search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்.ராதாகிருஷ்ணன்"

    தூத்துக்குடி கலவரத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #ThoothukudiShooting
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களாக நடக்கும் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. அமைதியாக போராடி கொண்டு இருந்த மக்களிடையே மிகப்பெரிய கலவர சூழ்நிலை உருவாகி 13 உயிர்கள் பறிபோய்விட்டது. மத்திய அரசு துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி வழங்கியதாக பொய்யான பிரசாரங்கள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதை மக்கள் நம்ப வேண்டாம்.



    ஸ்டெர்லைட் ஆலையை பா.ஜனதா அப்போதே எதிர்த்தது. அந்த ஆலைக்கு எதிராக 95-96-ம் ஆண்டுகளில் பல போராட்டங்களை நடத்தினேன். 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்டேன். இந்த ஆலையை கொண்டு வர முழு காரணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. கட்சிகள் தான்.

    ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்போதைய மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ். மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா, பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ஆகியோரும் இதற்கு அனுமதி வழங்கியதில் முக்கிய பங்கு வகித்து உள்ளனர்.

    துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஆர்.எஸ்.எஸ். சொல்லி நடந்ததாக ராகுல்காந்தி கூறுகிறார். சோனியாகாந்தி காலத்தில் இருந்தே தமிழகத்துக்கும், தமிழ் இனத்துக்கும் நடந்த துரோகங்கள் எண்ணில் அடங்காது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்துக்கு துரோகம் செய்து உள்ளன.

    கடந்த 99 நாட்களாக நடந்த போராட்டங்களில் எந்த சம்பவமும் நடக்காமல், 100-வது நாளில் கலவரம் எப்படி நடந்தது. இதில் பங்கேற்ற தீய சக்திகள் யார் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்துக்கு எந்த திட்டமும் வரக்கூடாது என்று சில கூட்டம் செயல்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது பயங்கரவாதிகள் புகுந்துவிட்டதாக கூறிய போதும், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

    ஆஷ்துரைக்கு வீரவணக்கம் என்று ஆங்கிலேயருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆள்வதற்கு தமிழக அரசுக்கு தகுதி இருக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PonRadhakrishnan #ThoothukudiShooting

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆரம்பத்திலேயே பா.ஜ.க. போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #SterliteProtest #BanSterlite #PonRadhakrishnan

    கோவை:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு-

    கேள்வி- ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

    ப- நான் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்று விட்டு இன்று காலை தான் சென்னை திரும்பினேன். நேரடியாக இங்கு வந்து விட்டேன். எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் இன்று நடக்கிறது.

    அதில் பங்கேற்க செல்கிறேன். நான் யாரையும் சந்திக்கவில்லை. அவசரமாக இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறேன்.

    கே- உங்கள் கட்சி சார்பில் யாராவது தூத்துக்குடி செல்வார்களா?

    ப- அதனை கட்சி முடிவு செய்யும்.

    கே-ஸ்டெர்லைட் கலவரம் சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன?


    ப- ஸ்டெர்லைட் ஆலை வரக்கூடாது என ஆரம்பத்திலே பாரதீய ஜனதா போராட்டம் நடத்தியது. போராட்ட களத்தில் நானே இறங்கி போராடினேன். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தேன். 3 நாட்கள் உண்ணாவிரதம் நடந்த போது என்னை கைது செய்தனர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கும் 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். ஸ்டெர்லைட் ஆலை அமைந்தால் என்னென்ன நடக்கும் என்பதை அறிந்து ஆரம்பத்திலே போராடினோம்.

    தற்போது பலர் வே‌ஷம் போடுகிறார்கள். ஆரம்பத்திலே எதிர்ப்பு தெரிவித்தது பாரதிய ஜனதாதான். அப்போது மக்கள் ஆதரவு தரவில்லை.

    ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க. உள்ளிட்ட அதன் பின்னர் வந்த மற்ற கட்சிகள் தான்.

    தற்போது துப்பாக்கி சூடு, பிணம் கிடப்பதற்கு காரணம் இவர்கள் தான். பாரதிய ஜனதா போராடும் போது மக்கள் ஆதரவு அளித்து இருந்தால் இன்று இந்த சம்பவம் நிச்சயம் நடைபெற்று இருக்காது. இது வருத்தமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் துப்பாக்கி சூட்டில் அதி நவீன ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு இருக்கிறதே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கும் போது, சம்பவத்தின் முழு விவரத்தை படிக்கவில்லை. என்னை பொறுத்தவரை இந்த சம்பவத்தில் முழு ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதன் பின்னணி, முடிவு தெரியாமல் கருத்து சொல்ல விரும்பவில்லை. காவல் துறையை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் வகையில் இருக்க வேண்டும் என்றார். #SterliteProtest #BanSterlite #PonRadhakrishnan

    கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க வழிபிறக்கும் என்று திருச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #CauveryIssue #KarnatakaElection2018
    திருச்சி:

    திருச்சியில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக விவசாயிகள் குறிப்பாக காவிரி படுகை பகுதி விவசாயிகளின் உரிமைகளை மீட்க பா.ஜ.க. சார்பில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நாளை முதல் 24 நாட்கள், 24 சட்டமன்ற தொகுதிகளில் சைக்கிள் யாத்திரை நடைபெறுகிறது.

