search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரித்விகா"

    ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வினய் - தமன் குமார் - சுபிக்‌ஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நேத்ரா' படத்தின் விமர்சனம். #Nethra #NethraReview #Vinay #ThamanKumar #Subhiksha #Riythvika
    தமன் குமாரும், சுபிக்‌ஷாவும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், சுபிக்‌ஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த திருமணத்தில் விருப்பமில்லாததால், கனடாவில் இருக்கும் தனது நண்பர் வினய்யிடம் உதவி கேட்கிறார் சுபிக்‌ஷா.

    இதையடுத்து தமன் குமார், சுபிக்‌ஷாவை கனடாவுக்கு வரவைக்கும் வினய், வேறுஒரு வேலையாக வெளிநாடு செல்கிறார். இந்த நிலையில், கனடா வரும் இவர்களுக்கு அந்த நாட்டு போலீசார் உதவுகிறார்கள். பின்னர், இமான் அண்ணாச்சி வேலை பார்க்கும் ஹோட்டலில் தமன் குமாருக்கு வேலை கிடைக்கிறது.



    இந்த நிலையில், தமன் குமார் காணாமல் போகிறார். இதுகுறித்து சுபிக்‌ஷா, போலீசில் புகார் தெரிவிக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்க, தமன் குமார் என்ற ஒருவர் வரவேயில்லை என்றும், சுபிக்‌ஷா மட்டுமே வந்ததாகவும் அனைவரும் கூறுகின்றனர். இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க தொடங்குகிறார் வெங்கடேஷ். இதற்கிடையே வினய் கனடா திரும்புகிறார்.

    கடைசியில், தமன் குமாரை மாயமானதன் பின்னணி என்ன? அவர் என்னவானார்? அவரை யார் கடத்தினார்கள்? சுபிக்‌ஷா - தமன் குமார் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    தமன் குமார் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தில் சுபிக்‌ஷா தனது திறமையை நிரூபித்திருக்கிறார். காதல், நட்பு, போராட்டம் என சுபிக்‌ஷாவை சுற்றியே கதை நகர்கிறது. கதையின் ஓட்டத்திற்கு வினய் முக்கிய காரணியாகிறார். வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். 

    இமான் அண்ணாச்சி ஓரிரு இடங்களில் காமெடி செய்கிறார். ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் காமெடி ஓரளவுக்கு வேலை செய்கிறது. மற்றபடி வெங்கடேஷ், ரித்விகா, வின்சென்ட் அசோகன், ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.



    ஆள் தெரியாத ஒரு ஊரில் காதலனை இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ். படம் பெரும்பாலும் கனடாவிலேயே உருவாகி இருக்கிறது. படத்தின் முதல் பாதி வேகமாக நகர, இரண்டாவது பாதியின் நீளம் அதிகமாக இருப்பது படத்தின் மீது தொய்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையை கொஞ்சம் வலுப்படுத்தியிருக்கலாம்.

    என்.கணேஷ் குமாரின் படத்தொகுப்பு, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஏ.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவும் அருமை.

    மொத்தத்தில் `நேத்ரா' தெளிவில்லை. #Nethra #NethraReview #Vinay #ThamanKumar #Subhiksha #Riythvika #AVenkatesh 

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்று பிரபலமான ரித்விகா, காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். #Riythvika #RiythvikaMarriage
    இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன வேடங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதன் மூலம் பிரபலம் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல உள்ளன. தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

    இந்த நிலையில் ரித்விகா தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்கிற தகவலை ஒரு பட விழாவில் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் அவருக்கும் எனக்கும், திருமணம் நடக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி இருக்கிறது. நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை.



    என் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும். அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்து விடுவேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன். புதிய படங்கள் ஏதும் ஒப்பந்தமாகவில்லை. திருமணத்திற்கு பின் நடிப்பதா வேண்டாமா என்பதை என் கணவர் தான் முடிவு செய்வார்.” என்று கூறியிருக்கிறார்.

    ரசிகர்களில் பலர் இவரின் முடிவை பாராட்டி வாழ்த்துக்கள் கூறி வந்தாலும். சிலர் இவர் நடிப்புக்கு முழுக்கு போடுவது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளனர். #Riythvika #RiythvikaMarriage 

    அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் - அனேகா, ரித்விகா நடிப்பில் உருவாகும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. #Irandamulagaporinkadaisi_GUNDU #Gundu #Dinesh
    நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இந்த படத்தை இயக்குகிறார்.

    அட்டத்தி தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கயல் ஆனந்தி ஒப்பந்தமாகியிருக்கிறார். அனேகா, ரித்விகா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.



