search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 129867"

    தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி அமைத்தே போட்டியிடும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PonRadhakrishnan

    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழகத்தில் பா.ஜனதா கடந்த 2014-ம் ஆண்டு இருந்த நிலையில் இப்போது இல்லை. வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் பா.ஜனதாவின் நிலை எப்படி இருக்கிறதோ அதை சார்ந்து தான் தேர்தல் முடிவு இருக்கும்.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் தான் சந்திக்க வேண்டும் என்ற நிலையில் எல்லா கட்சிகளும் உள்ளன. பா.ஜ.க.வும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது.

    அதே நேரத்தில் எந்த கட்சியோடும் ஒட்டிபோக வேண்டும் என்ற ஏக்கத்தில் பா.ஜனதா இல்லை. சம உணர்வோடு யார் வருகிறார்களோ அவர்களோடு கூட்டணி.

    தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமையுமா? அல்லது மற்ற கட்சியின் தலைமையை ஏற்குமா? என்று இப்போது கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.

    3 பெண்களுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இயற்கை பேரிடரின் போது அரசு தானாக முன்வந்து எப்படி இழப்பீடு தருகிறதோ அதேபோல் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தானாக முன்வந்து இழப்பீடு கொடுப்பதுடன் வாழ் நாள் முழுவதும் சிகிச்சை செலவை ஏற்க வேண்டும்.

    மோடியின் வெளிநாட்டு பயணத்தால் பணம் செலவாகிறது என்ற குற்றச்சாட்டு சரியானது அல்ல. இந்த பயணத்தால் வெளிநாட்டின் முதலீடுகள், திட்டங்கள் எவ்வாறு வந்திருக்கிறது என்று பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan

    தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார். #SunilArora #CEC #India #Ballot
    புதுடெல்லி:

    கடந்த 1-ந் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்ட சுனில் அரோரா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 1.76 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் மிக குறைந்த அளவு (ஒரு சதவீதத்துக்கும் குறைவான) எந்திரங்களில் மட்டுமே கோளாறு ஏற்பட்டது. இதில் எங்களுக்கு திருப்தி இல்லை. எந்திரங்களில் கோளாறு ஏற்படுவதை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எந்திரங்கள் சேதப்படுத்தப்படுவது வேறு, கோளாறு ஏற்படுவது வேறு. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்குகளை பதிவு செய்யும் ஒரு கருவி தான். அது கம்ப்யூட்டர் போல திட்டமிடப்பட்டதோ, பண்பட்டதோ அல்ல.

    2014 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஒரு தேர்தல் முடிவு வந்தது. அடுத்து அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் முற்றிலும் மாறுபட்ட முடிவு வந்தது. சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் இப்போது ஒரு முடிவும், அங்கு முன்பு நடந்த இடைத்தேர்தல் களில் ஒரு முடிவும் வந்தது.

    ஒருவேளை தேர்தல் முடிவு ‘எக்ஸ்’ என்று வந்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி யாரும் குறை கூறுவதில்லை. அதே முடிவு ‘ஒய்’ என்று வந்தால் மின்னணு எந்திரங்களில் கோளாறு என்கிறார்கள். தேர்தல் கமிஷனையோ, அதன் பாரபட்சமற்ற நடவடிக்கையையோ தேர்தலில் முக்கிய பங்கேற்பாளர்கள் என்ற முறையில் அரசியல் கட்சிகள் கேள்வி கேட்கின்றன. அது அவர்களது உரிமை.

    ஆனால் மின்னணு எந்திரங்களை கால் பந்தாட்டத்தில் ‘டாஸ்’ போடுவதுபோல பயன்படுத்துவது எங்களை காயப்படுத்துகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு அடுத்ததாக அரசியல் கட்சிகள் தான் முக்கிய பங்கேற்பாளர்கள். தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது. இப்போதுள்ள நடை முறையே தொடரும்.

    அடுத்து நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வர உள்ளது பற்றி நாங்கள் அறிவோம். அதற்கான அலுவலக ரீதியான முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஏற்கனவே சில நாட்கள் முன்பு தொடங்கிவிட்டது. அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் கவனத்துடன் தயாரிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

    முக்கிய நிகழ்வான நாடாளுமன்ற பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்த அரசியல் கட்சிகள், வாக்காளர்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு சுனில் அரோரா கூறினார். #SunilArora #CEC #India #Ballot
    குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் அட்டார்னி ஜெனரல் வேணுகோபாலுக்கும் காரசார வாதம் நடந்தது. #SupremeCourt
    புதுடெல்லி:

    குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா தொடர்ந்த பொதுநல வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா அமர்வு முன் இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. 

    வழக்கு விசாரணையில், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தல் சின்னம் அளிக்க மறுக்கும் உரிமையை தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் வழங்கலாமா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு “அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அதிகாரம். நீதிமன்றம் அதில் தலையிடக் கூடாது” என்று மத்திய அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் “இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இல்லை” என்று மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்தார். “அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காத இடத்துக்குள் நுழைய சுப்ரீம் கோர்ட் முயற்சிக்கிறது” என்று அவர் கூறினார்.

