search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாவா"

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா நிறுவனம் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இசட்92 என அழைக்கப்படுகிறது. #LAVAZ92 #Smartphone



    லாவா நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. லாவா இசட்92 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் லாவா இசட்92 ஸ்மார்ட்போன் 8.04 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனினை ஒற்றை கையில் இலகுவாக பயன்படுத்த முடியும். கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போனில் எளிதில் கீறல்கள் ஏற்படாது.

    புதிய லாவா இசட்92 ஸ்மார்ட்போன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    லாவா இசட்92 சிறப்பம்சங்கள்:
     
    - 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 3260 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    லாவா இசட்92 ஸ்மார்ட்போன் ஓசன் புளு-பிளாக் கிரேடியன்ட் ஃபினிஷ் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் லாவா இசட்92 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக் மற்றும் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #LAVAZ92 #Smartphone
    லாவா நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Lava #smartphone



    லாவா நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசட் சீரிஸ் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இசட்81 என அழைக்கப்படுகிறது. 

    லாவா நிறுவனத்தின் இசட்81 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்.எம். குவாட்-கோர் பிராசஸர், அதிகபட்சம் 3 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஸ்டூடியோ மோட் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    லாவா இசட்81 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12 என்.எம். பிராசஸர்
    - IMG PowerVR GE-class GPU
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஸ்டார் ஓ.எஸ். 5.0
    - டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    லாவா இசட்81 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கும். இதன் 2 ஜி.பி. வேரியன்ட் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    லாவா நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.4,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #LavaZ60S #smartphone


    இந்தியாவில் லாவா நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசட்61 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஃபுல் வியூ ஃபுல் லேமினேஷன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 5 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் மற்றும் பொக்கே மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    லாவா இசட்60எஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
    - 1 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்பி ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய லாவா இசட்60எஸ் ஸ்மார்ட்போன் கோல்டு மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் லாவா இசட்60எஸ் விலை ரூ.4,949 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய லாவா ஸ்மார்ட்போனினை இந்தியா முழுக்க சுமார் 75,000 விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    லாவா நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாவா இசட் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #lava #smartphone



    லாவா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. முன்னதாக மார்ச் மாதத்தில் லாவாவின் இசட்50 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மற்றொரு இசட் சீரிஸ் ஸ்மாபர்ட்போனினை லாவா அறிமுகம் செய்துள்ளது. புதிய இசட் சீரிஸ் மாடல் லாவா இசட்61 என அழைக்கப்படுகிறது.

    லாவா இசட்61 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஃபுல் வியூ ஃபுல்-லேமினேஷன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 எம்பி ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, ஸ்கிரீன், எல்இடி ஃபிளாஷ் மற்றும் பொக்கே மோட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இதன் ஹோம் ஸ்கிரீனில் லாங்குவேஜ் எனும் ஷார்ட்கட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஷார்ட்கட் கொண்டு ஹோம் ஸ்கிரீனில் சில க்ளிக்-களை செய்து மொபைலின் மொழியை மாற்றிக் கொள்ளலாம். இத்துடன் எஸ்.எம்.எஸ்.-களையும் பயனர் விரும்பும் அல்லது அவர்களுக்கு தெரிந்த மொழியில் வாசிக்கும் வதியை லாவா வழங்குகிறது.



    லாவா இசட்61 சிறப்பம்சங்கள்:

    – 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    – 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
    – 1 ஜிபி / 2 ஜிபி ரேம்
    – 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    – ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ கோ எடிஷன் / ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    – டூயல் சிம் ஸ்லாட்
    – 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    – 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    – 3000 எம்ஏஹெச். பேட்டரி

    பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் லாவா இசட்61 ஸ்மார்ட்போன் விலை ரூ.5,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லாவா இசட்61 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ எடிஷன் ஆகஸ்டு மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

    அறிமுக சலுகை:

    – செப்டம்பர் 30, 2018-க்குள் லாவா இசட்61 ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ஒரு முறை ஸ்கிரீனினை சரி செய்யும் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது.

    – ஜியோ பயனர்களுக்கு ரூ.2,200 வரையிலான உடனடி கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இதை பெற பயனர்கள் ரூ.198 அல்லது ரூ.299 விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். #lava #smartphone
    ×