search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோமாலியா"

    சோமாலியா தலைநகர் மொகடிஷு அருகில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். #Somaliacarblast
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மொகடிஷு நகரில் உள்ள பிரபல ஓட்டல் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், சோமாலியா தலைநகரம்  மொகடிஷுவில் உள்ள பனாதிர் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 
     
    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 5-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Somaliacarblast 
    சோமாலியா நாட்டில் அட்டூழியம் செய்துவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகளை குறிவைத்து அரசுப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டனர். #alShabab #militantskilled
    மொகடிஷு:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர். இவர்களை ஒழிக்கும் பணியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்காவை சேர்ந்த அதிரடிப் படையினரும் இந்த தாக்குதலில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், சோமாலியாவின் தென்பகுதியில் உள்ள அர்ராரே மற்றும் முசே ஹாஜி நகரங்களுக்கு இடையில் அல் ஷபாப் பயங்கரவாதிகளை குறிவைத்து அரசுப்படைகள் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் கவச வாகனங்கள் (பீரங்கி டாங்கிகள்) அழிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.



    முன்னதாக, சோமாலியாவில் அமைதிப்பணியில் ஈடுபட்டு வரும் எத்தியோப்பா நாட்டு ராணுவ வீரர்களை குறிவைத்து புர்ஹாகாபா என்ற இடத்தில் அல் ஷபாப் படையினர் நேற்று நடத்திய ஆவேச தாக்குதலில் 57 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இன்று அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 77 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுபோல் இன்றும் ஜுப்லான்ட் பகுதியில் உள்ள பர்-சங்குனி பகுதியில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் சோமாலியா ராணுவத்தை சேர்ந்த உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #alShabab #militantskilled  
    அமெரிக்கா ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் சோமாலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 10 அல் ஷபாப் பயங்கரவாதிகள் பலியாகினர். #Somalia #USAirStirkes
    மொகடிஷு:

    சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் பயங்கரவாதிகள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.

    இந்நிலையில், சோமாலியா நாட்டின் மேற்கு பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா இன்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 10 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து நடத்திய தாக்குதலில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டன என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. #Somalia #USAirStirkes
    சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #SomaliaBlast #DoubleBombing #PresidentialPalace
    மாஸ்கோ:

    சோமாலியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அல்கொய்தா ஆதரவு பெற்ற அல்ஷபாப் பயங்கரவாதிகள் ஆயுத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் மத அடிப்படையிலான அரசை நிறுவ போராடி வருகின்றனர். இந்த நிலையில், அங்கு தலைநகர் மொகாதிசுவில் அதிபர் மாளிகை அருகே நேற்று வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் அந்தப்பகுதியே குலுங்கியது.

    இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்களில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை, கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த கார் குண்டுவெடிப்புகள், உள்ளூர் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.#SomaliaBlast #DoubleBombing #PresidentialPalace
    சோமாலியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதல்களில் அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்த்த 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Somalia #USAirstrikes
    மொகடிஷூ:

    சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி, அரசுப் படைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவத்திற்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிந்து வருகிறது. பயங்கரவாத முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் வான்தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், தலைநகர் மொகடிஷூவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள பெலத் அமின் சவுத் பகுதியில் அல் ஷபாப் பதுங்கியிருந்த இடங்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை விமான தாக்குதல்களை நடத்தியது. விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதில், 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. பொதுமக்கள் தரப்பில் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் மொகடிஷூ மீது தாக்குதல் நடத்துவதற்காக பெலத் அமின் சவுத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அல் ஷபாப் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    சோமாலியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய படைகளுடன் அமெரிக்க படைகளும் இணைந்து கடந்த சில மாதங்களாக பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தரைவழி தாக்குதல்கள் மற்றும் வான்தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. #Somalia #USAirstrikes
    அமெரிக்கா ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் கடந்த இரு நாட்களில் சோமாலியாவில் 60க்கு மேற்பட்ட அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். #Somalia #USAirStirkes
    மொகடிஷு:

    சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.

    இந்நிலையில், சோமாலியா நாட்டில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 34 பேர், நேற்று நடத்திய தாக்குதலில் 28 பேர் என மொத்தம் 62 அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. #Somalia #USAirStirkes
    அமெரிக்கா ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் சோமாலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 6 அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். #Somalia #USAirStirkes
    மொகடிஷு:

    சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.

    இந்நிலையில், சோமாலியா நாட்டின் ஹரதரே பகுதியில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா இன்று வான்வெளி தாக்குதல் நடத்தியது.

    முதல் கட்ட தாக்குதலில் சுமார் 6 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தொடர்நு நடத்திய தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டன என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. #Somalia #USAirStirkes
    சோமாலியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. #SomaliaBlasts
    மொகடிஷு: 

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியது.

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல்கட்டமாக தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், சோமாலியாவின் மொகடிஷு நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 58 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். #SomaliaBlasts
    வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். #SomaliaBlasts #AntonioGuterres
    ஐக்கிய நாடுகள்:

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியதால் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். 



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியா நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதுபோன்ற தாக்குதலால் சோமாலியா மக்களை அச்சுறுத்தி விடமுடியாது. வெடிகுண்டு தாக்குதலால் அவதிப்பட்டு வரும் அந்நாட்டு அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை என்றும் உறுதுணையாக நிற்கும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அளிக்கும் என தெரிவித்துள்ளார். #SomaliaBlasts #AntonioGuterres
    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகத்தின் அருகே இன்று நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #SomaliaTwinBlast
    மொகடிஷு:

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் சஹாபி என்ற பிரபல உணவகம் அமைந்துள்ளது. இன்று அந்த உணவகத்தின் அருகே இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். 
    #SomaliaTwinBlast
    சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 60க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.#SomaliaMilitants
    மொகடிஷு:

    சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு பயங்கரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.
     
    உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த பயங்கரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர்.



    இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகேயுள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது நேற்று சோமாலியா அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகனில் இருந்து வெளியாகும்  செய்திகள் தெரிவிக்கின்றன. #SomaliaMilitants
    அமெரிக்கா ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் சோமாலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 18 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர்.
    வாஷிங்டன்:

    சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.

    இந்நிலையில், சோமாலியா நாட்டின் கிஸ்மயோ நகரின் லோயர் ஜுபா பகுதியில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா இன்று வான்வெளி தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் சுமார் 18 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. #Tamilnews
    ×