என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 129817
நீங்கள் தேடியது "வெற்றிமாறன்"
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் முதல் பாகம் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில், படத்தின் இசை குறித்து சந்தோஷ் நாராயணன் மனம் திறந்துள்ளார். #VadaChennai #Dhanush
தனுஷ் - வெற்றிமாறன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் `வடசென்னை'. மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின்
முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூலை 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
`வடசென்னை படத்திற்கு இசையமைத்து முடித்துவிட்டேன். வெற்றிமாறனின் இந்த பிரம்மாண்ட படைப்பில் நானும் ஒருவனாக இருப்பதை கவுரவமாக நினைக்கிறேன். படத்திற்காக கடுமையாக உழைத்த நடிகர் தனுஷுக்கு வாழ்த்துக்கள். துடிப்பும், வேடிக்கையும் அடங்கிய ஏரியா குத்து பாடல்களுடன் திரும்ப வருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்'. என்று கூறியிருக்கிறார்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். முக்கிய கதபாத்திரங்களில் அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட்டில் வெளியாக இருக்கிறது. #VadaChennai #Dhanush
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தன்னுடைய பிறந்த நாளுக்கு வடசென்னை மூலம் சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார். #Dhanush #VadaChennai
‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் 'வட சென்னை'. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதல் பாகத்தின் டிரைலர் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் தனுஷின் பிறந்தநாள். இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.
சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இது தவிர இந்த படத்தினை லைக்கா புரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.
தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களுக்கு பிறகு ‘வட சென்னை’ மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
கோடிக்கணக்கான சம்பளத்தை விட்டுவிட்டு மக்களுக்காக போராடும் எங்கள் மீது ‘நக்சலைட்’ முத்திரை குத்துவதா என்று இயக்குனர் அமீர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். #Ameer
தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் சார்பில் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
‘இங்கு கலந்து கொள்பவர்களில் சீமானை தவிர மற்ற அனைவரும் திரைத்துறையில் இருக்கிறோம். சீமான் மட்டுமே மண்ணையும் மக்களையும் பற்றி மட்டும் பேசும் ஒரே தலைவர். நாங்கள் இங்கே வருவதன் நோக்கம் எங்களுக்கு அங்கீகாரம் தந்த மக்களுக்கு பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தான். ஒவ்வொரு முறையும் நாங்கள் பொது பிரச்சினைக்கு வருவதால் இழப்பு எங்களுக்குதான்.
நான் வெற்றிமாறன் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இயக்குனர்கள். இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக பொதுவெளிக்கு வரும் போது எங்கள் மீது பொய்யான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
எங்கள் மீது நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்துகிறார்கள். எங்களை நக்சலைட்டுகள் என்று சொல்பவர்கள் தான் நக்சலைட்டுகள் என்று நம்புகிறோம். நீட்டுக்கு எதிராக முதலில் எதிர்க்குரல் கொடுத்தவர்கள் நாங்கள் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X