search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுபிக்‌ஷா"

    ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வினய் - தமன் குமார் - சுபிக்‌ஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நேத்ரா' படத்தின் விமர்சனம். #Nethra #NethraReview #Vinay #ThamanKumar #Subhiksha #Riythvika
    தமன் குமாரும், சுபிக்‌ஷாவும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், சுபிக்‌ஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த திருமணத்தில் விருப்பமில்லாததால், கனடாவில் இருக்கும் தனது நண்பர் வினய்யிடம் உதவி கேட்கிறார் சுபிக்‌ஷா.

    இதையடுத்து தமன் குமார், சுபிக்‌ஷாவை கனடாவுக்கு வரவைக்கும் வினய், வேறுஒரு வேலையாக வெளிநாடு செல்கிறார். இந்த நிலையில், கனடா வரும் இவர்களுக்கு அந்த நாட்டு போலீசார் உதவுகிறார்கள். பின்னர், இமான் அண்ணாச்சி வேலை பார்க்கும் ஹோட்டலில் தமன் குமாருக்கு வேலை கிடைக்கிறது.



    இந்த நிலையில், தமன் குமார் காணாமல் போகிறார். இதுகுறித்து சுபிக்‌ஷா, போலீசில் புகார் தெரிவிக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்க, தமன் குமார் என்ற ஒருவர் வரவேயில்லை என்றும், சுபிக்‌ஷா மட்டுமே வந்ததாகவும் அனைவரும் கூறுகின்றனர். இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க தொடங்குகிறார் வெங்கடேஷ். இதற்கிடையே வினய் கனடா திரும்புகிறார்.

    கடைசியில், தமன் குமாரை மாயமானதன் பின்னணி என்ன? அவர் என்னவானார்? அவரை யார் கடத்தினார்கள்? சுபிக்‌ஷா - தமன் குமார் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    தமன் குமார் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தில் சுபிக்‌ஷா தனது திறமையை நிரூபித்திருக்கிறார். காதல், நட்பு, போராட்டம் என சுபிக்‌ஷாவை சுற்றியே கதை நகர்கிறது. கதையின் ஓட்டத்திற்கு வினய் முக்கிய காரணியாகிறார். வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். 

    இமான் அண்ணாச்சி ஓரிரு இடங்களில் காமெடி செய்கிறார். ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் காமெடி ஓரளவுக்கு வேலை செய்கிறது. மற்றபடி வெங்கடேஷ், ரித்விகா, வின்சென்ட் அசோகன், ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.



    ஆள் தெரியாத ஒரு ஊரில் காதலனை இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ். படம் பெரும்பாலும் கனடாவிலேயே உருவாகி இருக்கிறது. படத்தின் முதல் பாதி வேகமாக நகர, இரண்டாவது பாதியின் நீளம் அதிகமாக இருப்பது படத்தின் மீது தொய்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையை கொஞ்சம் வலுப்படுத்தியிருக்கலாம்.

    என்.கணேஷ் குமாரின் படத்தொகுப்பு, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஏ.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவும் அருமை.

    மொத்தத்தில் `நேத்ரா' தெளிவில்லை. #Nethra #NethraReview #Vinay #ThamanKumar #Subhiksha #Riythvika #AVenkatesh 

    சீயோன் இயக்கத்தில் கருணாகரன் - சந்தோஷ் பிரதாப் - அருண் ஆதித் - அனுசித்தாரா, சுபிக்‌ஷா, லிசா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொது நலன் கருதி' படத்தின் விமர்சனம். #PodhuNalanKaruthi #PodhuNalanKaruthiReview #Karunakaran
    டாக்சி டிரைவராக இருக்கும் கருணாகரனின் அண்ணன் காணாமல் போகிறார். அவரைத் தேடிக்கொண்டே டாக்சி ஓட்டி வருகிறார் கருணாகரன். கந்துவட்டி கொடுக்கும் யோக் ஜேபி கும்பலிடம் அடியாளாக வேலை பார்ப்பவர் சந்தோஷ். மெக்கானிக்காக இருக்கும் அருண் ஆதித் தனது காதலி சுபிக்‌ஷாவுக்காக பைனான்ஸ் மூலம் வண்டி வாங்கி கொடுக்கிறார். 