    குற்றப் பின்னணி கொண்டவர்களை தடை செய்து சட்டம் கொண்டு வந்தால், பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் நிலை உருவாகும் என்றும் வேணுகோபால் எச்சரித்தார்.

    நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் கருத்தும் மத்திய அரசின் கருத்தும் ஒன்றாக இருந்தது. ஆனால், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி நாரிமனும் மத்திய அரசு வாதத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். 

    “பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்காத வரையில், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு சின்னத்தை வழங்க தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியும். நாங்கள் பாராளுமன்றத்தின் எல்லைக்குள் நுழையவில்லை” என்று நீதிபதி நாரிமன் கூறினார்.

    ஆனால், பாராளுமன்ற நிலைக்குழு இந்த மசோதாவை விவாதித்து, ஏற்க மறுத்துவிட்டதாக வேணுகோபால் பதிலளித்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 28-ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 
    ராஜஸ்தானில் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதால் அதற்கு முன்னதாகவே வாக்காளர்களை கவரும் வகையில் கூட்டுறவு கடன் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக பாஜக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. #BJP

    ஜெய்ப்பூர்:

    200 உறுப்பினர்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதியுடன் முடி வடைகிறது.

    எனவே இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் கமி‌ஷன் ஆலோசித்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    அங்கு முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராகிவிட்டது. அக்கட்சியின் தேசிய தலைவர் அமத்ஷா தேர்தல் பிரசார ரதயாத்திரை தொடங்கியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்.

    தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதால் அதற்கு முன்னதாகவே வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா வெளியிட்டு வருகிறார்.


    நேற்று அவர் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சலுகைகள் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ராஜஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டங்கள் மற்றும் தெற்கு ராஜஸ்தான் மாவட்டங்களில் உள்ள 12 ஆயிரம் விவசாயிகள் பயன் அடையும் வகையில் அவர்களது கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மாவட்டங்களில் விவசாயிகளின் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து கடன் பெற்று இருக்கிறார்கள். அவை தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா அறிவித்துள்ளார். #BJP

    பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தார்பார்கர் தொகுதியில் போட்டியிட்ட மகேஷ் மலானி, கீழ் சபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் இந்து என்ற பெயரை பெற்றுள்ளார். #PakistanElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. இம்ரான்கானின் பிடிஐ கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றும், அதிக இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது. இதனால், இம்ரான்கான் பிரதமராக உள்ளார்.

    இந்நிலையில், சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்கர் தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்து மதத்தை சேர்ந்த மகேஷ் மலானி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், அந்நாட்டு பாராளுமன்ற தேசிய சபை (கீழ்சபை) தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் இந்து என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்னர், பல இந்து எம்.பி.க்கள் தேசிய சபையில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் நியமன எம்.பி.க்கள் ஆவர். தற்போது, மகேஷ் மலானி தேர்தலில் நின்று வெற்றி பெற்று தேசிய சபைக்குள் செல்ல இருக்கிறார்.
    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. #PakistanElection #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.

    ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்தது. பெரும்பாலான இடங்களில் அந்த கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை பெற்று வந்தனர். அடுத்த இடத்தில், நவாஸ் ஷெரீப்பின்  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது.  பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.  

    272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 102 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 43 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

    இன்னும் சில மணிநேரத்தில் வெற்றி நிலவரங்கள் வர தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1996-ம் ஆண்டு கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை போட்டியிட்ட மூன்று பொதுத்தேர்தல்களில் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள வெற்றி அந்த கட்சியினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
    அ.தி.மு.க.வின் தேர்தல் வெற்றிகளை யாராலும் தடுக்க முடியாது என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார். #rajanchellappamla

    மதுரை:

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய, வட்ட, கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்தக்கடையில் இன்று நடைபெற்றது.

    அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்திற்கு திட்டங்களை அள்ளித் தருகின்றனர். எய்ம்ஸ் உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் மதுரைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கிடைத்துள்ளது. அதுபோல சாலைகள், உயர்மட்ட மேம்பாலங்கள் மதுரை நகருக்கு கிடைத்துள்ளன.

    வருகிற உள்ளாட்சி தேர்தலானாலும் சரி, நாடாளு மன்ற தேர்தலானாலும் சரி அ.தி.மு.க. வின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது. இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என சிலர் சூழ்ச்சி வலை பிண்ணி பார்த்தனர். ஆனால் இதனை முறியடித்து முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் அ.தி.மு.க.வை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    எனவே நிர்வாகிகள் அனைவரும் அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறி அ.தி.மு.க. வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட நிர்வாகிகள் அம்பலம், அய்யப்பன், முருகேசன், தக்கார்பாண்டி, வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். #rajanchellappamla

    ×