search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டார்க்"

    இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீரர் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. #Starc #INDvAUS
    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதன் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.

    இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.

    முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 27-ந்தேதியுடன் 20 ஓவர் முடிகிறது. ஒருநாள் தொடர் மார்ச் 2-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. மார்ச் 13-ந்தேதியுடன் ஒரு நாள் தொடர் முடிகிறது.

    உலக கோப்பைக்கு முன்பு நடைபெறும் இந்த ஒரு நாள் தொடர் மீத அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீரர் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் கானே ரிச்சர்ட்சன் அணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்.

    பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ், ஸ்டான்லேக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    ஆரோன்பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேன்ட்ஸ்ஹோம், மேக்ஸ்வெல், ஆஸ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, கும்மின்ஸ், நாதன் கோல்ட்டர், கேன் ரிச்சர்ட்சன், ஜோசன் பெக்ரன் மார்ப், நாதன் லயன், ஆடம் ஜம்பா. டி ஆர்சி ஷார்ட், ஜியே ரிச்சர்ட்சன்.

    இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. வருகிற 10-ந் தேதியுடன் இந்த தொடர் முடிகிறது. அதன் பிறகு இந்தியா- ஆஸ்திரேலியா தொடர் நடைபெறும். #Starc #INDvAUS
    ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
    கான்பெரா:

    ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெராவில் நடந்தது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 215 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.

    319 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கைக்கு 516 ரன் நிர்ணயிக்கப்பட்டது.

    இலங்கை அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 499 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து விளையாடியது.

    ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி நிலை குலைந்தது. இலங்கை அணி 51 ஓவர்களில் 149 ரன்னில் சுருண்டது.

    இதனால் ஆஸ்திரேலியா 366 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெண்டீஸ் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். ஸ்டார்க் 5 விக்கெட்டும், கும்மின்ஸ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த டெஸ்டில் ஸ்டார்க்கின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் மொத்தம் 10 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த வெற்றிமூலம் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. #SLvAUS
    பெர்த் டெஸ்டில் எங்களைவிட சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியானது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    இந்த டெஸ்டில் நாங்கள் அணியாக சிறப்பாக செயல்பட்டதாகவே கருதுகிறேன். ஆஸ்திரேலிய அணி எங்களைவிட பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்தது. இந்த ஆடுகளத்தில் இது அதிகமான ரன்னே. ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியான அணியே.

    நாங்கள் நம்பிக்கையுடன் விளையாடியபோது ஆஸ்திரேலிய பவுலர்கள் எங்களுக்கு இடைவிடாது நெருக்கடியை ஏற்படுத்தி விட்டனர். அவர்கள் அதில் மிகுந்த திறமையுடன் செயல்பட்டனர்.

    ஆடுகளத்தை (பிட்ச்) பார்த்தபோது நாங்கள் ஜடேஜாவை பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன் சிறப்பாக பந்து வீசினார். சுழற்பந்து வீரர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் ஒருபோதும் யோசிக்கவில்லை. 4 வேகப்பந்து வீரர்கள் போதுமானது என்று கருதுதினோம்.

    நாங்கள் விரும்பிய முடிவை பெறாததால் ஆட்டத்திறன் குறித்து சொல்வது பொருத்தமற்றது. அடுத்த டெஸ்டில் கவனம் செலுத்துவதுதான் இனி நோக்கமாக இருக்கும்.



    எனக்கு கொடுக்கப்பட்ட முடிவு (சர்ச்சைக்குரிய கேட்ச்) குறித்து ஆடுகளத்தில் எடுக்கப்பட்டது. அது அங்கேயே முடிந்துவிட்டது. இதற்கு மேல் ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன் கூறும்போது, “இந்த வெற்றியால் நிம்மதி அடைகிறோம். எங்களது வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.
    பெர்த்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112 ரன்னிற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுக்களை இழந்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது.

    43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸதிரேலியா 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

    287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. லோகேஷ் ராகுல் முதல் பந்தை சந்திக்க ஸ்டார்க் பந்து வீச்சை தொடங்கினார். ஆட்டத்தின் 4-வது பந்திலேயே லோகேஷ் ராகுல் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த புஜாரா 4 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்தது. ஆனால் நாதன் லயன் பந்தில் விராட் கோலி (17), முரளி விஜய் (20) அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் இந்தியா 55 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.


