search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிநயா"

    பார்த்திபன் - சீதாவின் மூத்த மகளான அபிநயாவுக்கும், எம்.ஆர்.ராதாவின் மகள் வழி கொள்ளு பேரனான நரேஷ் கார்த்திக்குக்கும் வருகிற மார்ச்சில் திருமணம் நடைபெற இருக்கிறது. #Parthiban #Seetha #Abhinaya #NareshKarthik
    நடிகர் பார்த்திபனும், நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்கும் அபிநயா, கீர்த்தனா என 2 மகள்களும் ராக்கி என்ற மகனும் உள்ளார்கள். பார்த்திபனும், சீதாவும் விவாகரத்து பெற்று தனியாக வசிக்கின்றனர்.

    பார்த்திபன் - சீதா தம்பதியின் இரண்டாவது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இதுபற்றி சீதா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    கடந்த ஆண்டு என் இரண்டாவது மகள் கீர்த்தனாவின் திருமணம் நடந்தது. பிறகு என் மூத்த மகள் அபிநயாவுக்கு தீவிரமாக வரன் தேடினோம். மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக் சென்னையில் தொழிலதிபராக இருக்கிறார். அவர் நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். அதாவது நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன். மாப்பிள்ளை வீட்டார் எங்களுக்கு தூரத்து சொந்தம்.



    கடந்த ஜனவரி மாதம் சோழா ஓட்டலில் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது. அதில் 2 குடும்பங்களை சேர்ந்த முக்கிய விருந்தினர்களை மட்டும்தான் அழைத்து இருந்தோம். அடுத்த மாதம் மார்ச் 24-ந் தேதி, சென்னையில் கல்யாணம் நடக்க இருக்கிறது. மகள் என்னை விட்டு தூரமாக போய்விடக் கூடாது என்றுதான் வெளிநாட்டு வரன்களை தவிர்த்தேன்.

    இப்போது சென்னையிலேயே வரன் அமைந்ததில் எனக்கும் மகளுக்கும் ரொம்ப சந்தோ‌ஷம். சினிமா வட்டாரத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்’.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Parthiban #Seetha #Abhinaya #NareshKarthik

    நாடோடிகள், ஈசன் படங்களில் நாயகியாக நடித்த நடிகை அபிநயா, தற்போது தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். #Abhinaya #Election
    நாடோடிகள், ஈசன் படங்களில் நாயகியாக நடித்தவர் அபிநயா. பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான இவரின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது.

    தெலுங்கானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, அம்மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இதற்கான விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    இதுகுறித்து அபிநயா கூறும்போது ‘தங்கள் உடல்நலப் பாதிப்புகளால், மாற்றுத்திறனாளிகள் பலரும் தேர்தலில் பெரும்பாலும் வாக்களிக்க வரமாட்டார்கள்.

    இந்தநிலையை மாற்ற, தெலுங்கானா மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நிறைய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்காக, என்னை தூதராக நியமிச்சிருக்காங்க.

    பல பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று, மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்கணும்; தங்கள் உரிமையைப் பயன்படுத்திக்கணும்னு வலியுறுத்துறேன். இதனால் நிறைய மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிப்பாங்கனு நம்புறேன். தவிர, கல்வி மற்றும் மருத்துவத்துறையிலயும் இப்போ விழிப்புணர்வு கொடுக்கிறேன். ஆனால் நடிப்புதான், என்னோட பிரதான செயல்பாடு. சினிமாவில் நடிக்கிறதால ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன்.

    குதிரைப் பயிற்சிக்கும் போறேன். எனக்கிருக்கும் பேச்சுத்திறன் பிரச்சினையால், ஆரம்பத்தில் டயலாக்கை உள்வாங்கி நடிக்க ரொம்ப சிரமப்படுவேன். நிறைய பயிற்சி எடுத்து, இப்போ சிரமமின்றி நடிக்கிறேன்.

    என் டயலாக் ஸ்கிரிப்டை படிச்சும், டைரக்டர் நடிச்சுக்காட்டுறதைப் பார்த்தும் நடிச்சுடுறேன். சந்தோ‌ஷமா நடிக்கிறேன். இப்போ, தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் தலா ஒரு படம் நடிச்சு முடிச்சிருக்கேன். தமிழில் நடிக்கப் பேச்சுவார்த்தைப் போயிட்டிருக்கு” என்கிறார் அபிநயா.
    ×