search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையர்கள்"

    கொள்ளையர்கள் என நினைத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மரக்கட்டைகளால் தாக்கியதில் 9 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் அடுத்த நாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.
    அவுரங்கபாத்:

    மராட்டிய மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள சந்த்காவன் கிராமத்தில் கொள்ளையர்கள் நடமாட்டம் இருப்பதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் கிராம மக்கள் விடிய, விடிய காவல் காத்தனர்.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி அதிகாலையில் 9 பேர் அந்த கிராமத்தில் உள்ள பண்ணைக்கு வந்தனர். அவர்களை கொள்ளையர்கள் என நினைத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மரக்கட்டைகளால் தாக்கினர். இதில் 9 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களில் 2 பேர் அடுத்த நாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

    இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த கொடூர சம்பவம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே தெலுங்கானாவிலும் இதேபோல் 2 பேர் அடித்துக்கொல்லப்பட்டனர். அசாமில் குழந்தை கடத்தல் பீதியில் கிராம மக்களால் 2 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    பீகார் மாநிலம் ஹஜிபூர் பகுதியில் உள்ள யூனியன் வங்கியில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் சுமார் 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பாட்னா:

    பீகார் மாநிலம் ஹஜிபூர் பகுதியில் யூனியன் வங்கியின் கிளை இயங்கிவருகிறது. வாரவிடுமுறையைத் தொடர்ந்து இன்று வழக்கம்போல் பணி துவங்கிய நிலையில், துப்பாக்கிகளுடன் வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சுமார் 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    இதுதொடர்பாக, காவல்துறையினர் கூறுகையில், வங்கிக் கொள்ளையில் 6 பேர் ஈடுபட்டிருக்கின்றனர் என்றும், அவர்கள் இருசக்கரவாகனம் மூலம் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். #bankloot 
    ×