    படம் பற்றி அதியன் ஆதிரை கூறும்போது,

    ‘‘கதைப்படி, கதாநாயகன் தினேஷ், லாரி டிரைவர். அவர் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. படம், உலக அரசியல் பேசும். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, தென்மா இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.’’ என்றார். #Irandamulagaporinkadaisi_GUNDU #Gundu #Dinesh #KayalAnandhi

    ஜெகதீசன் சுபு இயக்கத்தில் கதிர் - ராஜ் பரத் - மீரா நாயர் - ரித்விகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிகை' படத்தின் விமர்சனம். #SigaiReview #Kathir
    ராஜ்பரத் பாலியல் தொழிலாளிகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் தொழில் செய்பவர். அவர் அனுப்புகிற மீரா நாயர் காணாமல் போகிறார். அவர் சென்ற இடத்திற்கு நேரில் சென்று பார்க்கும் ராஜ் பரத் அதிர்ச்சிக்குள்ளாகிறார். மீராவை யாருக்காக அனுப்பி வைத்தாரோ அவர் செத்து கிடக்கிறார். அருகில் திருநங்கையான கதிர் அழுது கொண்டிருக்கிறார்.

    கடைசியில் கதிருக்கும், இறந்தவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எப்படி இறந்தார்? மீரா நாயர் எங்கே போனார்? அவரைத் தேடி அலையும் திக் திக் நிமிடங்களே படத்தின் மீதிக்கதை.



    கதையில் முக்கிய திருப்பம் தரும் வேடத்தில் வருகிறார் கதிர். அவரது பாசம், ஏக்கம், பேச்சு என திருநங்கையின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு காட்சியில் அவரது நடையில் இருக்கும் நளினம் ஒன்றே போதும். கதாபாத்திரத்தை தாங்கி நடித்திருக்கும் கதிருக்கு பாராட்டுக்கள். துணிச்சலான வேடத்தை அனாயசமாக செய்து கைதட்டல் பெறுகிறார்.

    யாரும் செய்ய தயங்கும் வேடத்தில் ராஜ் பரத். செய்யும் தொழிலை நினைத்து விரக்தி அடையும்போதும் மீராவை தேடும்போதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தை தாங்குகிறார். தங்கையை காப்பாற்ற பாலியல் தொழிலுக்கு செல்லும் மீரா நாயரின் முடிவு பரிதாபம். ரித்விகாவுக்கு முக்கிய வேடம். பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணாக வரும் காட்சியில் இயல்பாக நடித்துள்ளார். மயில்சாமி, ராஜேஷ் சர்மா, மல் முருகா என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள்.



    ஆரண்ய காண்டம், மேற்கு தொடர்ச்சி மலை என்று தமிழில் உலக திரைப்படங்களுக்கு நிகரான படங்கள் உருவாகின்றன. அந்த வரிசையில் இடம்பெறக்கூடிய ஒரு கல்ட் திரில்லர் படமே சிகை. முதல் படத்திலேயே எளிமையான ஒரு கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சிறந்த திரைப்படமாக்கி கொடுத்து இருக்கும் ஜெகதீசன் சுபுவுக்கு பாராட்டுகள்.

    படத்தின் டைட்டிலில் வரும் சென்னையின் இரவுக் காட்சிகளே இவர்களது கூட்டணியின் உழைப்பை பறைசாற்றுகிறது. இறுதிக்காட்சி வரை அது தொடர்ந்து நம்மை படத்தோடு கட்டிப்போடுகிறது.



    படம் முடிந்த பின்னர் பாலியல் தொழில் செய்பவர்கள் மீது சின்ன இரக்கமாவது நிச்சயம் ஏற்படும். மனிதாபிமானத்தை தூக்கி நிறுத்திய வகையில் சிகை அனைவரும் கொண்டாடி ஏற்றுக்கொள்ள வேண்டிய படைப்பு. இதுபோன்ற நல்ல படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் போவது என்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும். படம் நாளை இணையத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

    நவின் குமாரின் ஒளிப்பதிவும், ரான் யோகனின் இசையும், அனுசரணின் படத்தொகுப்பும் படத்திற்கு கூடுதல் பலம்.

    மொத்தத்தில் `சிகை' தேவையானது. #SigaiReview #Sigai #Kathir #RajBharath #MeeraNair #Riythvika

    அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் - அனேகா, ரித்விகா நடிப்பில் உருவாகும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. #Irandamulagaporinkadaisi_GUNDU #Gundu #Dinesh
    `பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரிக்கும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. கிளாப் அடித்து பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். அப்போது `பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரி செல்வராஜும் உடனிருந்தார்.

    மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இந்த படத்தை இயக்குகிறார்.

    அட்டத்தி தினேஷ் நாயகனாகவும், அனேகா, ரித்விகா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.



