search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவிதை"

    ஜனநாயகத்தை வலியுறுத்தும் ‘சாவி’ என்னும் கவிதையை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எழுதியுள்ளார். #MamataBanerjee #Key
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடைபெற இருக்கும் தேர்தலில் பிரமாண்ட எதிர்க்கட்சி கூட்டணியை அமைத்து வருகிறார். அவர் அரசியல்வாதியாக மட்டுமின்றி இதுவரை 80-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். ஒரு பாடல் உள்பட பல கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவர் டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் தர்ணாவில் பங்கேற்க புறப்படும் முன்பு 18 வரிகள் கொண்ட ஒரு கவிதையை சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.

    ஜனநாயகத்தை வலியுறுத்தும் ‘சாவி’ என்ற அந்த கவிதையில், “இன்றைய மத்திய அரசில் ஒவ்வொருவரின் உதடுகளும் எவ்வாறு பூட்டப்பட்டுள்ளது, எப்படி இந்த நடைமுறை ஜனநாயகத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. ஜனநாயகத்தை படுகொலை செய்யும் இந்த மனப்பான்மை ஒரு நாள் வெடிக்கும்” என்று கூறியுள்ளார். பல வரிகளில் பிரதமர் மோடியை தாக்கியுள்ளார். அவரது இந்த கவிதை சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.  #MamataBanerjee #Key
    அரியலூர் மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நாளை நடக்கிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் பள்ளிகளில் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. 

    இதேபோல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வருகிற 14-ந்தேதி கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 

    போட்டிகளில் முதல் இடம் பிடிப்பவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். இந்த அரிய வாய்ப்பினை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    ×