    இந்த யாத்திரை தமிழகத்தில் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் கட்சிகளின் சுய ரூபத்தை தோலுரிக்கும். அதே நேரத்தில் உண்மையான உரிமையை மீட்கும் யாத்திரையாகவும் இருக்கும்.

    காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழு வேடிக்கை பார்க்கும் குழுவாக இருக்கக்கூடாது. செயல்படுத்தும் குழுவாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. மத்திய அரசும், இதைத்தான் செயல்படுத்துகிறது.

    அலங்கார வார்த்தைகளாக இல்லாமல் அவசியமானதாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இப்போது அமைக்கப்பட்டுள்ள குழுவில் நான்கு மாநில பிரதிநிதிகள் உள்ளனர். அதற்கு இணையாக மத்திய அரசு பிரதிநிதிகளும் உள்ளனர்.

    இருப்பினும் இந்த குழு எடுக்கும் முடிவை ஒரு வேளை கர்நாடகா ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? எனவே நிர்வாகத்தில் மத்திய அரசுக்கும் இதில் அதிகாரம் இருக்க வேண்டும். தமிழகத்திற்கு விடவேண்டிய 177 டிஎம்சி தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கண்டும் காணாமல் இருந்தால் ஏற்கமுடியாது. இப்போதுள்ள மத்திய மோடி அரசு இதில் உறுதியாக இருக்கும்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா என்றால் அதற்கு வாரியம் என்றும், ஆணையம் என்றும், குழு என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இதில் எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.


    காவிரி பிரச்சனை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னை அரவணைக்கும் கட்சிகளை தேடிச்சென்று அழைப்பு விடுத்துள்ளார். காவிரி பிரச்சனை தொடர்பாக யார் கூட்டம் நடத்தினாலும் அதில் பேசப்படும் வி‌ஷயம் முக்கியம். கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை பார்த்து பா.ஜனதா பங்கேற்பது குறித்து அழைப்பு விடுத்தால் முடிவு செய்யும்.

    தமிழகத்தில் விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 78 இடங்களில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டு அவற்றை தடுக்க பாலம் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    இந்தியாவில் உள்ள 50 லட்சம் கி.மீ. சாலைகளில் ஒரு லட்சம் கி.மீ. சாலைகள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகளாக உள்ளன. இது வெறும் 2 சதவீதம் தான். எனவே தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் நடவடிக்கையில் முனைப்பு காட்டி வருகிறோம்.

    அதேபோன்று திருச்சி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ரிங் ரோடு திட்டங்களையம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் ஒரு சிலர்எதற்கெடுத்தாலும் எந்த திட்டங்களையும் நிறைவேற்றக்கூடாது என கூறுகிறார்கள்.

    தமிழக பா.ஜ.க.வில் பலர் கருத்து கூறுவதால் பிரச்சனை என்று கூறுவதை ஏற்கமுடியாது. பிரச்சனையில்லாத கட்சி எதுவும் உள்ளதா? காங்கிரசில் கூட 4 செயல் தலைவர்களை நியமிக்க போவதாக கூறுகிறார்கள்.

    திருச்சியில் என்னை நாளைய முதல்வரே என்று வரவேற்று பேனர்கள் வைத்துள்ளதால் நான் நாளைய முதல்வர் என்று அர்த்தமில்லை. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது தான் எங்கள் நோக்கம். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்.

    மலேசியாவில் அந்நாட்டு பிரதமர் ஜி.எஸ்.டி. மற்றும் சுங்க வரியை ரத்து செய்துள்ளார் என்பதற்காக இந்தியாவில் ரத்து செய்யப்படுமா? என்று கேட்பது சரியல்ல. மலேசியா ஒரு சிறிய நாடு. நாம் வளரும் நாடு. இந்தியாவில் இன்னும் ஏராளமான சாலைகள் தேவைப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

    எனவே மலேசியாவை இந்தியாவோடு ஒப்பிடக்கூடாது. பா.ஜ.க. அரசு விளம்பரத்திற்காக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கியதற்கு எதிர்க்கட்சிகள் குறை கூறியிருப்பது நியாயமல்ல. அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல, விழிப்புணர்வை ஏற்படுத்த இது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

    கர்நாடக தேர்தல் முடிவு தமிழகத்திற்கு இன்று மாலையே காவிரி தண்ணீரை கொண்டு வருமா? என்பதை உடனே கூற முடியாது. கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க வழிபிறக்கும். அதே போன்று அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ரூ.150 கோடி பணம் கைப்பற்றப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியிடம் தான் கேட்கவேண்டும். கர்நாடக தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்பு வெளியானதாக கூறுவதை ஏற்கமுடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு செய்வதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #CauveryIssue #KarnatakaElection2018
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எந்த தடங்கலும் செய்ய கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #Jayalalithaa
    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. பா.ஜனதா கட்சி உறுதியாக ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பா.ஜனதா ஆட்சி ஏற்பட்டவுடன் தமிழக விவகாரத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படும். ஆட்சி அமைந்து ஒரு மாதம் கழித்து கர்நாடக முதல்வரை சந்தித்து தமிழகத்தின் நிலவரத்தையும், தமிழக மக்களின் உணர்வையும் எடுத்து கூறி தெளிவாக பேசுவேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எந்த தடங்கலும் செய்ய கூடாது.


    குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பாக அப்பாவி மக்களை தாக்குவோர் மீது நியாயமான முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #Jayalalithaa
    ×