search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்பிஐ"

    புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களில் 23 பேரின் கடன்களை தள்ளுபடி செய்ய உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. #PulwamaVictims #CRPFSoldiers #SBI
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். அவ்வகையில் நாட்டின் மிகப்பெரிய  அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வீரர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

    புல்வாமா தாக்குதலில் பலியான 40 வீரர்களில் 23 வீரர்கள் எஸ்.பி.ஐ. வங்கியில் கடன் பெற்றிருந்தனர். அவர்கள் பெற்றிருந்த கடன் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்வதாகவும், அவர்களுக்கு காப்பீட்டுத் தொகையாக வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் வழங்க இருப்பதாகவும் கூறி உள்ளது.

    மேலும், எஸ்பிஐ வாயிலாக சிஆர்பிஎப் வீரர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், bharatkeveer.gov.in என்ற இணையதளத்தில் நிதியை நேரடியாக வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. #PulwamaVictims #CRPFSoldiers #SBI
    ஜார்கண்ட் மாநிலத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை இரவோடு இரவாக உடைத்து, சுமார் 17 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரம் சில நாட்களாக இணைய சேவை இல்லாமல் இருந்து வந்துள்ளது. அந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு பாதுகாப்பு பணியிலும் யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள், சுமார் 17 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் கூறியுள்ளார். இச்சம்பவத்தின் தொடர்புடைய அனைத்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #ATMLoot
    ×