search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்வலி"

    இன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர். ஆனால் கீழ் இடுப்பு வலி இருப்பவர்கள் சில வேலைகளை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.
    இன்றைய பெரும்பாலும் நாம் உட்கார்ந்தே தான் வேலை செய்கிறோம். கால்களுக்கும், கைகளுக்கும் சரியான வேலை தருவதே இல்லை. உட்கார்ந்தே வேலை செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.

    இவ்வாறு ஏற்படும் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எதனால் இடுப்பு வலி ஏற்படுகிறது என்று தெரியாமல், அதே வேலைகளை மீண்டும், மீண்டும் செய்து, வலி குறையவில்லை என குமுறுவார்கள்…

    இப்போது கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள் சில உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * நடப்பது, நிற்பது, உட்கார்ந்தே இருப்பது போன்ற வேலைகள் செய்ய வேண்டாம். கீழ் முதுகு வலி ஏற்பட்டால், முடிந்த வரை கால்களை நேராக நீட்டி படுத்து ஓய்வெடுங்கள். இடுப்பு உங்கள் கீழ் உடல், மேல் உடலை இணைத்து இருப்பதால் இதுப் போன்ற வேலைகள் வலியை அதிகரிக்கும்.

    * உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். ஆனால், இடுப்பு வலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. எனவே, இடுப்பு வலி முழுமையாக குறையும் வாய் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

    * உடனே வலியை குறைக்கும் நிவாரணத்தை தேடுவதை நிறுத்துங்கள். இவை, அந்த நேரத்திற்கு மட்டுமே தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வை அளிக்காது.

    * ஒரே சிகிச்சையை பின்பற்ற வேண்டாம். 85% இடுப்பு வலி என்ன காரணத்தினால் ஏற்படுகிறது என்றே தெரியாமல் தான் ஏற்படுகிறது. எனவே, எங்கு பிரச்சனை, எதனால் பிரச்சனை என்றே தெரியாமல் நீங்களாக சுயமாக எந்த சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டாம்.

    * அதிக எடையை தூக்க வேண்டாம். மார்கெட், அலுவலகம், வீடுகளில் அதிக எடை தூக்க வேண்டாம். இது மேலும் இடுப்பு வலி அதிகரிக்க காரணமாகிவிடும்.

    * மீண்டும் மீண்டும் குனிந்து, குனிந்து வேலை செய்ய வேண்டாம். இது உங்கள் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும்.

    * நீங்களாக சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைத்து தேய்ப்பது என எதையும் செய்துவிட வேண்டாம். இவை அந்த நேரத்திற்கு இதமாக இருந்தாலும். முழுமையான தீர்வு தரவல்லது இல்லை.

    * வலி சரியாகும் வரை ஓய்வெடுக்கிறேன் என வாரக் கணக்கில் நேரத்தை கடத்த வேண்டாம். ஒரு வாரத்திற்கும் மேலாக உங்களுக்கு இடுப்பு வலி தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
    3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
    இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பஸ் ஓட்டுநர்களும் முதுகுவலிக்கு தப்பிப்பது கிடையாது. தொடர்ந்து இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலி பிரச்சினைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு காரணம் குண்டும், குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது முதுகுதண்டில் வலி ஏற்படும். அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுவதோடு, கணினி முன்னால் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் என்றால், இந்த பிரச்சினை இன்னும் அதிகரித்துவிடும்.

    இதேபோல், புல்லட் போன்ற எடை அதிகமான இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது பைக் அதிர்வுகளும், குதிப்பதும் குறைவாக இருக்கும். இதனால், முதுகு வலி பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு குறைவு. முதுகுவலி பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, எடை அதிகமான மோட்டார் சைக்கிளை பயன்படுத்தலாம். அடி முதுகுக்கு என்று தனியாக விற்பனை செய்யப்படும் ‘லம்பர் சப்போர்ட்’ பெல்ட்டை அணிந்து கொண்டும் பைக் ஓட்டலாம். முதுகுவலி வராமல் தடுப்பதற்கு ‘பேக் எக்ஸர்சைஸ்’ நிறைய இருக்கின்றன. யோகாவும் செய்யலாம்.



