search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நர்சு"

    • டாக்டர் போல் உடை அணிந்து செவிலியர் விடுதியில் தங்கியிருந்த நர்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • அப்போது அவர் செவிலியரை கன்னத்தில் கடித்து உள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் செவிலியர் சத்தம் போட்டுள்ளார்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் நர்சு ஒருவர் அங்குள்ள செவிலியர் விடுதியில் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் பாளையம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவர் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே சென்றுள்ளார். அவர் டாக்டர் போல் உடை அணிந்து செவிலியர் விடுதியில் தங்கியிருந்த நர்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் செவிலியரை கன்னத்தில் கடித்து உள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் செவிலியர் சத்தம் போட்டுள்ளார்.

    இதனை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த சிலர் விடுதிக்குள் நுழைந்த மணிகண்டனை பிடித்து வைத்துகொண்டு அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் நர்சை தாக்கிய மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை தொடர்ந்து வாலிபர் கடித்ததில் காயமடைந்த நர்சுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதி மக்கள் மத்தியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டென்மார்க்கை சேர்ந்த பெண் நர்ஸ், பயிற்சி பெறுவதற்காக தனது மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக ரத்தம் எடுத்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Nursejailed
    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கை சேர்ந்த 36 வயது பெண், நர்ஸ் ஆக பணிபுரிந்தார். இவர் பயிற்சி பெறுவதற்காக தனது 7 வயது மகனின் உடலில் இருந்து ஒவ்வொரு வாரமும் ½ லிட்டர் ரத்தம் எடுத்துள்ளார்.

    அந்த சிறுவன் 11 மாத குழந்தையாக இருந்ததில் இருந்து 5 ஆண்டுகள் தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரது மகன் குடல் நோயினால் அவதிப்பட்டு வருகிறான்.

    இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அந்த பெண் மீது ஹெர்னிங் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவர் தொடர்ந்து நர்சாக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மகனின் உடலில் இருந்து எடுத்த ரத்தத்தை கழிவறையில் கொட்டி விட்டதாகவும், ஊசியை குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் விசாணையின்போது நர்சு தெரிவித்தார்.  #Nursejailed

    ×