search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்காணல்"

    இப்போதெல்லாம் ஆயிரம் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டாலே பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். இந்த போட்டியாளர்களை சமாளித்து, தகுதியானவர்களை தேர்வு செய்வது, வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு சவால் நிறைந்த பணியாக இருக்கிறது.
    இப்போதெல்லாம் ஆயிரம் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டாலே பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். இந்த போட்டியாளர்களை சமாளித்து, தகுதியானவர்களை தேர்வு செய்வது, வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு சவால் நிறைந்த பணியாக இருக்கிறது.

    தேர்வு மையங்கள் ஏற்படுத்துவது, கண்காணிப்பாளர்களை நியமிப்பது, தேர்வுத்தாள் தயாரிப்பது, ‘காப்பி’யடிப்பதை தடுக்க மாறுபட்ட முறைகளை யோசிப்பது என அடுக்கடுக்கான சவால்கள் இருக்கிறது. அதனால் தேர்வுகளை முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என பலகட்டங்களாகவும், கடுமையானதாகவும் கடைப்பிடிக்கும் முறை உள்ளது. இதில் போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யவும், ‘ஸ்கிரீனிங் டெஸ்ட்’ எனும் திரையிடல் தேர்வு நடத்தப்படுகிறது.

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில் விண்ணப்பதாரர்களை துல்லியமாக மதிப்பிடும் பல வகை தேர்வுகள் இடம் பெறுகின்றன. இந்தத் தேர்வு முறை எப்படி இருக்கும், இதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதை அறிவோமா?

    ஸ்கிரீனிங் தேர்வில், புத்திக் கூர்மைத்திறன், பொருள் அறிதல், சூழல் உணர்தல், வார்த்தைத் தொடர்பை அறிதல், தன்மதிப்பீடு என பலவித தேர்வுகள் உள்ளன.

    புத்திக்கூர்மையை சோதிக்க பெரும்பாலும் கணிதம் சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து கூர்ந்து கவனித்து விடையளிக்கும் கேள்விகள் இடம் பெறுகிறது. படப்புதிர், உறவு முறையை கண்டுபிடித்தல், எண்களின் தொடர்ச்சி வரிசையை அறிதல், வடிவங்களின் நகர்ச்சி காரணங்களை அறிதல், திசையை அறிதல், கோடிங்- டீகோடிங் முறை போன்றவை இதில் அடங்கும். தாயக்கட்டைகள், சீட்டுக்கட்டுகளின் கணிப்பு, அணிகள் என இதன் நுட்பமான அறிவுச்சோதனை நீளும்.

    போாட்டியாளரிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை தோண்டி எடுத்து அறியும் விதமாக பொருள் உணர்தல் தேர்வு (Thematic Apperception test) நடத்தப்படுகிறது. எளிதாகச் சொல்வதானால் படம் பார்த்து கதை சொல் என்பார்களே அதுதான் இந்தத் தேர்வு. இது எளிதானது என்று நாம் நினைத்தாலும் நமது மனநிலை, குணநலன்கள், புத்திக்கூர்மை, குழு பண்பு உள்ளிட்டவற்றை தேர்வாளருக்கு காட்டிக் கொடுக்கும் தேர்வாக இது அமைகிறது. தவறுகள், எதிர்மறை சூழல்கள் இல்லாமல் பதில் அளிப்பவர்கள் மதிப்பெண்களை அள்ளலாம். இது போலவே குறிப்பிட்ட சூழலில் எப்படி செயல்படுவீர்கள்? என்பதை அறியும் சூழல் எதிர்விளைவுத் தேர்வும் பின்பற்றப்படும். சிக்கலான சூழல்களை அல்லது மிக எளிதான சூழல்களை கொடுத்து போட்டியாளரின் மன நிலையை பலப்பரீட்சை செய்யக்கூடியது இந்தத் தேர்வு.

    வார்த்தை உளவியல் தேர்வும் இதில் மற்றொரு நடைமுறை. ஒரு வார்த்தையை கொடுத்துவிட்டு, அதைப் பற்றிய உங்கள் எண்ணங்களை ஒரு வாக்கியம் அல்லது சில வரிகள் எழுத கேட்பார்கள். இது போட்டியாளரின் மனநிலையை படம் பிடிப்பதாக அமையும்.

    தன்னைப் பற்றிய சுய விளக்கத் தேர்வும், ஸ்கிரீனிங் டெஸ்ட் தேர்வு முறையில் முக்கியமானதாகும். மற்ற தேர்வுகளில் மறைமுகமாகவும், சாதுரியமாகவும் கேட்கப்படும் கேள்விகள், இ்ங்கே விளக்கமாக, நேரடியாக கேட்கப்படுகிறது. இது உங்களைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு வழிவகுப்பதாக அமையும். குறைபாடுகள் இருந்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.