    இந்த 3 பேரின் வாழ்க்கையும் கந்துவட்டியால் இணைகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? அவர்களின் வாழ்க்கைப் பாதை எப்படி மாறுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    அண்ணனை தேடுவது, காதலியிடம் கெஞ்சுவது, கந்துவட்டி கும்பலின் பின்னணி தெரிந்ததும் தப்பி ஓடுவது என்று கருணாகரன் சிறப்பாக நடித்திருக்கிறார். 

    மிரட்டி வசூல் செய்யும் அடியாள் வேடத்தில் சந்தோஷ். ஒரு கட்டத்தில் நிதர்சனம் புரிந்து அவர் சாந்தமாவது, இறுதிக்காட்சியில் வஞ்சத்தால் வீழ்த்தப்படுதல் என அவருக்கும் இது முக்கியமான படம். யோக் ஜேபி வில்லனாக மிரட்டி இருக்கிறார். அருண் ஆதித் சாதாரண இளைஞனாகவும், காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இமான் அண்ணாச்சி ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

    அனுசித்தாரா, சுபிக்‌ஷா, லிசா என 3 கதாநாயகிகள். மூவரில் சுபிக்‌ஷா கவனிக்க வைக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.



    கந்துவட்டி என்று சாதாரணமாக சொல்லிவிடக்கூடிய வி‌ஷயத்தின் பின்னணியில் இருக்கும் தாதா கும்பல், போலீஸ் பின்னணி, அரசியல் ஆதரவு அனைத்தையும் திரில்லர் கதையாக கூறி இருக்கிறார் அறிமுக இயக்குனர் சீயோன். அன்றாடம் நடக்கும் பகீர் சம்பவங்களை கதையில் கோர்த்த விதத்தில் நம்பிக்கை இயக்குனராக தெரிகிறார்.

    5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையையும் கந்து வட்டி கொடுமைகளையும் கந்துவட்டி கும்பல்களால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பற்றியும் பேசியதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள். எனினும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். கந்துவட்டி பற்றி அனைவரும் ரசிக்க விதத்தில் திகில் படமாக கொடுத்த விதத்தில் பொது நலன் கருதி தலைப்புக்கு நியாயம் செய்து இருக்கிறது.

    ஹரி கணேஷ் இசை, சுவாமிநாதன் ஒளிப்பதிவு இரண்டும் கச்சிதம். கிரைசின் படத்தொகுப்பில் சில காட்சிகளை கத்தரித்து இருக்கலாம்.

    மொத்தத்தில் `பொது நலன் கருதி' பார்க்க வேண்டும். #PodhuNalanKaruthi #PodhuNalanKaruthiReview #Karunakaran #SanthoshPrathap #ArunAdith #AnuSithara #Subhiksha #Leesa #Zion

    சுந்தர் பாலு இயக்கும் ‘கன்னித்தீவு’ படத்தில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி உள்ளிட்ட 4 நாயகிகள் மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து முதலையுடன் சண்டையிடும் காட்சி படமாக்கப்படுகிறது. #KanniTheevu #Varalakshmi
    த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு தயாரித்து இயக்கும் புதிய படம் ‘கன்னித்தீவு’. இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார்.

    இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளது. மிகப் பெரிய ஏரி ஒன்றில் சுமார் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்.



    முதலையுடன் நாயகிகள் மோதும் இந்த சண்டைக்காட்சியை ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். ஆரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்திற்கு சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

    சீயோன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் - கருணாகரன் - அனு சித்தாரா, சுபிக்‌ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `பொது நலன் கருதி' படத்தின் முன்னோட்டம். #PodhuNalanKaruthi #Karunakaran
    ஏ.வி.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.ஆர்.அன்புவேல்ராஜன் தயாரித்துள்ள படம் `பொது நலன் கருதி'.