    இசையமைப்பாளராக தென்மா அறிமுகமாகிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். தா.ராமலிங்கம் கலை பணிகளை கவனிக்க, உமாதேவி, அறிவு, தனிக்கொடி, தங்கவேலு ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். #Irandamulagaporinkadaisi_GUNDU #Gundu #Dinesh

    நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படத்திற்கு `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். #Gundu #Dinesh
    `பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

    `இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அட்டத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக அனேகா, ரித்விகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார்.


    இசையமைப்பாளராக தென்மா அறிமுகமாகிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். தா.ராமலிங்கம் கலை பணிகளை கவனிக்க, உமாதேவி, அறிவு, தனிக்கொடி, தங்கவேலு ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். #Irandamulagaporinkadaisi_GUNDU #Gundu #Dinesh

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வெற்றி பெற்ற ரித்விகா, தன்னை ஆதரித்த அனைவருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #BiggBossTamil2 #Riythvika
    தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் முடிந்தது.

    இதில், ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் அனைத்து எவிக்சன்களையும் கடந்து இறுதிசுற்றுக்கு முன்னேறினர். ஜனனிக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து விஜயலட்சுமியும் போட்டியில் இருந்து வெளியேற ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் இறுதி சுற்றில் மோதினார்கள். 

    பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா தட்டிச்சென்றார். இந்த நிலையில் ஒருவார இடைவேளைக்கு பிறகு ரித்விகா, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,

    எல்லாருக்கும் வணக்கம். நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது, நிறைய பேர் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணிருக்கீங்க. நான் வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது. ரித்விகா பேன்ஸ், ரித்விகா ஆர்மி என நிறைய கணக்குகளை தொடங்கி எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கிறீர்கள். இந்த ஒரு வாரம் நான் நேரம் எடுத்துக் கொண்டேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. அதனால் தான் இந்த வீடியோவை தாமதமாக வெளியிடுகிறேன். 
    விரைவில் சமூக வலைதளங்களில் உங்களை நேரலையில் கலந்துரையாடுகிறேன். அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து எனக்கு ஆதரவளியுங்கள்.

    இவ்வாறு ரித்விகா கூறினார். #BiggBossTamil2 #Riythvika

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 கடந்த ஜூன் 17 -ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கிய நிலையில், இன்று நடைபெற்ற இறுதி சுற்றில் பிக் பாஸ் டைட்டிலை வென்றார் ரித்விகா. #BiggBoss2 #Riythvika #KamalHaasan
    சென்னை:

    தொடர்பு வசதிகள் இல்லாத வீடு. பிரபலங்கள் சிலர் சில மாதங்கள் தங்க வேண்டும். அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். கண்காணிக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளில் சுவாரஸ்யம்(?) தருபவை மக்களுக்குக் காட்டப்படும். `பிக் பிரதர்' என்று சர்வதேச அளவிலும், `பிக் பாஸ்' என இந்தியாவிலும் ஒளிபரப்பாகிற இந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் கான்சப்ட் இது.

    தமிழகத்துக்கு முதல் முறையாகக் கடந்த ஆண்டு வந்தது, இந்த நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2வது சீசன் தொடங்கப்பட்டு சென்ட்றாயன் வெளியேற்றம், ஐஸ்வர்யா எவிக்‌ஷனுக்கு வராதது, மகத் அட்டகாசம் என பல சர்ச்சைகளுக்கு இடையே இன்று நிறைவடைந்துள்ளது.



    ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தொடக்க போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

    பல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆரம்பமானது எவிக்‌ஷன் புராசஸ். ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கிய நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இடைப்போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார் விஜயலட்சுமி.

    ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் அனைத்து எவிக்சன்களையும் கடந்து இறுதிசுற்றுக்கு முன்னேறினர். ஜனனிக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து விஜயலட்சுமியும் போட்டியில் இருந்து வெளியேற ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் இறுதி சுற்றில் மோதினார்கள்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா தட்டிச்சென்றார், ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பிடித்தார். போட்டியில் வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு வெற்றிக்கோப்பையும்,  பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

    வாழ்த்துக்கள் ரித்விகா. #BiggBoss2 #Riythvika #KamalHaasan

    அப்துல் மஜித் இயக்கத்தில் சதா - ரித்விகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `டார்ச் லைட்' படத்தின் விமர்சனம். #TorchLightReview #Sadha
    ரித்விகாவுடன் இணைந்து நெடுஞ்சாலையில் விபச்சார தொழில் செய்து வருகிறார் நடிகை சதா. ஒருநாள் பேருந்தில் செல்லும் போது தன்னை உரசும் ஒருவருக்கு சதாவை தக்க பதிலடி கொடுக்கிறார். இதையடுத்து தைரியமாக செயல்படட்ட சதா மீது அவருக்கு காதல் வந்துவிடுகிறது. இதையடுத்து அவளை திருமணம் செய்ய முடிவு செய்து, சதாவிடம் தனது காதலையும் வெளிப்படுத்துகிறார். ஆனால், சதா அவரது காதலை ஏற்க மறுக்கிறார். 