    போட்டியாளர்களை கலங்க வைப்பதுடன், தரம் பிரித்துக் காட்டும் இந்தத் தேர்வில் வெற்றி பெற சிறந்த பயிற்சியும், முயற்சியும் அவசியமாகும். ஏராளமான மாதிரி தேர்வுகளை எதிர்கொள்ளுதல் மூலம் இந்தத் தேர்வில் சாதிக்க முடியும்!
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் இன்று நடக்கிறது. #WomenCricket #TeamCoach #India
    மும்பை:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் இன்று நடக்கிறது. இந்த பதவிக்கு கிர்ஸ்டன், கிப்ஸ், ரமேஷ் பவார் உள்பட 10 பேருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    வெஸ்ட்இண்டீசில் கடந்த மாதம் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. அரைஇறுதி ஆட்டத்தில் சீனியர் வீராங்கனையான மிதாலி ராஜூக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.

    இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்ததாக மிதாலி ராஜ் புகார் தெரிவித்தார். அதேநேரத்தில் ‘தொடக்க வீராங்கனையாக தன்னை இறக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று மிதாலிராஜ் மிரட்டியதாகவும், அவர் தனிப்பட்ட சாதனைக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும்’ ரமேஷ்பவார் குற்றம் சாட்டினார். ரமேஷ் பவாரை பயிற்சியாளர் பதவியில் நீட்டிக்கக்கூடாது என்று மிதாலி ராஜூம், ரமேஷ் பவாரை பயிற்சியாளராக தொடர செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் சிங், மந்தனா ஆகியோரும் வற்புறுத்தினார்கள். இந்த சர்ச்சையால் ரமேஷ் பவாரின் இடைக்கால பயிற்சியாளர் ஒப்பந்தத்தை நீட்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான டயானா எடுல்ஜி மறைமுகமாக ரமேஷ் பவாருக்கு ஆதரவு தெரிவித்தார். வீராங்கனைகள் தேர்வு குறித்து அணி நிர்வாகம் எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்று டயானா எடுல்ஜி கூறினார். அத்துடன் கேப்டன் விராட்கோலியின் வேண்டுகோளின் படி இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம் செய்யப்பட்டது போல் இந்திய பெண்கள் அணிக்கும் பயிற்சியாளரை நியமனம் செய்தால் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து வெளிநாட்டினர் உள்பட 28 பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியான 10 பேருக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த இறுதி பட்டியலில் கேரி கிர்ஸ்டன், கிப்ஸ் (இருவரும் தென்ஆப்பிரிக்கா), ரமேஷ் பவார், டபிள்யூ.வி.ராமன், வெங்கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர் (4 பேரும் இந்தியா), டிரென்ட் ஜான்ஸ்டன் (அயர்லாந்து) மார்க் கோலெஸ், மாஸ்கரனாஸ் (இருவரும் இங்கிலாந்து), பிராட் ஹாக் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியால் நியமிக்கப்பட்ட இடைக்கால தேர்வு கமிட்டியினர் கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் இறுதிபட்டியலில் இடம் பிடித்துள்ள 10 பேரிடமும் நேர்காணல் நடத்த இருக்கிறார்கள். இதில் சிலர் நேரில் வந்து தங்கள் தரப்பு திட்டத்தை விளக்குகிறார்கள். சிலர் ‘ஸ்கைப்’ மூலம் தேர்வு கமிட்டியினருடன் உரையாடுகிறார்கள்.

    கேரி கிர்ஸ்டன், கிப்ஸ், ரமேஷ் பவார் ஆகிய 3 பேரில் ஒருவரே பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது கேரி கிர்ஸ்டன் ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தால் தான் பெண்கள் அணியின் பயிற்சியாளராக ஆக முடியும். 
    நேர்முகத்தேர்வின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த விதிமுறைகளை கொஞ்சம் கடைபிடியுங்கள்...
    நேர்முகத் தேர்வின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த விதிமுறைகளை கொஞ்சம் கடைபிடியுங்கள்...

    * சரியான நேரத்திற்கு நேர்காணல் அரங்கை அடைய, முன்கூட்டியே கிளம்பிச் செல்லுங்கள்.

    * தேவையான சான்றுகள், அடையாள அட்டைகள், அழைப்புக் கடிதங்களை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

    * நேர்காணல் அரங்கில் உங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்படும் வகையில் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். அவசியமற்ற உடல்மொழிகளை காட்டாதீர்கள்.

    * தேர்வு அறைக்குள் அழைக்கப்படும்போது, அனுமதி பெற்று உள்ளே நுழையுங்கள். முகத்தில் புன்னகை தவழட்டும்.

    * தேர்வு அதிகாரி இருக்கையில் அமரச் சொன்ன பிறகு, நன்றி சொல்லி அமருங்கள்.

