search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாங்காங்"

    ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #Potatoes #HongKong #FirstWorldWar
    சென்டிரல்:

    ஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள சாய் குங் மாவட்டத்தில் தின்பண்டங்கள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, ஒரு தொழிலாளியின் கையில் உருளைக்கிழங்கை போல் இருந்த மர்ம பொருள் ஒன்று சிக்கியது. அதை உற்று நோக்கியபோது அது கையெறி வெடிகுண்டு என தெரிந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

    உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த கையெறி வெடிகுண்டை சோதனை செய்ததில், அது முதலாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அந்த கையெறி வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க செய்தனர்.

    போலீஸ் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது. முன்னாள் போர்க்களத்தில் உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்டு, அவற்றை சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக கிடைத்த கையெறி வெடிகுண்டை உருளைக்கிழங்கு என நினைத்து ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்துவிட்டனர்” என தெரிவித்தனர்.  #Potatoes #HongKong #FirstWorldWar 
    ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் நின்றபடி பணத்தை தூக்கி வீசிய வாங் சிங் கிட் என்ற வாலிபரை பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி போலீசார் கைது செய்தனர்.
    ஹாங்காங் :

    ஹாங்காங்கை சேர்ந்த வாலிபர் வாங் சிங் கிட் (வயது 24). இளம் தொழில் அதிபரான இவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரர். இணைய பணமான ‘கிரிப்டோ கரன்சி’யில் முதலீடு செய்து பல கோடிகளை சம்பாதித்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இவர் ஹாங்காங்கின் ‌ஷாம் ‌ஷு போ என்கிற மாவட்டத்துக்கு தன்னுடைய ஆடம்பர காரில் சென்றார். பின்னர் அங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற வாங் சிங் கிட், அங்கு நின்றபடி பணத்தை தூக்கி வீசி எறிந்துள்ளார்.

    இதனால் அந்த பகுதியில் பெரிய அளவில் கூட்டம் கூடியது. மக்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு பணத்தை சேகரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இதற்கிடையே வாங் சிங் கிட் பணத்தை வீசி எறிந்தது மற்றும் மக்கள் சண்டை போட்டுக்கொண்டு பணத்தை எடுத்துச் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி வாங் சிங் கிட்டை ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சில மோசடி புகார்கள் இருப்பதாக தெரிகிறது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமாக இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள், வைர நகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.255 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது. #PNBFraud #NiravModi #ED
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர்கள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாக வசித்து வருகின்றனர். இந்த வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.



    இந்த வழக்கில் நிரவ் மோடியின் சொத்துகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமாக இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள், வைர நகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.255 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது.

    இவற்றை முடக்கி இருப்பதற்கான உரிய உத்தரவு நகலை விரைவில் ஹாங்காங் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பி வைக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. #PNBFraud #NiravModi
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஹாங்காங் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. #AsiaCup2018 #HKvPAK #PAKvHK
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பேட்டிங்கை தேர்வ்ய் செய்தது. பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சினால் ஹாங்காங் அணி சிக்கியது.

    இதனால்  ஹாங்காங் அணியினர் 35.1 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஐஜாஸ் கான் 27 ரன்னும், கின்சிட் ஷா 26 ரன்னும் எடுத்தனர்.



    பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் கான் 3 விக்கெட்டும், ஹசன் அலி, சதாப் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பகர் சமான் 24 ரன்னிலும், பாபர் அசம் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 23.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. #AsiaCup2018 #HKvPAK #PAKvHK
    2015-ம் ஆண்டு காரில் தாய், மகள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கொலையான பெண்ணின் கணவர் யோகா பந்தை பயன்படுத்தி கொலை செய்திருக்கிறார் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
    ஹாங்காங்:

    சீனாவின் ஹாங்காங் நகரில் கடந்த 2005-ம் ஆண்டு இளம்பெண் அவரது 16 வயது மகள் காரில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். பிரேத பரிசோதனையில் அவர்கள் கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது.

    அதற்கு மேலாக எந்த தடயமும் கிடைக்காததால் போலீசார் குழப்பமடைந்தனர். நீண்ட காலமாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிடைந்த இந்த வழக்கில், காரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 2 காற்று இறங்கிய யோகா பந்துகள் மூலமாக விசாரணை சுறுசுறுப்படைந்தது.

    இது தொடர்பாக ஹாங்காங் கோர்ட்டில் நடந்து வரும் விசாரணையில் தனது அறிக்கையை அரசுத்தரப்பு சமர்பித்தது. அதில், 
    காரின் பின்பகுதியில் கிடந்த அந்த இரண்டு யோகா பந்துகளிலும் கார்பன் மோனாக்சைடு வாயு இருந்ததற்கான தடையம் உள்ளது. 

    கொலையான பெண்ணின் 53 வயதான கணவர் ஹா கிம்-சன் ஒரு மயக்கவியல் நிபுணர், சீன பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வரும் அவருக்கு மாணவி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது தொடர்புக்கு குறுக்கே இருக்கும் மனைவியை யோகா பந்து திட்டத்தின் மூலம் கொலை செய்துள்ளார்.

    ஆனால், மனைவுக்கு வைத்த குறியில் தனது மகளும் பலியாவார் என ஹா அறிந்திருக்கவில்லை. கொலை நடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆய்வகத்தில் இரண்டு யோகா பந்துகளில் கார்பன் மோனாக்சைடு வாயுவை நிரப்பியுள்ளார்.

    இது தொடர்பாக சக பணியாளர்கள் கேட்டபோது வீட்டில் உள்ள எலிகளை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துச் செல்வதாக ஹா கூறியுள்ளார் என அரசுத்தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விரைவில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
    ஹாங்காங்கில் ஊழியர்கள் யாரும் இன்றி தானாக இயங்கும் மதுக்கடை தொடங்கப்பட்டுள்ளது. இதை சீனாவின் மிகப்பெரிய இ-வர்த்தக நிறுவனமான அலிபாபா உருவாக்கியுள்ளது.
    ஹாங்காங்:

    ஹாங்காங்கில் ஊழியர்கள் யாரும் இன்றி தானாக இயங்கும் மதுக்கடை தொடங்கப்பட்டுள்ளது. இதை சீனாவின் மிகப்பெரிய இ-வர்த்தக நிறுவனமான அலிபாபா உருவாக்கியுள்ளது. முற்றிலும் தானியங்கி மையமாக்கப்பட்டுள்ள இம்மதுக்கடை ஹாங்காங்கின் வினெஸ்போ பகுதியில் உள்ளது.

    அனைத்து மதுபாட்டில்களிலும் ‘டிரெக்கிங் டேக்’ எனப்படும் அடையாள குறி பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மது பாட்டில் எடுத்தவரின் உருவம் கம்ப்யூட்டர் திரையில் தெரியும். பின்னர் அவர் மதுபாட்டிலுக்குரிய பணத்தை செலுத்த அதற்கான ரசீது அறை (பீல் ரூம்) வரும் போது முக அங்கீகாரம் மூலம் அந்த நபர் உறுதி செய்யப்படுகிறார். அதையடுத்து ஆன்லைன் மற்றும் மொபைல் மூலம் பணம் பெறப்படுகிறது.

    இதற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஷாங்காயில் இயங்கும் பிங்கோ பாஸ் நிறுவனம் 24 மணி நேரமும் இயங்க கூடிய தானியங்கி கடையை திறந்தது. அதே நேரம் அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் முதன் முறையாக கேஷியர் இல்லாத கடையை சீட்டில் நகரில் கடந்த ஜனவரியில் தொடங்கியது. #Tamilnews
    ×