    மிகவும் இறுக்கமான பேண்ட், பெல்ட் அணிந்துகொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். இது முதுகுவலி பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதனால், நீண்ட தூரப் பயணங்கள் செய்யும்போது, எப்போதுமே இறுக்கமான உடைகள் அணிந்துகொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம். அடி முதுகு(லம்பர்) பகுதிக்கு எப்போதுமே சப்போர்ட் தேவை. லேட்டஸ்ட் கார்களில் ‘லம்பர் சப்போர்ட்’ கொண்ட இருக்கைகளே வந்துவிட்டன. அதேபோல், அலுவலகத்தில் உட்காரும்போதும் முதுகுக்கு தொல்லை தராத, வசதியான இருக்கையில் உட்கார வேண்டியது முக்கியம். அடி முதுகுக்கு சப்போர்ட்டாக சின்ன தலையணையைக் கூட பின்பக்கமாக வைத்துக்கொள்ளலாம். அல்லது பெரிய துண்டை மடித்து பின் பக்கம் சப்போர்ட்டாக வைத்துக்கொள்ளலாம்.

    தொடர்ந்து இருசக்கர வாகனம் அல்லது கார் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்டுவது என்பது வாகனத்துக்கும், ஓட்டுபவருக்கும் நல்லதல்ல. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்திவிட்டு கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். குண்டும், குழியுமான மோசமான சாலைகள் வழியாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்றால், முடிந்தவரை அந்த வழியை தவிர்த்துவிடுவது நல்லது. குண்டும், குழியுமான சாலைகள்தான் முதுகுவலி தொல்லைகள் ஏற்பட முக்கிய காரணம்.
    மணிக்கட்டில் ஏற்படும் வீக்கம் எதனால் ஏற்படுகிறது? இது வெளிப்படுத்தும் விஷயம் என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உடலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் ஏதேனும் நேர்மறை, எதிர்மறை தாக்கத்தை தான் உண்டாக்குகிறது. அந்த வகையில் மணிக்கட்டில் ஏற்படும் வீக்கம் எதனால்? இது வெளிப்படுத்தும் விஷயம் என்ன? என்பது பற்றி இங்கு காணலாம்…

    சிலருக்கு மணிக்கட்டின் மேற்பகுதி அல்லது கீழ் பகுதியில் வீக்கம் இருக்கும். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், இது சில சமயங்களில் அபாயகரமான பிரச்சனையாக மாறலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    மணிக்கட்டின் மேற்பகுதியில் முண்டு போன்று வீக்கம் ஏற்படுவதை நரம்பணுத்திரள் வீக்கம் அல்லது நரம்பு முடிச்சு வீக்கம் என்கின்றனர். இது போன்ற வீக்கம் மணிக்கட்டின் மேல், கீழ் புறங்களில் அல்லது விரல் நடுவே கூட ஏற்படுகிறது. சிலர்க்கு பாதங்களில் கூட ஏற்படும்.

    ஆங்கில மருத்துவத்தில் இது ஏன் ஏற்படுகிறது என் குறிப்பட்ட தெளிவான காரணம் ஏதும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது. பெரியளவில் காணப்பட்டால்… ஒருவேளை மணிக்கட்டில் ஏற்படும் இந்த வீக்கம் பெரியளவில் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.



    இது, சிலருக்கு சிறியளவில் தான் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு இந்த வலி மணிக்கட்டுப் பகுதியில் மட்டும் இருக்கும், சிலருக்கு விரல்கள் வழியே வலி ஊடுருவவது போன்ற உணர்வை அளிக்கும்.

    ஆங்கில மருத்துவத்தில் இந்த வீக்கத்தில் இருக்கும் திரவ சுரப்பியை நீக்க, வீக்கத்தை குறைக்க அறுவை சிகிச்சையை தான் கையாள்கின்றனர். இதை Ganglionectomy என்கின்றனர். ஆனால், இந்த சிகிச்சைக்கு பிறகும் வீக்கம் மீண்டும் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ஹோமியோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக்கு பதிலாக குறிப்பிட்ட சில பிரத்தியோக மருந்துகள் மூலம் நிரந்தர தீர்வுக் காண முடியும் என கூறுகின்றனர். இதனால், வீக்கத்தை முழுமையாக குறைக்கலாம் என்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    இதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை நீங்களாக மற்றவர் சொல்லி பின்பற்ற வேண்டாம். தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்து. கவனமாக இருக்க
    வேண்டியது அவசியம்.
    ×