    மேலும், குழந்தைகள் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடலை வருத்தி எந்த விளையாட்டிலும் ஈடுபடாததால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும் உயர் ரத்த அழுத்தத்திலும் கொண்டு வந்து விட்டு விடுகிறது.

    ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், கண்களும் பாதிப்புக்கு ஆளாகின்றன. கண்கள் சிவக்கின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. மிக இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. பொதுவாக பெற்றோர்களும் மற்றோர்களும் பேசிப்பேசித்தான் குழந்தைகளின் பேச்சுத்திறனும் மூளைத்திறனும் வளர்ச்சி பெறும். இந்த வளர்ச்சியை மொபைல் போன்ற பொருட்களின் திரைகளில் தோன்றும் மாயக்காட்சிகள் குழந்தைகளை வெறும் பார்வையாளர் என்ற நிலைக்கு அடிமை ஆக்கிவிடுகின்றன.

    இப்படி மொபைல்களுக்கு அடிமையான குழந்தைகள் யார் முகத்தையும் பார்த்துப் பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு உடனே வார்த்தைகளை கோர்த்து பதில் சொல்லத் தெரிவதில்லை. மற்றவர்களோடு பழகவோ பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் தனிமைப்பட்டு விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். 
    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர் சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Phoneexplodes
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள ஓட்டலில் கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாடிக்கையாளர் ஒருவரின் சட்டைப்பையில் இருந்த செல்பொன் வெடித்து சிதறியது. அவரது பையில் இருந்து வந்த புகையை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த இடத்தில் இருந்து வெளியேறினர்.

    செல்போனை அவர் உடனடியாக கீழே எரிந்தார். இருப்பினும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    செல்போன் வெடித்தற்கான சரியான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை நடைபெற்றுள்ளன. செல்போன்கள் அதிக அளவில் சூடாவதால் வெடித்து சிதறுவதாக கூறப்படுகிறது. #Phoneexplodes

    பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது விபத்தை ஏற்படுத்தவோ இல்லாத பட்சத்தில், செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். #Driving #Cellphone #KeralaHighCourt
    கொச்சி:

    போக்குவரத்து விதிமீறல்களால் நாள்தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் செல்போனில் பேசியவாறே வாகனம் ஓட்டுவதால் நிகழும் விபத்துகளும் அதிகம். எனவே செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டுவது குற்றமாக கருதப்பட்டு, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.



    கேரள மாநிலத்திலும், ‘கேரள போலீஸ் சட்டம்’ 118 (இ) பிரிவின்படி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதில் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.அங்குள்ள காக்கநாட்டை சேர்ந்த சந்தோஷ் என்பவர் செல்போனில் பேசியவாறு கார் ஓட்டி போலீசாரிடம் பிடிபட்டார். அவர் மீது கேரள போலீஸ் சட்டம் 118 (இ)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டின் ஒரு நீதிபதி அமர்வு, செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தார்.

    இதை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் அவர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.ஷபிக், பி.சோமராஜன் ஆகியோரை கொண்ட அமர்வு, செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமல்ல எனக்கூறி ஒரு நீதிபதி அமர்வின் தீர்ப்பை ரத்து செய்தனர்.

    பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது விபத்தை ஏற்படுத்தவோ இல்லாத பட்சத்தில், செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். இது கேரள போலீஸ் சட்டம் 118 (இ)-ன் கீழ் வராது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.  #Driving #Cellphone #KeralaHighCourt
    ×