search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பம்"

    சிறு தானிய வகைகளில் ஒன்றான தினை ருசியுடன் கூடிய அருமருந்தாக செயல்படுகிறது. தினையை பயன்படுத்தி சுவையான ஆப்பம் செய்வது பற்றி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை - 2 கப்
    இட்லி அரிசி - கால் கப்
    வெள்ளை உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    தேங்காய்ப் பூ - 1 கப்
    வடித்த சாதம் - ஒரு கைப்பிடி
    உப்பு - தேவைக்கு
    சர்க்கரை - 2 ஸ்பூன்



    செய்முறை :

    முதலில் தினையுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்து நைசாக அரைக்கவும்.

    அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும். மறுநாள் மாவு புளித்து நன்கு பொங்கியிருக்கும். மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தளர்வாக கலக்கவும்.

    ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான மாவை ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்.

    ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.

    சத்தும், சுவையுமிக்க தினை ஆப்பம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பு அரிசி உடலுக்கு வலிமை தரும். நார்ச்சத்து, பி.காம்ப்ளக்ஸ் இந்த உணவில் அதிகளவு இருக்கிறது. இன்று இந்த அரிசியில் ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - அரை கிலோ
    தேங்காய் - 1
    தேங்காய் துருவல் - 2 கப்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    வெல்லம் - சிறிய துண்டு
    தண்ணீர், உப்பு - சிறிதளவு



    செய்முறை :

    சிவப்பு அரிசியை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல், வெல்லம், வெந்தயம் சேர்த்து கிரைண்டரில் நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை சிறிது உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும்.

    தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ளவும்.

    ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி சட்டியை கையால் பிடித்து மாவை சுற்றி பரவ விட்டு மூடி வைக்கவும். ஒரு நிமிடம் கழித்து திறந்தால் சுவையான ஆப்பம் ரெடி.

    சுவையான சத்தான இந்த ஆப்பத்தை தேங்காய் பாலுடன் பரிமாறவும்.

    தேங்காய் பால் பிடிக்காதவர்கள், குருமா, பாயா வைத்து சுவைக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆப்பத்தில் பல்வேறு வெரைட்டி உள்ளது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் முட்டை ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - மூன்று டம்ளர்
    தேங்காய் துருவல் - 2  கப்
    உளுந்து - 3 தேக்கரண்டி
    வெந்தயம் - 1 தேக்கரண்டி
    சமையல் சோடா - 3 சிட்டிகை
    உப்பு  சிறிதளவு

    முட்டை மசாலாவிற்கு :

    முட்டை - மூன்று
    சர்க்கரை - அரை தேக்கரண்டி
    மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி
    நெய் - இரண்டு மேசைக்கரண்டி



    செய்முறை :

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைக்கவும்.

    அரிசியுடன், உளுந்தையும், வெந்தயத்தையும் சேர்த்து 2 அல்லது 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்கு கழுவி விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து புளிக்க விடவும். ஆப்பத்திற்கு புளித்தால்தான் மென்மையாகவும், சாப்பிட நன்றாகவும் இருக்கும்.

    ஆப்பம் ஊற்றுவதற்கு முன்பு மாவில் சமையல் சோடாவைக் கரைத்து கலந்து விட்டு, ஆப்பக்கடாயில் சிறிது எண்ணெய்த் தடவி, ஒரு வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேய்த்துவிட்டு மாவைச் சட்டியில் ஊற்றி, சட்டியை இரண்டு கையால் பிடித்து சுழற்றவும்.

    பின்னர் அதில் அடித்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை ஒரு குழி கரண்டி எடுத்து மாவின் நடுவில் ஊற்றி மறுபடியும் ஒரு முறை சுழற்றி, சுற்றிலும் நெய் ஊற்றி மூடி வேக வைத்து சுட்டெடுக்கவும்.

    சுவையான மிளகு சேர்த்த முட்டை ஆப்பம் ரெடி.

    இதற்கு காரச் சட்னி, சன்னா மசாலா வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×