என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 130485
நீங்கள் தேடியது "உலகக்கோப்பை"
பெண்கள் குறித்து ஹர்திக் பாண்டியா கூறிய கருத்துப் பற்றி கேள்வி கேட்டதற்கு ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்சன் பதில் அளித்துள்ளார். #ICC #HardikPandya
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவரும் தொடக்க பேட்ஸ்மேனுமான லோகேஷ் ராகுலும் ‘காபி வித் கரண்’ டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது பெண்கள் குறித்த கேள்விக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்தனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனால் பிசிசிஐ இருவரையும் சஸ்பெண்ட் செய்தது. பின்னர் விசாரணை தாமதமாகி வருவதால் தற்போது இருவரையும் விளையாட அனுமதித்துள்ளது.
இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிக்காக ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்சன் இந்தியா வந்துள்ளார்.
அவரிடம் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ரிச்சர்ட்சன் பதில் அளிக்கையில் ‘‘இந்த விவகாரத்தில் வீரர் இடம்பிடித்துள்ள நாட்டிற்குத்தான் கவலை. பொதுவாக இந்திய அணி சிறந்த பண்புடையது. அவர்கள் போட்டிக்கு வந்த பிறகு நடுவருடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் சரியான உத்வேகத்துடன் விளையாடுகிறார்கள்.
இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. விராட் கோலி கிரிக்கெட்டிற்கான சிறந்த தூதர். அவர் டி20 கிரிக்கெட் போட்டியின் மீதான பேரார்வம் பற்றி மட்டும் பேசுவதில்லை. டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியை பற்றியும் பேசுகிறார். சிறந்த வீரர்கள் அனைவரும் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட ஆசைப்பட வேண்டும்’’ என்றார்.

ரஷியாவில் இன்று உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், ரஷிய அதிபர் புதினுக்கு 9-ம் எண் கொண்ட டிஷர்ட்டை குரோஷிய அதிபர் பரிசாக வழங்கினார். #Russia #2018WorldCup
மாஸ்கோ:
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு ரஷியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் குரோஷியா அணி அபாரமாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் குரோஷியா அணியும், பிரான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்த கால்பந்து போட்டியை காணவும், வீரர்களை உற்சாகப்படுத்தவும் குரோஷிய அதிபர் கொலிண்டா கிராபர் கிடாரோவிக் ரஷ்யா வந்துள்ளார். இதையடுத்து இன்று ரஷிய அதிபர் மாளிகையில் அதிபர் புதினுடனான சந்திப்பின் போது, புதின் என அச்சிடப்பட்ட கால்பந்து வீரர்கள் அணியும் டிஷர்ட்டை குரோஷிய அதிபர் கொலிண்டா கிராபர் கிடாரோவிக் ரஷ்ய அதிபருக்கு நினைவு பரிசாக வழங்கினார். #Russia #2018WorldCup

உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும் பெல்ஜியம் அணியும் நாளை மோதுகின்றனர். #FIFA2018 #WorldCup2018
செயின்ட்பீட்டர்ஸ்பர்க்:
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 1998-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரான்ஸ், கோப்பையை வெல்லாத பெல்ஜியம், குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
முதல் அரை இறுதி ஆட்டம் நாளை (10-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.
பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாக இருக்கிறது. அந்த உலக கோப்பையில் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 0-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது.
உலக தர வரிசையில் 7-வது இடத்தில் பிரான்ஸ் அணி முன்களம், நடுகளம், பின்களம் ஆகியவற்றில் சமபலத்துடன் இருக்கிறது. எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, ஆலிவர் கிரவுட் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.
அர்ஜென்டினாவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் 19 வயதான எம்பாப்வே சிறப்பாக ஆடி 2 கோல்களை பதிவு செய்தார். பெல்ஜியத்தின் பின்கள பலவீனத்தை பயன்படுத்தி அவர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதே போல கிரீஸ்மேன் கால் இறுதியில் ஒரு கோல் அடித்து அணிக்கு உதவியாக இருந்தார். இருவரும் இந்த தொடரில் 3 கோல்களை அடித்துள்ளனர்.
போக்பா, நிக்கோலா காண்டே ஆகியோர் நடுகளத்தில் சிறப்பாக விளையாட கூடியவர்கள். தோல்வி எதையும் சந்திக்காத அந்த அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் டிரா செய்தது.
பெல்ஜியம் தான் ஆடிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. அந்த அணி முன் களத்தில் மிகவும் வலுவாக இருக்கிறது. பதிலடியான தாக்குதல் ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
கேப்டன் ஈடன் ஹசாட், லுகாகு, டிபுருயன் ஆகியோரது கூட்டணி முன்களத்தில் பலம் பெற்று திகழ்கிறது. இதில் லுகாகு 4 கோல்கள் அடித்து உள்ளார். பிரேசிலுக்கு எதிராக அவர் கோல் அடிக்க உதவியாக இருந்தார். புருயன் பிரேசிலுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹசாட் அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதில் திறமை பெற்றவராக இருக்கிறார்.
இது தவிர பெலானி, விஸ்டல், கோம்பேனி, நாசெர் சாதிலி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். அந்த அணியின் சிறந்த பின்கள வீரரான தாமஸ் மினுயர் கிரானி 2 முறை மஞ்சள் அட்டை பெற்றதால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் விளையாட இயலாது. பெல்ஜியம் அணியின் பலவீனமே பின்களம்தான். அதை சரி செய்வது அவசியம். ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது.
இரு அணிகளும் நாளை மோத இருப்பது 74-வது போட்டியாகும். இதுவரை நடந்த 73 ஆட்டத்தில் பிரான்ஸ் 24-ல், பெல்ஜியம் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 19 போட்டி ‘டிரா’ ஆனது.
உலக கோப்பையில் இரு அணிகளும் 32 ஆண்டுகளுக்கு பிறகு மோத இருக்கின்றன. ஏற்கனவே 2 முறை மோதி உள்ளன. இந்த இரண்டிலும் பிரான்சே வெற்றி பெற்றது. 1938-ம் ஆண்டு லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ல் 3-வது இடத்துக்கான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது.
இரு அணிகளும் கடைசியாக 2015-ம் ஆண்டு காட்சி போட்டியில் மோதின. இதில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.
பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் இறுதிப் போட்டியில் நுழைய கடுமையாக போராடுவார்கள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. #FIFA2018 #WorldCup2018

உருகுவே அணிக்கெதிரான காலிறுதியில் முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. #WorldCup2018 #FRAURU
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்ற வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து இன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. பிரான்ஸ் - உருகுவே மோதும் முதல் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. உருகுவே அணியில் காயம் காரணமாக கவானி களம் இறங்கவில்லை. பிரான்ஸ் அணி முழு பலத்துடன் களம் இறங்கியது.
தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தின. ஆனால் உருகுவே அணியின் டிபென்ஸ்-ஆல் பிரான்ஸ் கோல் அடிக்க திணறின. இதற்கிடையே உருகுவே அணியும் கோல் அடிக்க முயற்சி செய்தன.
ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்மான் பந்தை உதைக்க வரானே அதை தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் உருகுவே அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகுவே, முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
பந்து 58 சதவிதம் பிரான்ஸ் அணியிடமே இருந்தது. இருந்தாலும் உருகுவே 7 முறை முயற்சி செய்தது. உருகுவே நான்கு முறை ஆன்டார்கெட் செய்தது. பிரான்ஸ் ஒருமுறைதான் ஆன்டார்கெட் செய்தது.

×

X