search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிப்பறைகள்"

    சுவாச் பாரத் திட்டத்தின் வெற்றியால் இந்திய கிராமங்களில் ஓவியங்களுடன் கூடிய கழிப்பறைகளை காண சுற்றுலாப் பயணிகள் வரும் காலம் வரும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Hindustantoilets #tourists #Modi #SwachhBharat
    சண்டிகர்:

    பிரதமர் மோடி அரியானா மாநிலம், குருஷேத்ரா நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    தனது உரையினிடையே நைஜீரியாவில் இருந்து இங்கு வந்துள்ள ஆய்வுக்குழுவினரை குறிப்பிட்டுப் பேசிய மோடி, ‘திறந்தவெளி கழிப்பறைகள் இல்லாத இந்தியாவுக்கான ‘சுவாச் பாரத்’ திட்டம் இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியை எப்படி பெற்றது, இதை எப்படியெல்லாம் நைஜீரியா நாட்டில் செயல்படுத்தலாம்? என்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நைஜீரியாவில் இருந்து இங்கு வந்துள்ள நமது விருந்தினர்களை நான் வரவேற்கிறேன்.

    கடந்த ஒரு வாரமாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள உங்களது முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்றார்.



    மேலும், ‘ஐரோப்பாவில் உள்ள ஒரு இடத்தில் வீடுகளின் முகப்பில் அழகிய சுவரோவியங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றை கண்டு ரசிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துச் செல்கின்றனர்.

    அதேபோல், அநேகமாக இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தின் கழிப்பறைகளின் தூய்மையையும் அவற்றில் உள்ள அழகிய ஓவியங்களையும் காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் இங்குவரும் ஒரு காலம் ஒருநாள் வரும்’ என மோடி நம்பிக்கை தெரிவித்தார். #Hindustantoilets #tourists #Modi #SwachhBharat 
    ×