search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் தயாரிக்க வேண்டும்.
    • ஓட்டல்களில் வெளியே சமையல் செய்ய கூடாது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள சில ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் திறந்த வெளிகளில் உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து மாநக ராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் ஓட்டல் உரிமையாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். திறந்த வெளி களில் உணவுப் பொருட்கள் தயாரிக்க கூடாது. சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் தயாரிக்க வேண்டும்.

    ஓட்டல்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்பது உட்பட 12 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு இதை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தவும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதற்காக அவர்களுக்கு 21 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டது.

    இந்தக் கெடு முடிந்த நிலையில் இன்று மாநகர பகுதியில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். வடசேரி பஸ் நிலையத்தில் சுகாதார ஆய்வாளர்கள் ஜான், ராஜேஷ் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது திறந்த வெளிகளில் புரோட்டா, தோசை தயாரிக்கும் கற்கள் போடப்பட்டு உணவு பொருட்கள் தயார் செய்து வந்தது தெரியவந்தது.

    மேலும் அடுப்புகள் வெளியே அமைத்து உணவு பண்டங்கள் தயார் செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து அந்த கடைகளில் இருந்த பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 4 கடைகளில் இருந்து புரோட்டா கற்கள் மற்றும் அடுப்பு போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு தலா ரூ‌.ஆயிரம் அபராதமும் விதிக்க ப்பட்டது. 4 கடைகளுக்கும் ரூ‌.4ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனை நாகர்கோவில் மாநகரம் முழுவதும் தொடர்ந்து நடை பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மேயர் மகேஷ் கூறுகையில், ஓட்டல் உரிமையாளர்களை அழைத்து ஏற்கனவே பேசி இருந்தோம். அவர்களுக்கு 21 நாட்கள் காலக்கடு விதிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இனிவரும் காலங்களில் ஓட்டல்களில் வெளியே சமையல் செய்ய கூடாது. தரமான வகையில் பொது மக்களுக்கு உணவு பொருட்களை வழங்க வேண்டும். இல்லாத ஹோட்டல் உரிமையாளர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளோம் என்றார்.

    • கோவை நகரில் பல இடங்களில் கேமராக்கள் இல்லை.
    • போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    கோவை :

    கோவை நகரில் அவினாசி ரோடு மேம்பால பணிகள் நடைபெறுவதால் பல இடங்களில் கேமராக்கள் இல்லை. ஆனால் சிக்னலில் நிற்கும் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்களை நோட்டமிட்டு அவர்கள் செல்போன்களில் வாகனங்களின் பதிவு எண்ணை பதிவு செய்து அபராதம் விதிக்கிறார்கள்.

    இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு தெரியாமலே பின்பகுதியில் இருந்து போக்குவரத்து போலீசார் செல்போனில் எடுக்கிறார்கள்.

    இந்த நிலையில் கோவை அண்ணா சிலை சிக்னல் அருகே நேற்று தனியார் நிறுவனர் ஊழியர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். பின் இருக்கையில் யாரும் இல்லை. ஆனால் இரவில் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். டி.என்.99 யு 5829 என்ற இருசக்கர வாகனத்தில் சென்றவரும், பின்னால் உட்கார்ந்தவரும் ஹெல்மெட் அணியவில்லை என்றும் தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

    அவரது இருசக்கர வாகனத்தின் அருகில் சென்றவர்கள்தான் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர். ஒரே போட்டோவில் 2 இருசக்கர வாகனங்கள் பதிவாகி உள்ளது. தவறு செய்தவருக்கு விதிக்க வேண்டிய அபராதத்தை, போக்குவரத்து போலீசாரின் குளறுபடியால் ஹெல்மெட் அணிந்து சென்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணனிடம் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை கமிஷனர் உறுதி அளித்தார்.

    இதுபோன்ற குளறுபடிகள் நகரின் பல இடங்களிலும் நடைபெறுகிறது. மறைந்து நின்றுகொண்டு அபராதம் விதிப்பது போன்ற போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் காணப்படுகிறது. அங்கு போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்லை. திடீர், திடீரென்று காணாமல் போய்விடுகிறார்கள்.

    இதனால் தனியார் பஸ் டிரைவர்கள் வாகனங்களை நீண்டநேரமாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஒழுங்குபடுத்தி சரியானமுறையில் செயல்படவைப்பதுடன், தவறு செய்யும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

    • 29 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு.
    • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    அரவேணு

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவி ன்படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் கோத்தகிரியில் உள்ள கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை மேற்கொ ண்டனர்.

    மார்க்கெட் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர். சில வியாபாரிகள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரி யவந்தது. இதுதொடர்பாக வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. அரவேணு பஜாரில் தாசில்தார் காயத்ரி தலைமையில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அங்கு 29 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

    கோத்தகிரியில் 4½ கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் அல்லது கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பைகள், கவர்கள், டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்தார். 

    • மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை
    • மீன்கள் மீது ஐஸ்கட்டி மட்டும் போட்டு வைத்திருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரில் சுகாதாரத்தை பேண மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    நாகர்கோவில் டதி பள்ளி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தர மற்ற மீன்கள் சப்ளை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதைய டுத்து ஆணையாளர் ஆனந்த மோகன் அந்த உணவகத்தில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி நகர் நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஜான்,ராஜேஷ் ஆகியோர் குறிப்பிட்ட உணவகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் தரமற்ற மீன்கள் உணவ கத்தில் இருந்தது தெரிய வந்தது. அங்கு மீன்களை பதப்படுத்த எந்த ஒரு வசதியும் இல்லாதது சோதனையில் கண்டறியப்பட்டது.

    மீன்கள் மீது ஐஸ்கட்டி மட்டும் போட்டு வைத்திருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.உணவகத்தில் இருந்த 500 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    • திரைப்படம் பாா்ப்பதற்காக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்திருந்தாா்.
    • மது அருந்தியதாகக் கூறி மனைவி, மகளை திரையரங்குக்குள் செல்ல விடாமல் ஊழியா்கள் திருப்பி அனுப்பியுள்ளனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள மகாலட்சுமி அபாா்ட்மெண்டில் வசித்து வருபவா் செல்வநாயகம். இவா் திருப்பூா் காட்டன் மில் சாலையில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பாா்ப்பதற்காக ஆன்லைன் மூலமாக ரூ.289.20 செலுத்தி 2019 ம் ஆண்டு நவம்பா் மாதம் முன்பதிவு செய்திருந்தாா்.

    அதன் பின்னா் தனது மனைவி, மகளுடன் திரையரங்குக்குச் சென்றபோது, அவா் மது அருந்தியதாகக் கூறி அவரது மனைவி, மகளை திரையரங்குக்குள் செல்ல விடாமல் ஊழியா்கள் திருப்பி அனுப்பியுள்ளனா்.மேலும், டிக்கெட் தொகைக்கு உண்டான தொகையையும் அவருக்கு வழங்கவில்லை.இது குறித்து திருப்பூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் செல்வநாயகம் வழக்குத் தொடுத்திருந்தாா்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திரையரங்க உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது.மேலும் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் மற்றும் டிக்கெட் தொகையான ரூ.289.20 ஆகியவற்றை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி தீபா, உறுப்பினா்கள் பாஸ்கா், ராஜேந்திரன் ஆகியோா் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராங் ரூட்டில் வாகனம் ஓட்டுவதினால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவது தெரியவந்து உள்ளது.
    • ராங் ரூட்டில் வாகனங்கள் செல்வதினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் போக்குவரத்து பிரிவுக்கு தெரியவந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு இ-செலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோரிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

    அண்மையில் கியூஆர் கோடு முறையில் அபராதம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த முடியாமல் இருந்த காவல்துறை இப்போது தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

    முக்கியமாக மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், கைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல் உள்ளிட்ட 8 போக்குவரத்து விதிமுறைகளை மீறு பவர்கள் மீது அதிக அளவில் வழக்கு பதியப்படுகிறது.

    இதன் அடுத்த கட்டமாக 'ராங் ரூட்டில் வாகனம் ஓட்டுவதினால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவது தெரியவந்து உள்ளது. அதேவேளையில் ராங் ரூட்டில் வாகனங்கள் செல்வதினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் போக்குவரத்து பிரிவுக்கு தெரியவந்துள்ளது.

    ஆனால் ராங்ரூட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.100 மட்டும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த தொகையை எளிதாக செலுத்துவதாக கருதப்பட்டது.

    இதையடுத்து மோட்டார் வாகன சட்டம் புதிய திருத்தத்தின்படி ராங் ரூட்டில் பயணிப்பவர்களுக்கு ரூ.1,100 அபராதம் விதிக்க சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இந்த முடிவின்படி திங்கட்கிழமை முதல் ராங் ரூட்டில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,100 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் திங்கட்கிழமை மட்டும் 1,300 வாகன ஓட்டிகளுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

    சாலை விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என சென்னை காவல் துறையின் போக்குவரத்து பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.11.51 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
    • மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது.

    மதுரை

    மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட மேலக்கரந்தை, முத்துலாபுரம், தூத்துக்குடி டவுன், திருச்செந்தூர், குரும்பூர், கோவில்பட்டி, நாகலாபுரம், புதூர், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், மணப்பாடு ஆகிய பகுதிகளில் 18 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்து 30 அபராதம் வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொ ண்டு, ரூ.71 ஆயிரம் அபராதம் செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.11 லட்சத்து 51 ஆயிரத்து 30 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • கடைக்காரர் சரி செய்து கொடுக்காததால் மன உளைச்சல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெயசேகர்.

