search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோமாலியா"

    சோமாலியா நாட்டில் அரசு அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. #Somaliaexplosion #Mogadishuexplosion
    மொகடிஷு:

    சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹாவ்லே வாடாக் மாவட்டத்தில் உள்ள அம்மாவட்ட தலைமை நிர்வாக அலுவலகத்தின் மீது நேற்று வேகமாக வந்த ஒரு கார் மோதி வெடித்துச் சிதறியது.

    இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 6 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர் என முதல் கட்டமாக தகவல் வெளியானது.

    கார் குண்டு வெடித்து சிதறிய வேகத்தில் அருகாமையில் இருந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனது. ஒரு மசூதியின் மேற்கூரை மற்றும் சில வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

    இந்நிலையில், கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். #Somaliaexplosion #Mogadishuexplosion
    சோமாலியா நாட்டின் தலைநகரில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறிய நகரத்தை அல் ஷபாப் பயங்கரவாதிகள் இன்று கைப்பற்றியுள்ளனர். #AlShabaab #Somalia
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர். 

    இந்நிலையில், நேற்று பிற்பகல் அல் ஷபாப் பயங்கரவாதிகள் தலைநகர் மொகடிஷுவில் இருந்து வடக்கே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முக்கோக்ரி என்னும் சிறிய நகரத்தை கைப்பற்ற அரசுப் படையினர் மீது ஆவேச தாக்குதல் நடத்தினர், இந்த தாக்குதலில் 47 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். எஞ்சியிருந்த படையினர் உயிரிக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதைதொடர்ந்து, முக்கோக்ரி நகரம் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அல் ஷபாப் அறிவித்துள்ளது. #AlShabaab #Somalia
    சோமாலியாவில் இன்று மதியம் கரையை கடக்கும் ‘சாகர்’ புயலின் தாக்கத்தால் கேரளாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar #RailfallWarningKerala
    திருவனந்தபுரம்:

    சமீபத்தில் தென் மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் புயல் ஒன்று உருவாகி உள்ளதாகவும், அதற்கு சாகர் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த புயல் ஏமன் பகுதிக்கு கிழக்கில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தற்போது மேற்கு திசையிலிருந்து தென்மேற்கு திசையை நோக்கி நகர துவங்கியுள்ளது.

    அரபிக்கடலின் தென் மேற்கு திசையை நோக்கி நகரும் சாகர் புயலால், கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் பலத்த மழையும், சூறைகாற்றும் வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆலப்புழா, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ‘சாகர் புயல்’ சோமாலியா நாட்டின் கடற்பகுதியில் கரையை கடக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சாகர் புயல் காரணமாக தமிழகம், கேரளா, கோவா, மஹாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Sagar #RailfallWarningKerala
    சோமாலியா தலைநகர் மொகடிஷு அருகில் உள்ள மார்க்கெட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். #SomaliaMarket #Suicidebomb
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் மொகடிஷு நகரில் உள்ள பிரபல ஓட்டல் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், மொகடிஷுவில் உள்ள வான் லாயென் நகரில் உள்ள மார்க்கெட்டில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியாகினர். மேலும், 10-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #SomaliaMarket #Suicidecarbomb 
    ×