search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 127844"

    அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு இம்மாத இறுதியில் அடிக்கல் நாட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly


    சட்டசபையில் பொன்முடி (தி.மு.க.) பேசும்போது, அத்திக்கடவு- அவினாசி திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று கேட்டார்.

    இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. நான்கைந்து நாட்களில் இறுதிசெய்யப்பட்டு இம்மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும்.

    இந்த திட்டம் சிறிது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மலையில் இருந்து கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு வனத்துறை அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க காலிங்கராயன் பாளையத்தில் இருந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly

    தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட வழக்கில் 6 இளைஞர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. #NIA #ISISMember
    புதுடெல்லி:

    கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கனகமாலா என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் மன்சித் முகமது, சுவாலி முகமது, ரஷித் அலி, ராம்சத் என்.கே., சப்வன், ஜசிம் என்.கே. ஆகிய 6 இளைஞர்கள் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் அவர்கள், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பிரமுகர்கள், பகுத்தறிவுவாதிகள் போன்ற முக்கிய பிரமுகர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை தீட்டியது தெரிய வந்தது. இவர்கள் சமூக ஊடகங்களில் தங்களுக்கென்று தனிப் பகுதிகளை உருவாக்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இவர்கள் 6 பேர் மீதும் தேசிய புலனாய்வு முகமை கடந்த ஆண்டு மார்ச் மாதம் எர்ணாகுளம் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், இந்த கோர்ட்டு கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் நேற்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. 
    வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடம் நிதி திரட்டும் யோசனையை கைவிட வேண்டும் என அரசுக்கு கேரள மாநில காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. #KeralaFlood #KVThomas
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 483 பேர் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் பலர் தங்கள் வீடு, உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

    கேரள மாநிலத்தின் இந்த நூறாண்டு காணாத மிகப்பெரிய துயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும், பன்மொழி பேசும் மக்களும் பங்கெடுத்தனர். அவர்கள் அழித்த நிவாரணத்தொகை மட்டும் ஆயிரம் கோடியை எட்டியது. மேலும், பல கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களும் கேரளாவுக்கு வழங்கப்பட்டது.



    இந்த கனமழையால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சேதத்தை சரிசெய்ய நிதி திரட்டும் முனைப்பில் தற்போது கேரள அரசு உள்ளது. முன்னதாக கேரள மாநிலத்துக்கு நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் அளிக்க முன்வந்தது. ஆனால் அதை மத்திய அரசு வாங்க மறுத்துவிட்டது.

    இதையடுத்து, கேரளாவில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய வெளிநாடுகளிடமும், வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடமும் நிதி திரட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு வெளிநாடுகளுக்கு சென்று நிதி திரட்டும் என தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், அரசின் இந்த முடிவை கைவிடுமாறு கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி. தாமஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், வெளிநாடுகளுக்கு அமைச்சர்களை அனுப்பி கையேந்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனவும், இதனால், இந்தியா மற்றும் கேரள மக்களின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கேரள மந்திரிகள் நிதி திரட்டுவதாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை கைவிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து புணரமைக்க பாடுபட வேண்டும் என கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்மந்திரி உம்மன்சாண்டி கூறியுள்ளார். #KeralaFlood #KVThomas
    டெல்லியில் வரும் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #IndependenceDay2019
    புதுடெல்லி:

    நாட்டின் சுதந்திர தினம் வருகிற 15–ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது டெல்லியில் மிகப்பெரும் தாக்குதலை அரங்கேற்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆதரவுடன் இந்த தாக்குதலை அரங்கேற்றுவதற்காக பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து, தலைநகர் டெல்லியில் முக்கியமான இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    சுதந்திர தின விழாவில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல், அமைதியான முறையில் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ரெயில்வே நிலையம், பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #IndependenceDay2019
    கர்நாடக மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 'சீனாவுடன் போட்டியிடுவோம்' என்ற புதிய திட்டத்தை அம்மாநில முதல்மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaCM #CompetewithChina
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்மந்திரி குமாரசாமி, தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை பட்டியலிட்டார்.

    அப்போது, 'சீனாவுடன் போட்டியிடுவோம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்வதாகவும், இந்த புதிய திட்டத்தின் மூலம் கர்நாடகாவில் வருவாய் இல்லாமல் மூடும் தருவாயில் இருக்கும் சிறு நிறுவனங்கள் தங்கள் தொழிலை வளர்க்க உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சீன தயாரிப்புகளுடன் போட்டியிடுவதற்காக, அதேபோன்ற தயாரிப்புகளை கிராமப்புறங்களில் தயாரிக்க  உள்ளதாகவும், அதனை தாலுகா ரீதியாக  சேகரித்து வணிக வளாகங்கள் மூலம் விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaCM #CompetewithChina
    அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. #trumpkimsummit
    பீஜிங்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ம் தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில், டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என நம்புவதாகவும், இதற்காக ஆவலாக காத்திருப்பதாகவும் சீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #trumpkimsummit
    ×