    இவர் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள ஒரு கடையில் கியாஸ் அடுப்பு வாங்கியுள்ளார். ஆனால் அதை சரியாக அமைக்காததால் கியாஸ் அடுப்பில் கரையான் ஏற்பட்டுள்ளது. எனவே இதை சரிசெய்து தரும்படி கடைக்காரரை அணுகியுள்ளார்.

    கடைக்காரர் சரி செய்து கொடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயசேகர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

    இந்த நிலையில் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அதை ஜெயசேகருக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 மற்றும் அபராத தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் கூறினர்.

    • உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
    • 14 அசைவ உணவகங்கள், 9 பேக்கரிகள், 21 தள்ளுவண்டிகளில் ஆய்வு நடத்தினா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.இதில் அவிநாசி சாலை, ஆஷா் நகா், தாராபுரம் சாலை, பி.என்.சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 14 அசைவ உணவகங்கள், 9 பேக்கரிகள், 21 தள்ளுவண்டிகளில் ஆய்வு நடத்தினா்.

    இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய 3 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.மேலும் கெட்டுப்போன கோழி இறைச்சி 4 கிலோ, சாயமேற்றப்பட்ட கோழி இறைச்சி 3 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.மேலும், சுகாதாரமின்றி செயல்பட்ட 4 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • போக்குவரத்து மாற்றி விடப்பட்டதையடுத்து செட்டிகுளம், வேப்பமூடு, வடசேரி பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது
    • ஒரு வழி பாதையில் வந்த 50 ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி தலா ரூ.600 அபராதம் விதித்தனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் பிரதான சாலையாக கருதப் படும் வேப்பமூடு-டதி பள்ளி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரு கிறது.

    இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றி விடப்பட்டதையடுத்து செட்டிகுளம், வேப்பமூடு, வடசேரி பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்க போக்குவரத்து போலீ சார் பல்வேறு அதிரடி நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் வாகன ஓட்டிகள் மீனாட்சிபுரம் சாலை, வேப்பமூடு பகுதி களில் ஒரு வழிச்சாலையில் அத்துமீறி சென்று வரு கிறார்கள். ஒரு வழி பாதை யில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

    போக்குவரத்து இன்ஸ் பெக்டர் அருண் தலைமை யிலான போலீசார் வேப்பமூடு, மணிமேடை, செட்டிகுளம் சந்திப்பு, கோட்டார் பகுதி களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு வழி பாதையில் வந்த 50 ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி தலா ரூ.600 அபரா தம் விதித்தனர். இன்று காலையில் அபராதம் விதிக் கும் பணியில் போக்கு வரத்து போலீசார் ஈடுபட்ட னர்.

    வேப்பமூடு பகுதியில் நடந்த சோதனையின் போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேர்கள் வந்தவர்களும் சிக்கினார்கள். மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்கள் பலரும் இந்த சோதனையில் சிக்கி தவித்தனர். அவர்க ளுக்கும் அபராதம் விதிக்கப் பட்டது. இதே போல் மாவட்டம் முழுவதும் சாலை விதிகளை கடைபிடிக்காத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பச்சைவா ழியம்மன் கோவில்அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
    • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    விழுப்புரம்:

    உத்தரபிரதேசத்தில் ஐ.ஜி.,யாக உள்ளவரின் 18வயதுமகன்விழுப்புரம் மாவட்டம்கோட்டக்கு ப்பத்தில்இருந்து, பெரிய முதலியார் சாவடியை நோக்கி ஸ்கூட்டி யில் வந்தார். அப்போது, கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், பச்சைவா ழியம்மன் கோவில்அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். உடனே அந்த சிறுவன் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்லை என கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் நான் எனது அப்பா ஐ.ஜி., என கூறியுள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டர் ராபின்சன்யாராக இரு ந்தால் என்ன எனக் கூறி மொபைல் போனில் பேசியதாகவும், ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டியை ஓட்டியதாகவும், 2 வழக்கு கள் பதிந்து 200 ரூபாய் அபராதம் விதித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இ ன்ஸ்பெக்டரிடம் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்று ள்ளது.

    • ரெயில் நிலையங்களிலும் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • இதில் எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகள் ரெயில்களில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    சேலம்:

    ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகள் ரெயில்களில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கடந்த ஜூலை மாதத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள், அதிக பார்சல் கொண்டு வந்தவர்கள் உள்பட 18 ஆயிரத்து 860 பேர் சிக்கினர். இவர்கள் மீது ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.1.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

    ×