search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128233"

    • முருகனுக்கு உகந்த நாட்களிலும் பக்தர்கள் அதிகமாக வருவது வழக்கமாக உள்ளது.
    • கடலில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சஷ்டி திதி, விசாகம் மற்றும் கிருத்திகை நட்சத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களிலும் பக்தர்கள் அதிகமாக வருவது வழக்கமாக உள்ளது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • திருச்செந்தூரில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் காட்சியளித்தனர்.
    • இன்று இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாக்களில் வைகாசி திருவிழாவும் ஒன்று.

    விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகாசி விசாகத்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    கொரோனா கட்டுப்பாடுகள் பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வைகாசி திருவிழா வழக்கம் போல் நடைபெற்றது. இதனால் பக்தர்கள் நேற்று முதலே குவியத்தொடங்கினர்.

    திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருச்செந்தூரில் திரண்டனர்.

    திருச்செந்தூரில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் காட்சியளித்தனர்.

    இதனால் திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டது. பெரும்பாலான பக்தர்கள் பல்வேறு காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். சர்ப்ப காவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.


    அலங்கரிக்கப்பட்ட மினிலாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருகப்பெருமானின் உருவ படத்தை வைத்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்தனர்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கடலில் பாதுகாப்பு வளையம் அமைத்து கோவில் கடல் பக்தர் பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்நது சுவாமி ஜெயந்தி நாதர், வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

    நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபராதனையும், இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    • விசாக திருநாளான நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவிழாவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

    விசாக திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்பத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோர்ச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

    13-ந் தேதி(திங்கள் கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபரதனையும், இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

    திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதன்படி இன்று காலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருச்செந்தூர் கோவிலில் வருகிற 12-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.
    • இந்த திருவிழா 11.06.2022 அன்று முதல் 13.06.2022 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சர்ப்ப காவடி எடுத்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 12-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா 11.06.2022 அன்று முதல் 13.06.2022 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் பக்தர்கள் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரைப் பகுதிகள், மற்றும் கோவில் வளாக சுற்று வட்டாரப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    குற்ற செயல்களை தடுப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள். மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • திருச்செந்தூர் கோவிலில் வருகிற 12-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.
    • இந்த திருவிழா 11.06.2022 அன்று முதல் 13.06.2022 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சர்ப்ப காவடி எடுத்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 12-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா 11.06.2022 அன்று முதல் 13.06.2022 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் பக்தர்கள் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரைப் பகுதிகள், மற்றும் கோவில் வளாக சுற்று வட்டாரப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குற்ற செயல்களை தடுப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள்.

    மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    குமரி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம் புறப்பட்டது.இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து காவடி ஊர்வலங்கள் புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி, மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் நேற்று புறப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் பறக்கும் வேல்காவடிக்கு பூஜை, கணபதி ஹோமம், வேல் தரித்தல் போன்றவை நடந்தது.

    நேற்று யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந்தது.

    மாலையில் பறக்கும் வேல் காவடிகள், புஷ்ப காவடிகள் திருச்செந்தூருக்கு புறப்பட்டன. இந்த காவடி ஊர்வலம் மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம் வழியாக சென்றது.

    வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலிலும் வேல்தரித்தல், காவடி பூஜைகள், அன்னதானம், காவடி அலங்காரம் போன்றவை நடந்தது. நேற்று காவடி ஊர்வலம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந்தது.

    மாலையில் பறக்கும் காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இதுபோல், சேரமங்கலம் ஆழ்வார்கோவிலில் இருந்தும் பறக்கும் வேல்காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு சென்றது.

    குளச்சலில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து பக்தர்கள் பறக்கும் காவடி, வேல்காவடி எடுத்தும், சிறுவர்கள் முருகன் வேடம் அணிந்தும், குளச்சல் போலீஸ் நிலைய பகுதிக்கு வந்தனர்.

    அங்கு காவடிகளை வரவேற்க ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். பின்னர் காவடிகள் திங்கள்சந்தை வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.

    இரணியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இரணியல்கோணம், நெய்யூர், தலக்குளம் போன்ற பகுதிகளில் இருந்து காவடி ஊர்வலங்கள் புறப்பட்டு திங்கங்சந்தையில் உள்ள ராதாகிருஷ்ணன் கோவிலுக்கு வந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், அங்கிருந்து பறவை காவடி உள்பட பல்வேறு காவடிகள் ஊர்வலமாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டன. இந்த ஊர்வலம் கண்டன்விளை, தோட்டியோடு, நாகர்கோவில் வழியாக சென்றது. ஊர்வலத்தையொட்டி திங்கள்சந்தை நகரில் நேற்று போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
    ×