என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 127664
நீங்கள் தேடியது "ரதசப்தமி"
திருமலையில் ரத சப்தமி விழா கோலாகலமாக நடந்தது. ஒரேநாளில் 7 வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. அதிகாலை 5.30 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணமூர்த்தியை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து, கோவிலின் கிழக்கு மாட வீதியில் பிரதான நுழைவு வாயில் எதிரே கொண்டு வந்து நிறுத்தினர். சூரியன் உதயமான நேரத்தில் சூரியக்கதிர்கள் உற்சவரின் பாதத்தில் விழுந்தபோது, அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகளை செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்தனர்.
இதையடுத்து சூரிய பிரபை வாகன உலா காலை 8 மணிவரை நான்கு மாடவீதிகளில் வலம் வந்தது. வேத பண்டிதர்கள், வேத மந்திரங்களை ஓதினர். வேத மாணவர்கள் சூரியாஷ்டகம் ஷோத்திரத்தைப் பாராயணம் செய்தனர். வாகன வீதிஉலா முன்னால் கோலாட்டம், பஜனை கோஷ்டிகளின் பக்தி பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகனம், பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை கருட வாகனம் (கருட சேவை), மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை அனுமந்த வாகனம், மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி), மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கல்ப விருட்ச வாகனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சர்வ பூபால வாகனம், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திரபிரபை வாகனம் நடந்தன.
மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ரத சப்தமி விழாவால் நேற்று கோவிலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வரும் பெண் பக்தர்கள் ஆகியோருக்கான தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், டோலோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை மற்றும் வாரத்தில் ஒருநாள் நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.
சுப்ர பாதம், தோமாலா, அர்ச்சனை ஆகியவை பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்காமல் ஏகாந்தமாக நடந்தது. நேற்று சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல் இன்றும் (புதன்கிழமை) சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன. வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்களுக்கு மட்டும் தரிசன அனுமதி வழங்கப்பட்டது. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் குறைந்த எண்ணிக்கையில் சாமி தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுப்பப்பட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று ஒரேநாளில் காலை முதல் இரவு வரை 7 வாகனங்கள் வீதிஉலா நடக்கின்றன.
அனைத்து வாகனங்களிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். எனவே இதுஒரு ‘‘மினி பிரம்மோற்சவ விழா’’ என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள்.
முதலில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதயமாகும் நேரத்தில், ‘‘சூரிய ஜெயந்தி விழா’’ நடக்கிறது. சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து, கோவிலின் பிரதான நுழைவு வாயிலின் எதிரே கொண்டு வந்து நிறுத்தப்படுவார்.
சூரியக்கதிர்கள் உற்சவர் மீது விழும். அந்த நேரத்தில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை செய்து, கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள். இதையடுத்து சூரிய பிரபை வாகன உலா நான்கு மாடவீதிகளில் வலம் வரத் தொடங்கும். மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷத்துடன் வழிபடுவர்.
வாகன வீதிஉலாவை பார்க்க லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கோவிலின் நான்கு மாடவீதிகளில் 175 கேலரிகளை சீரமைத்து, தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. கேலரிகளில் அமர்ந்து காலை முதல், இரவு வரை வாகன வீதிஉலாவை பார்த்து வழிபடும் பக்தர்களுக்குச் சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாடவீதிகளில் 55 உணவுக்கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கிருந்து கேலரிகளில் அமர்ந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம், குடிநீர் ஆகியவை வினியோகம் செய்யப்படும். பனி மற்றும் வெயிலுக்காக பக்தர்களின் நலன் கருதி தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெயில் நேரத்தில் பக்தர்கள் மாடவீதிகளில் நடக்கும்போது, தரை சுடாமல் இருக்க, ‘கூல் பெயிண்ட்’ அடிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களை கவரும் வகையில் மாடவீதிகளில் பல்வேறு இடங்களில், ‘ரங்கோலி கோலம்’ வரையப்பட்டுள்ளது. வாகன வீதிஉலாவுக்கு முன்னால் யானைகள், குதிரைகள் வரிசையாக கொண்டு செல்லப்படும். திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்ம பிரசார பரிஷத் திட்டம் சார்பில் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடக்கின்றன.
ஐதராபாத் டிரம்ஸ், கேரள செண்டை மேளம் ஆகியவை இசைக்கப்படும். பல்வேறு பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடி செல்வார்கள். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
திருமலை-திருப்பதி தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் காலை முதல் இரவு வரை பக்தர்களுக்குச் சேவை செய்வார்கள். ரத சப்தமி விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு, பக்தர்களின் வருகைக்காக தயார் நிலையில் உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய பிரபை வாகனம் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணிவரை, சிறிய சேஷ வாகனம் காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை, கருட வாகனம் பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை, அனுமந்த வாகனம் மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை நடக்கின்றன.
அதைத்தொடர்ந்து சக்கர ஸ்நானம் மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை, கல்ப விருட்ச வாகனம் மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை, சர்வ பூபால வாகனம் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை, சந்திரபிரபை வாகனம் இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை நடக்கின்றன.

திருப்பதியில் ஆண்டுதோறும் ரதசப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரதசப்தமி விழா பிப்ரவரி 12-ந்தேதி நடைபெறுகிறது.

அன்று ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார். இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று தேவஸ்தானம் குறிப்பிடுகிறது. ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரதசப்தமி அன்று நடைபெறவுள்ள வாகன சேவைகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனம். காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனம். காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம். மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம்.
இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனம் போன்ற வாகன சேவைகள் நடைபெறுகிறது.

×

X