search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 127246"

    உடல்நலம் குன்றி சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் பதவியை இழந்திருந்த நேரத்தில் தன்னை முதல் - அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பியதாக விஜயசாந்தி கூறியுள்ளார். #Jayalalithaa #Vijayashanti
    சென்னை:

    சினிமா, அரசியல் இரண்டிலும் தடம் பதித்தவர் நடிகை விஜயசாந்தி.

    ஐதராபாத்தில் வசித்து வரும் இவர் இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இதற்கு முன்னர் பாரதிய ஜனதாவில் இருந்தார்.

    ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ படம் விஜயசாந்தியை பட்டி தொட்டியெல்லாம் தெரிய வைத்தது. ரஜினி, கமலுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் இப்போது முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவோடு நெருங்கிய நட்பு பாராட்டிய விஜயசாந்தி, சென்னை வரும்போது போயஸ்கார்டன் சென்று அவரை சந்தித்து பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

    உடல்நலம் குன்றி சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் பதவியை இழந்திருந்த நேரத்தில் தன்னை முதல் - அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பியதாக விஜயசாந்தி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த அதிரடி பேட்டி வருமாறு:-



    எனது திரைப்படங்களை பார்த்து ஜெயலலிதா பல முறை என்னை பாராட்டியுள்ளார். இதனால் எங்களுக்குள் நட்பு அதிகரித்தது. போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். 2 காலிலும் கட்டை விரல்களில் நகங்கள் நீக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது. சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். நான் ஆறுதல் கூறி நம்பிக்கையுடன் பேசினேன்.

    அப்போது பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருந்தது. ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன்.

    அரசியல் தொடர்பாகவும் என்னோடு மனம் விட்டு பேசுவார். சொத்து குவிப்பு வழக்கு பிரச்சனையால், ஜெயலலிதா பதவி இழந்திருந்த நேரத்தில் அ.தி.மு.க.வில் சேருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்.

    அப்போது ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு நம்பிக்கையான ஒருவரை எதிர் பார்க்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் அப்போதைய சூழலில் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தெலுங்கானாவுக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அதனால் தமிழக அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என்று கூறி விட்டேன்.

    இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா அதன் பின்னரே ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினார். நான் இருக்க வேண்டிய இடத்தில்தான் அப்போது ஓ. பன்னீர்செல்வம் இருந்தார்.

    சசிகலாவுடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. நமக்கு வேண்டப்பட்டவர் கஷ்டத்தில் இருக்கும் போது, அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். அவரது கணவர் நடராஜன் மறைந்ததும் மன்னார்குடி சென்று அஞ்சலி செலுத்தினேன்.

    பெங்களூர் சிறையில் சசிகலாவையும் சந்தித்து பேசினேன். இதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்றப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்தி. மோடியின் சூழ்ச்சி.

    ரஜினி சீக்கிரம் அரசியலுக்கு வர வேண்டும். தமிழக மக்களின் சார்பில் நானும் அவருக்கு அழைப்பு விடுக்கிறேன். கமலை பொறுத்த வரையில் அரசியலுக்கு வந்து விட்டார். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு விஜயசாந்தி கூறியுள்ளார். #Jayalalithaa #Vijayashanti
    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை நடிகை விஜயசாந்தி சந்தித்து பேசினார். #vijayashanthi #sasikala

    பெங்களூர்:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவரை துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான விஜயசாந்தி சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.

    இதுகுறித்து சிறை வட்டார தரப்பில் கூறும்போது, நடிகை விஜயசாந்தி நேற்று முன்தினம் சசிகலாவிடமும் சிறைத்துறையிடமும் முன் அனுமதி பெற்று சசிகலாவை சந்தித்தார். இருவரும் சுமார் 1 மணி நேரம் தனிமையில் பேசி கொண்டிருந்தனர் என தெரிவித்தனர்.

    இந்த சந்திப்பின் போது, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தையும் சேர்க்க வேண்டும் என்று சசிகலாவிடம் கூறியதாக தகவல் வெளியானது.

    இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் மிக நெருங்கிய நண்பராக நடிகை விஜயசாந்தி இருந்து வந்தார். ஏற்கனவே பலமுறை சசிகலாவை சிறையில் சந்தித்து பேசி இருக்கிறார்.


    நான் கடந்த வாரம் ஐதராபாத் சென்றிருந்தபோது சசிகலாவை சந்திக்க அனுமதி பெற்று தாருங்கள் என்று என்னிடம் கேட்டார். அதன்படி அவரை சந்திக்க அனுமதி பெற்று கொடுத்தேன். அவர் ஐதராபாத்தில் இருந்து வந்து சசிகலாவை சந்தித்து விட்டு சென்றார். இதில் அரசியல் எதுவும் இல்லை. வழக்கமான சந்திப்புதான். இந்த சந்திப்பு குறித்து எங்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும் தெரியும். இந்த சந்திப்பை அரசியல் ஆக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #vijayashanthi #sasikala

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் நிலைக்க கடின உழைப்பு தேவை என்று நடிகை விஜயசாந்தி அறிவுரை வழங்கியுள்ளார். #Rajinikanth #KamalHaasan #VijayaShanti
    ஐதராபாத்:

    நடிகை விஜயசாந்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவுக்கு சென்று வெற்றி பெற்றவர்.

    1980 களில் இருந்து 2005-ம் ஆண்டு வரை தென்னிந்திய படங்களில் ஆக்‌‌ஷன் கதாபாத்திரங்களிலும் நடித்து அதிரடி நாயகியாக வலம் வந்தார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்.

    ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கால்பதித்தவர் தற்போது அதில் மும்முரமாக இயங்கி வருகிறார்.

    ஐதராபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை விஜயசாந்தியிடம் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-


    திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக உழைக்க வேண்டும். அதுவும் கடின உழைப்பு. அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல. நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கானாவுக்காக இருபது ஆண்டுகள் போராடி இருக்கிறேன்.

    இன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது. ரஜினி, கமல் யார் வந்தாலும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும். நிற்கவேண்டும். இவை எல்லாம் கடினமாக இருக்கும். அதை அவர்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #KamalHaasan #VijayaShanti
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விஜயசாந்தி பிரசாரம் செய்துவரும் நிலையில், விரைவில் நக்மா பிரசாரம் செய்ய உள்ளார். #TelanganaAssemblyElections #Vijayashanti #Nagma
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது.

    முதல்வர் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார்.

    இதையடுத்து தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

    சந்திரசேகரராவ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவர்கள் தொகுதிகளில் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர்.



    தெலுங்கானா தேர்தலில் காங்கிரசும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகையும், நிர்வாகியுமான நக்மா பிரசாரம் செய்கிறார். இதே போல் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிக்கிறார்.

    நடிகை விஜயசாந்தி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மெகபூபா நகர் மாவட்டத்தில் வாக்காளர்களை சந்தித்து காங்கிரசுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் திவிரமாக உள்ளது. இதனால் பிரசாரத்தில் நட்சத்திர பட்டாளங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. #TelanganaAssemblyElections #Vijayashanti #Nagma

    ×