    ரகானே விக்கெட்டை சாய்த்த சந்தோசத்தில் ஹசில்வுட்

    5-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 43 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 98 ரன்னாக இருக்கும்போது ரகானே 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரகானே அவுட்டானதும் இந்தியாவின் இன்னிங்ஸ் ஓரளவு முடிவிற்கு வந்ததாக கருதப்படுகிறது.

    6-வது விக்கெட்டுக்கு விஹாரி உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. தற்போது வரை இந்தியா 41 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 24 ரன்னுடனும், ரிஷப் பந்த் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


    டிம் பெய்னின் மகிழ்ச்சியும், விராட் கோலியின் சோகமும்

    இந்தியாவின் வெற்றிக்கு 175 ரன்கள் தேவை. கைவசம் ஐந்து விக்கெட்டுக்கள் உள்ளன. கடைசி நாளில் 175 ரன்கள் என்பது மிகக்கடினம். மேலும், தற்போது களத்தில் இருக்கும் ஜோடி பிரிந்தால், இந்தியாவின் இன்னிங்சை உடனடியாக முடிவிற்கு வர வாய்ப்புள்ளது.
    இந்தியாவிற்கு எதிராக நாளை தொடங்கும் பெர்த் டெஸ்டிற்கான ஆஸ்திரேலியா ஆடும் லெவன் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது.

    உலகின் அதிவேக ஆடுகளத்தைக் கொண்ட பெர்த் மைதானம். இங்குள்ள ஆடுகளத்தில் பந்துகள் அதிக அளவில் பவுன்சராகவும், வேகமாகவும் செல்லும். இதனால் பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் திணறுவார்கள். தற்போது பெர்த்தில் வெளியிடத்தில் வைத்து தயார் செய்யப்பட்ட ஆடுகளத்தை பயன்படுத்த இருக்கிறார்கள். முதன்முறையாக இந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

    பொதுவாக பெர்த் ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவில் இருக்காது. இதனால் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும். ஸ்விங் பெரிய அளவில் இருக்காது. ஆனால் தற்போது ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. நாளைய ஆட்டத்திற்கு ஆடுகளம் ஒப்படைக்கப்படும்போது புற்கள் பெரிய அளவில் வெட்டப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் ஆடுகளம் எப்படி செயலாற்ற போகிறது என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பவுன்ஸ், வேகத்துடன் ஸ்விங் இருக்கும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியா ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோருடன் வேகப்பந்து ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் சேர்க்கப்படலாம் என்று தகவல் வெளியானது.



    இந்நிலையில் அடிலெய்டில் விளையாடிய அதே 11 பேர்தான் பெர்த்தில் களம் இறங்குவார்கள். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெர்த் டெஸ்டில் விளையாடும் ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மார்கஸ் ஹாரிஸ், 2. ஆரோன் பிஞ்ச், 3. உஸ்மான் கவாஜா, 4. ஷான் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 7. டிம் பெய்ன், 8. ஹசில்வுட், 9. பேட் கம்மின்ஸ், 10. நாதன் லயன், 11. மிட்செல் ஸ்டார்க்.
    முதல்தர போட்டியில் நான்கு முக்கிய பந்து வீச்சாளர்களுடன் நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ் அணி களம் இறங்குகிறது. #SheffieldShield #Starc
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களாக திகழ்பவர்கள் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயன். இவர்கள் சர்ச்சைக்குரிய கேப்டவுன் டெஸ்டிற்குப் பிறகு இணைந்து விளையாடவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரை ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் நியூ சவுத் வேல்ஸ் ப்ளூ அணிக்காக விளையாடுகிறார்கள்.



    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரெயொரு போட்டி கொண்ட டி20-யிலும், இந்தியாவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இவர்கள் நான்கு பேரும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 16-ந்தேதி தொடங்கும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில் முதல்தர போட்டியில் விளையாடுகிறார்கள்.
    ×