    இதற்கிடையே சதா விபச்சாரத்தில் ஈடுபடுவது, அவருக்கு தெரிய வருகிறது. இருப்பினும் விபச்சார தொழிலை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர் வற்புறுத்த, தனக்கு திருமணம் ஆன உண்மையை சதா அவரிடம் தெரிவிக்கிறாள். தான் ஒரு நல்ல குடும்பத்து பெண் என்றும், தனக்கு திருமணம் ஆனதையும், திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் முதலாளி தன்னை அடைய நினைத்ததையும், அவருடன் தனது கணவர் சண்டை போட்டதையும் விவரிக்கிறாள். 

    இந்த நிலையில், ஒருநாள் தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட, அவரை காப்பாற்ற தனது தோழி ரித்விகாவின் உதவியுடன் தான் விபச்சார தொழிலுக்கு வந்ததாகவும் கூறுகிறாள்.



    மறுபுறம் உடல்நலம் பெற்று திரும்புகிறார் சதாவின் கணவர். இந்த நிலையில், தன்னை காப்பாற்ற சதா விபச்சார தொழிலில் ஈடுபட்டது அவருக்கு தெரிய வருகிறது. இதனால் மனவேதனைக்குள்ளாகும் அவர் சதாவை விட்டுபிரிய முடிவு செய்கிறார். 

    கடைசியில் தனது கணவரை காப்பாற்ற தன்னையே அர்பணித்த சதாவின் வாழ்க்கை என்ன ஆனது? சதாவின் கணவர் அவளை ஒதுக்கிவிட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க வந்திருக்கும் சதா, முற்றிலும் வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். நெடுஞ்சாலைகளில் விபச்சார தொழிலில் ஈடுபடும் கதாபாத்திரத்தில் சதா, ரித்விகா என இருவரது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே கதையின் போக்குக்கு ஏற்ப படத்தோடு ஒன்றி நடித்திருக்கின்றனர்.



    வேறு வழியில்லாமல் விபச்சார தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள், அவர்களது வாழ்க்கையின் மறுபக்கம், அந்த வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் என அவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படும்யடியாக உண்மை கதையை மையப்படுத்தி படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அப்துல் மஜித். படத்தில் வசனங்கள் அவர்களது வாழ்க்கையின் வலிகளை பிரதிபலிப்பதாக உள்ளன. படத்தில் தனது கணவனை காப்பாற்ற மனைவி தவறான வழியில் செல்கிறாள் என்பதை அறியும் கணவன் மற்றும் கணவன் முன்னாலேயே மனைவியை பலர் வர்ணிப்பது போல காட்சிகள் நெருடலாக உள்ளது. 

    கணவன் முன்பே மனைவியை மற்றவர்கள் வர்ணித்து பேசுவது அந்த கணவனுக்கு, இறப்பை விட பெரிய வலியை கொடுக்கும் என்பதை படமாக இயக்கியிருக்கிறார். படத்தின் முடிவு ஏற்கும்படியாக இல்லை.

    ஜே.வி.யின் பின்னணி இசை படத்திற்கு பலம் தான். சக்திவேலின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவு திருப்தியாக வந்துள்ளது. 

    மொத்தத்தில் `டார்ச் லைட்' தூக்கிப்பிடிக்கப்பட வேண்டும். #TorchLightReview #Sadha #Riythvika

    மஜீத் இயக்கத்தில் சதா - ரித்விகா நடிப்பில் உருவாகி இருக்கும் `டார்ச் லைட்' படத்திற்கு போராடி சென்சார் சான்றிதழ் பெற்றதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #TorchLight #Sadha
    விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் `டார்ச் லைட்'. சதா, ரித்விகா, புதுமுகம் உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படம் பற்றி இயக்குநர் மஜீத் பேசும்போது, 

    " இது ஒரு பீரியட் படம். 90-களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள்  பற்றிய கதை. இந்தப் படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கினார்கள்.  ஆனால் நடிகை சதா தைரியமாக நடிக்கச் சம்மதித்தார். வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். 



    இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி, பதிவு செய்து படமாக்கினேன். படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினேன். ஆனால் இங்கு படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தார்கள். போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல் மும்பை சென்று `ஏ' சான்றிதழ் பெற்றுள்ளேன். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளேன். படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும். " என்றார்.

    சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேவி இசையமைத்திருக்கிறார். படம் விரைவில் திரைக்க வர இருக்கிறது. #TorchLight #Sadha

    ×