search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரையரங்கு"

    திரையரங்குகளில் வாகன பார்க்கிங் கட்டணம் தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TheatreParking
    சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த எஸ்.நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் உரிய வாகன கட்டணம் வசூலிப்பது இல்லை. அதிகப்படியான கட்டணம் வசூலிக்கின்றனர்.

    திரையரங்குகளில் உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது திரையரங்கு ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது.



    திரையரங்குகளில் உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. உள்ளே விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது. குடிநீர் கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் திரையரங்குகளில் உள்ள வாகன பார்க்கிங் கட்டணம் தொடர்பாக அரசு என்ன உத்தரவு பிறப்பித்துள்ளதோ, அந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். #TheatreParking TheatreSnacks

    கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்று ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Kaala #Kumarasami
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. நடிகை ஜெயமாலா உள்பட 25 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



    ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை இங்கு வெளியிடாமல் இருந்தால் நல்லது என்று விநியோகஸ்தர்களுக்கு நான் கூறினேன். இப்போதும் அதைத்தான் கூறுகிறேன்.

    ஆயினும் கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவோம். ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் இன்று (அதாவது நேற்று) இரவோ அல்லது இன்று(வியாழக்கிழமை) காலையிலோ ஒதுக்கப்படும். அதன் பிறகு புதிய மந்திரிகள் தங்களின் பணிகளை தொடங்குவார்கள்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.  #Kaala #Kumarasami 
    ×