    * பதிலளிக்கும்போது தலையைச் சொறிவது, தேவையின்றி தலையை ஆட்டுவது, கைகளை ஆட்டுவது, கைகளை கட்டிக்கொள்வது என்றிருக்காமல் நிமிர்ந்திருந்து, நேர்த்தியான பதில்களை கூறுங்கள். இதற்கான பயிற்சிகளை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் கண்ணாடி முன்பே பேசிப் பழகலாம்.

    * தேர்வு அதிகாரியின் முகம்பார்த்து பதில் கூறுங்கள். கண்கள் அவசியமற்ற இடத்தில் உழன்றுகொண்டிருக்க வேண்டாம். தரையையும் நோட்டமிட வேண்டாம். குனிய வேண்டிய அவசியமும் இல்லை.

    * பதில்கள் மிகச்சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்கட்டும்.

    * கேள்விகள் புரியாவிட்டால் மீண்டும் கேட்பதில் தவறில்லை. அதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது.

    * முகத்தில் மலர்ச்சியும், பேச்சில் ஆர்வமும் தொனிக்க வேண்டும். குரலில் பணிவு தேவை. எரிச்சல், கோபம் தவிர்த்துவிடுங்கள்.

    * தேர்வு எதிர்பார்த்த மாதிரி அமையாவிட்டால், அதிகாரியிடம் விவாதம் செய்ய வேண்டாம். உரிய மதிப்பளிக்கத் தவறாதீர்கள்.

    இந்த வெற்றி விதிகள் உங்கள் வாழ்க்கைப் பாதையை வகுத்துத் தரும் என்பதில் ஐயமில்லை! 
    நேர்காணல் என்பது பல்வகை அம்சங்களை உட்கொண்ட ஒரு கடினமான பணியாகும். இதன்மூலம் பணியாளர் தொடர்பான அனைத்து தகவல்களும் திரட்டப்படுகின்றன.
    பணியாளர் தேர்வுக்கு பெருவாரியாக பயன்படுத்தப்படும் வழிமுறையே நேர்காணல் ஆகும். இதில், தேர்வு செய்ய வேண்டிய பணியாளர்களை நிறுவன முதலாளியோ அல்லது அவர் சார்பாக உரிய மேலாளரோ அல்லது நியமனம் செய்யப்பட்ட தேர்வுக்குழுவோ நேர்காணலில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

    நேர்காணல் என்பது பல்வகை அம்சங்களை உட்கொண்ட ஒரு கடினமான பணியாகும். இதன்மூலம் பணியாளர் தொடர்பான அனைத்து தகவல்களும் திரட்டப்படுகின்றன. பணியாளரை தேர்வு செய்யும்போது அவர்களது பணி பற்றி கலந்து ஆலோசிக்கவும், அவர்கள் பணியின் போது தவறு செய்ய நேர்ந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பது குறித்தும் தெளிவாக எடுத்து கூறப்படுகிறது.

    நேர்காணலுக்கு வந்தவர் என்ன சொல்ல விரும்புகிறாரோ, அதனை சுதந்திரமாக எடுத்து சொல்ல அனுமதிக்கப்படுகிறது. “நேர்காணல் என்பது காரண காரியத்துடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு செயல்” என்று ஸ்காட் என்பவர் கூறுகிறார். நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வந்தவர் எவ்வாறு பதில் அளிக்கிறார் என்று உற்று நோக்கப்படுகிறது. பணி நியமனத்துக்கு தயாராய் இருக்கும் பணியாளரிடம், அவரது கல்வி, அனுபவம், குடும்ப பின்னணி உள்பட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும் அவரது சுபாவம், தோற்றம், பேசும் திறன், இன்முகத்துடன் அடுத்தவரிடம் பழகும் விதம், அடுத்தவரிடம் தன்னை பற்றி ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்குதல் போன்றவை பற்றியும் மதிப்பீடு செய்வதற்கு நேர்காணல் உதவுகிறது.

    விண்ணப்பதாரர் யார்?, அவர் எப்படி இருக்கிறார்?, அவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்கூடாக காணவும் நேர்காணல் பயன்படுகிறது. விண்ணப்பதாரரால் முடியும் என்னும் நம்பிக்கையை பெறுவதற்கான ஒரு சிறந்த சாதனமாகவும் நேர்காணல் அமைகிறது. நேர்காணல் நம்பத்தகுந்ததாகவும், செல்லத்தக்கதாகவும் அமைய வேண்டும். வேறு விதங்களில் முறைப்படுத்துதல் அல்லது மறைத்தல் போன்றவை தவிர்க்கப்பட்டு உண்மையை மட்டும் தரக்கூடியதாக அமைய வேண்டும். விண்ணப்பதாரர்களை அவர்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்.