    கருணாகரன், சந்தோஷ் பிரதாப், அனு சித்தாரா, சுபிக்‌ஷா, லீசா, அருண்ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, முத்துராம், சுப்பிரமணியபுரம் ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - ஹரிகணேஷ், படத்தொகுப்பு - கிரேசன், கலை இயக்குநர் - கோபிஆனந்த், சண்டைப்பயிற்சி - ஓம்பிரகாஷ், தயாரிப்பு - ஏ.வி.ஆர். புரொடக்‌ஷன்ஸ், தயாரிப்பாளர் - வி.ஆர்.அன்புவேல்ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சீயோன்.



    படம் பற்றி இயக்குநர் கூறும்போது,

    தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படமாக ‘பொது நலன் கருதி’ உருவாகி இருக்கிறது. 5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருப்பதாக கூறினார். 

    படம் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. #PodhuNalanKaruthi #Karunakaran #SanthoshPrathap

    பொது நலன் கருதி டிரைலர்:

    சுந்தர் பாலு இயக்கத்தில் உருவாகும் `கன்னித்தீவு' படத்தில் சமூக பிரச்சனைக்காக போராடும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். #KanniTheevu #Varalakshmi
    த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்ததாக ‘கன்னித்தீவு’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

    படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர், அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப்பெயரை படத்திற்கு வைத்தோம். மேலும் படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு தீவில் படம் பிடித்துள்ளோம்.



    வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ளவர்கள். உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் பகுதியையாவையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அந்த பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள்.

    அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்த பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாகுவதாக இயக்குநர் சுந்தர்பாலு கூறினார். #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

    ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்ததாக இயக்கும் `கன்னித்தீவு' படத்தில் 4 கதாநாயகிகள் ஒப்பந்தமாகி உள்ளனர். #KanniTheevu #Varalakshmi
    த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்தாக இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். ஆரோல் கரோலி இசையமைக்க, சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.



    கிருத்திகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுந்தர் பாலு இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. #KanniTheevu #Varalakshmi #AshnaZaveri #AishwaryaDutta #Subiksha

    ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டை நாய்’ படத்தின் டீசரை வெளியிடுவதற்காக விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். #VettaiNaai
    பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. வில்லனாக அசத்திய ஆர்.கே.சுரேஷ் ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

    தற்போது இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் ‘வேட்டை நாய்’ படத்தின் டீசரை ஜூலை 5ம் தேதி 3 பிரபலங்கள் வெளியிட இருப்பதாக அறிவித்து யார் என்று சஸ்பென்ஸ் வைத்திருந்தார்கள். தற்போது அவர்கள் யார் என்று வெளியிட்டிருக்கிறார்கள்.

    விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து இப்படத்தின் டீசரை நாளை மாலை 4.30 மணியளவில் வெளியிட இருக்கிறார்கள்.



    வேட்டை நாய் படத்தை எஸ்.ஜெய்சங்கர் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘மன்னாரு’ படத்தை இயக்கியுள்ளார். நாயகியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
    தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டை நாய்’ படத்தின் டீசரை 3 பிரபலமானவர்கள் வெளியிட இருக்கிறார்கள். #VettaiNaai
    பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. வில்லனாக அசத்திய ஆர்.கே.சுரேஷ் ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

    தற்போது இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் ‘வேட்டை நாய்’ படத்தின் டீசரை ஜூலை 5ம் தேதி 3 பிரபலங்கள் வெளியிட இருக்கிறார்கள். யார் அந்த பிரபலங்கள் என்று சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.


    வேட்டை நாய் படத்தை எஸ்.ஜெய்சங்கர் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘மன்னாரு’ படத்தை இயக்கியுள்ளார். நாயகியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ×