search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கர்"

    அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #Racistattack
    நியூயார்க்:

    அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மேரீஸ் வில்லே பகுதியை சேர்ந்தவன் ஜான் கிரைன். சம்பவத்துன்று இவன் ஒரு கடைக்கு சென்று காபி குடித்தான். அதற்கு பணம் தராமல் வெளியே செல்ல முயன்றான். அங்கு சீக்கியர் ஒருவர் பணியில் இருந்தார். அவரிடம் குடித்த காபிக்கு பணம் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜான் கிரைன் சீக்கியரை தாக்கினான்.

    மேலும் சூடான காபியை அவரது முகத்தில் ஊற்றி அவமதித்தார். இத்தாக்குதலில் சீக்கிய ஊழியர் காயம் அடைந்தான். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் கிரைன் அங்கிருந்து ஓடிவிட்டான். மறுநாள் அவனை போலீசார் கைது செய்தனர்.

    அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எனக்கு முஸ்லிம்களை பிடிக்காது. அவரை முஸ்லிம் என கருதி தாக்கினேன் என கிரைன் கூறினான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். திருட்டு- தாக்குதல் மற்றும் இனவெறி உள்ளிட்ட குற்றப்பிரிவுகளில் அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூபா கவுண்டி சிறையில் அவன் அடைக்கப்பட்டான். #Racistattack
    பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள், பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். எனவே அமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களுக்கு செல்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ஜான் ஆலன், திட்டமிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறியுள்ளார். #JohnAllenChau #NorthSentinelIslan
    போர்ட் பிளேர் :

    அந்தமானில் சென்டினல் பழங்குடியினரால் ஜான் ஆலன் என்ற அமெரிக்க வாலிபர் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவர் மத பிரசாரம் செய்ய சென்றபோது கொல்லப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஜான் ஆலன், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறியுள்ளார். இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடப்பதாக அவர் தெரிவித்தார். #JohnAllenChau #NorthSentinelIslan 
    அமெரிக்காவில் 2014ம் ஆண்டு இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய வழக்கில் அமெரிக்கர் குற்றவாளி என என கோர்ட்டு அறிவித்தது
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் பிரவிண் வர்க்கீஸ். இந்திய வம்சாவளி மாணவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாயம் ஆனார். 5 நாட்களுக்கு பின்னர் அவர் விபத்தில் மரணம் அடைந்து விட்டதாக கார்பன்டேல் பகுதி போலீசார் அறிவித்தனர்.

    19 வயதான பிரவிண் மரணம், விபத்தினால் நிகழ்ந்தது அல்ல என்று அவரது குடும்பத்தினர் கருதினர். அவர்கள் தனிப்பட்ட முறையில் டாக்டர்களை கொண்டு நடத்திய பிரேத பரிசோதனையின் முடிவு, கார்பன்டேல் பகுதி போலீசார் ஏற்பாட்டில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து முரண்பட்டது.

    இதையடுத்து வர்க்கீஸ் குடும்பத்தினர், கார்பன்டேல் பகுதி போலீஸ் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதன்பின்னர் இந்த வழக்கில் 19 வயதான கயேஜ் பெதுனே என்ற அமெரிக்கர் சிக்கினார்.

    இல்லினாய்சை சேர்ந்த இவர், பிரவிண் வர்க்கீசை சம்பவத்தன்று (2014-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி) இரவு ஒரு வாகனத்தில் அழைத்து சென்று உள்ளார். அப்போது கொகைன் போதைப்பொருள் வாங்க பிரவிண் வர்க்கீஸ் விரும்பி உள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் பிரவீண் வர்க்கீசை பெதுனே சரமாரியாக தாக்கி உள்ளார். அதில் அவர் உயிரிழந்தார்.

    இப்போது பெதுனே மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப் படலாம்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது மகன்சாவில் நீதி கிடைத்து உள்ளதில் பிரவிண் வர்க்கீசின் தாயார் லவ்லி வர்க்கீஸ் நிம்மதி அடைந்து உள்ளார். 
    ×