search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளோரிடா"

    வெனிசுலாவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தற்காலிக அதிபராக அறிவித்துள்ள குவைடோவை ஆதரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்ற உள்ளார். #Trump #VenezuelaJuanGuaido #NickolasMaduro
    வாஷிங்டன்:

    எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் குழப்பமும் நீடிக்கிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நிகோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பதவியேற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகருமான ஜூவான் குவைடோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும்படி, நிகோலஸ் மதுரோவை அவர் வலியுறுத்தி வருகிறார். இதேபோல் கனடா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளும் ஜூவாய் குவைடோவுக்கு ஆதரவு தெரிவித்து, அதிபராக அங்கீரித்துள்ளன.

    ஆனால், ஜூவான் கெய்டோவின் நியமனத்தை அதிபர் மதுரோ ஏற்க மறுத்துள்ளார். அத்துடன் குவைடோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுடன் அதிபர் நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டு வருகிறார். வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுத்து, வெனிசூலா எல்லை பகுதிகளை மூடிவிட்டார். இதனால் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த உதவி பொருட்களை பெற முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், விரைவில் புளோரிடா சென்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், வெனிசுலாவின் தற்காலிக அதிபராக அறிவித்துள்ள குவைடோவை ஆதரித்து உரையாற்ற உள்ளதாக மியாமி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவில் வெனிசுலா மக்கள் அதிகம் வசிக்கும் தோரல் நகருக்கு அருகில் உள்ள சுவீட்வாட்டர் நகரில், புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், ‘சோசலிச ஆபத்துகள்’ என்ற தலைப்பில் டிரம்ப் உரையாற்ற உள்ளதாகவும், வெனிசுலா நெருக்கடி மற்றும் குவைடோவுக்கு ஆதரவாக டிரம்ப் பேசுவார் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #Trump #VenezuelaJuanGuaido #NickolasMaduro
    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள யோகா கிளப்பில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #FloridaShooting
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் யோகா ஸ்டூடியோ உள்ளது. இங்கு நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்தார்.

    அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர் எனவும், துப்பாக்கியால் சுட்ட நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்டமாக தகவல் வெளியானது. 

    தகவலறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #FloridaShooting
    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய வெப்பமண்டல புயல் காரணமாக அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். #Tropicalstorm #Alberto
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஆண்டு தோறும் புளோரிடா மாகாணத்தில் ஜூன் மாதம் புயல் சீசன் துவங்கும். இந்த ஆண்டு தற்போது ஆல்பர்டோ என்ற சூறாவளி புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. பனாமா நகரத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன் பலத்த மழையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆல்பர்டோ புயல் வடக்கு நோக்கி நகரும்போது வலுவடைந்து வருவதாகவும், வெள்ள அபாயம் ஏற்பட உள்ளதாகவும் மியாமி புயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டில் பெயரிடப்பட்ட முதல் புயல் ஆல்பர்டோ ஆகும். இந்த புயலின் மூலம் மேற்கு ஜியார்ஜியா பகுதிகளில் சுமார் 30 செ.மீ அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் 60 முதல் 120 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tropicalstorm #Alberto

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Shooting
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு துப்பாக்கி லைசென்சுகள்  வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டுக் கொன்றனர்

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், புளோரிடா மாகாணத்தின் பனாமா சிட்டியில் அமைந்துள்ளது அடுக்குமாடி குடியிருப்பு. இந்த குடியிருப்பில் நேற்று காலை கெவின் ஹல்ரய்டு (49), என்ற ஆசாமி தனது கையில் இருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியாக சுடத் தொடங்கினான்.

    இதையடுத்து, அப்பகுதியில் சென்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சிலர் எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடம் வந்த நாங்கள், கெவினை மடக்கிப் பிடிக்க முயன்றோம். அவன் துப்பாக்கி சூட்டை நிறுத்தாததால் சுட்டுக் கொன்றோம். அதற்கு பின்னரே அந்த பகுதியில் சகஜ நிலை திரும்பியது என தெரிவித்துள்ளனர். #Shooting #Tamilnews
    அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 38 வயதான நபர் இ-சிகரெட் வெடித்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
    புளோரிடா:

    அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரை சேர்ந்தவர் டால்மேட்ச் எலியா (38). இவருக்கு சிகரெட் பழக்கம் இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு இவர் தனது படுக்கை அறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் 80 சதவீதம் கருகிய நிலையில் இருந்தது.

    படுக்கை அறையில் உடல் கருகி இறந்தது எப்படி, என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. எனவே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இ-சிகரெட் பிடிக்க பயன்படுத்தப்படும் குழாயின் கூரியபகுதி அவரது மண்டை ஓட்டுக்குள் பாய்ந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    எனவே, அவர் இ-சிகரெட் புகைக்கும் போது அந்த குழாய் வெடித்து சிதறியதில் படுக்கை அறையில் தீப்பிடித்து அவர் உயிரிழந்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவில் 2009 முதல் 2016-ம் ஆண்டுவரை 195 இ-சிகரெட் வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 133 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆனால் உயிரிழந்த சம்பவம் தற்போது தான் முதன் முறையாக நடந்துள்ளது. #Tamilnews
    ×