    பணியாளர் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டவுடன் அவர்களுக்கு உரிய பயிற்சியும், வளர்ச்சி வாய்ப்பும் தரப்பட வேண்டும். பல பணியாளர்கள் எவ்வித முன் அனுபவமும் இன்றி நேரடியாக தேர்வு செய்யப்படுவதால் அவர்கள் பணியின்போது திணறுகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு உரிய பயற்சி அவசியம். 
    நேர்காணல் சவால் நிறைந்தது. அதில் தவறாமல் இடம் பெறும் கேள்விகளில் தன்மதிப்பீட்டு வினாக்களுக்கு முக்கிய இடம் உண்டு. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    நேர்காணல் சவால் நிறைந்தது. அதில் தவறாமல் இடம் பெறும் கேள்விகளில் தன்மதிப்பீட்டு வினாக்களுக்கு முக்கிய இடம் உண்டு. இதில் நம்மைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு நமது குணநலன்கள், மேலாண்மை பண்புகளை மதிப்பிடுவார்கள். இதற்கு ‘செல்ப் அப்ரைசல் டெஸ்ட்’ என்று பெயர். சுய விளக்கத் தேர்வு என்றும் இதை அழைப்பதுண்டு. ஒரு போட்டியாளர் தன்னைப் பற்றி விரிவாக விளக்கமாக எழுதுவதற்கு அல்லது சொல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    இந்தத் தேர்வின்போது நமது குணங்கள், சிறப்புகள், குறைபாடுகள் ஆகியவற்றை பற்றி சுய விளக்கம் தரலாம். பல நேரங்களில் குறைபாடுகளை சோதித்து அறியும் வகையில் எதிர்மறையான கிடுக்கிப்பிடியான கேள்விகள் கேட்கப்படும். இது போட்டியாளரின் மனநிலையையும், அவரது குறை நிறைகளையும் எளிதில் அறிந்து கொள்ள உதவுகிறது.

    உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்கள் ஆசிரியர் உங்களைப் பற்றி என்ன நினைப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள், நீங்கள் என்னென்ன பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?, மோசமான சில சூழல்களைக் கூறி அதிலிருந்து விடுபட என்ன செய்வீர்கள்? என்பது போன்ற கேள்விகள் இதில் இடம் பெறலாம்.

    இத்தகைய கேள்விகளுக்கு குறித்த நேரத்தில், குறிப்பிட்ட அளவுக்கு மிகாமல் பதில் அளிக்க வேண்டும். யூ.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. தேர்வுகளில் இது போன்ற தேர்வுக்கு எழுத்து மூலம் விடையளிக்க வேண்டியிருக்கும். பல்வேறு நிறுவனங்களிலும இந்த கேள்விகள் வாய்மொழித் தேர்வாக கேட்கப்படுவது உண்டு். குழு விவாத தேர்விலும்கூட மேலாண்மைப் பண்பை வெளிக் கொண்டு வரும் விதமாக பொதுவான சூழல் விளக்க கேள்விகளில் உங்களை ஈடுபடுத்திக் கேட்பார்கள்.

    தன்விளக்க கேள்விகளுக்குப் பதிலளிக்க அதிகம் பயிற்சி தேவையில்லை என்றாலும், பதற்றமின்றி தன்னைப் பற்றி வெளிப்படுத்த தெளிவான மனநிலையும், சாதுர்யமாக பதிலளிக்கும் திறனும் அவசியமாகும். முந்தைய தேர்வு வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுவதைவிட வழக்கமான தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக் கொண்டவர்களால் இத்தகைய கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளிக்க முடியும். தன்னம்பிக்கையும், தகவல் தொடர்புத்திறனையும் வளர்த்துக் கொண்டால் தன் மதிப்பீட்டுத் தேர்வில் நீங்கள் எளிதாக ஜெயிக்கலாம்!
    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்கு வருகிற 25-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது. இயக்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் வருகிற 20-ந் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மாவட்டவாரியாக நேர்காணல் நடைபெறும் விவரம் வருமாறு:-

    வடக்கு மண்டலம்: 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை)- சென்னை (தெற்கு, வடக்கு, மத்திய), காஞ்சீபுரம், திருவள்ளூர். 26-ந் தேதி (சனிக்கிழமை)- திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம். மேற்கு மண்டலம்: 26-ந் தேதி (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர். 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி.

    கிழக்கு மண்டலம்: 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல். 28-ந் தேதி (திங்கட்கிழமை) புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம். தெற்கு மண்டலம்: 28-ந் தேதி (திங்கட்கிழமை) மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர். 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி. 30, 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஒருங்கிணைத்தல், சமர்ப்பித்தல் நடைபெறும்.

    அனைத்து உயர்நிலைக்குழு உறுப்பினர்களும் 25-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×