search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டம்"

    மாரத்தான் ஓட்டத்தில் சாதனை படைத்த மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.வுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். #Marathon #MaSubramanian #MKStalin

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாரத்தான் ஓட்டத்தில் சதம் அடித்து, பெருமிதம் அளித்திடும் சாதனை படைத்திருக்கும் தி.மு.க.வின் சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியனுக்கு எனது மகிழ்ச்சியையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரிடம் நாம் கற்றுக்கொண்ட கொள்கை நேர்த்தியும், மன உறுதியும், நேர்மையும் தான் நம் எல்லோரையும் எப்போதும் எள்ளளவும் சோர்வின்றி வழி நடத்துகிறது.

    அதில் மா.சுப்பிரமணியன் தனிச்சிறப்புக்குரியவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். காலையில் உடற்பயிற்சி செய்வதை நான் தவறாமல் பின்பற்றி வருகிறேன். நடைப்பயிற்சி மேற்கொள்வதும் இயல்பு. அப்போது என்னுடன் வரக் கூடியவரான மா.சுப்பிரமணியன், இணையாகவும் வேகமாகவும் நடந்து வருபவர். உடற்பயிற்சியால் உடல் நலத்தைப் பேணிக்காப்பதில் அக்கறை உள்ளவர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோயினை எதிர்கொண்டு வரும் மா.சுப்பிரமணியன், 2004-ம் ஆண்டில் சாலை விபத்தில் சிக்கி வலது கால் மூட்டு துண்டுகளாக சிதறும் நிலைக்கு ஆளானவர். அதன்பிறகு அறுவை சிகிச்சைகளினால் மீண்டவர்.

    அப்படிப்பட்ட நிலையிலும், மன உறுதி தளராமல் 2014-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி முதன் முதலாக 21.1 கி.மீ. தூரத்திற்கான மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்று வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து இந்தியாவின் 18 மாநிலங்களில் நடந்த பல மாரத்தான் போட்டிகளிலும், 10-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடந்த மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்று ஓடியுள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளில் 99 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை பெசன்ட் நகரில் தனது 100-வது மராத்தான் போட்டியை நிறைவு செய்திருப்பது அவருக்கான தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்ல, இளைய தலைமுறைக்கு எந்நாளும் ஊக்கம் தரும் ஏற்றமிகு முயற்சியாகவும் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு மாரத்தான் போட்டியுமே ஏதோ ஒரு சமூக விழிப்புணர்வுக்காகவே நடந்துள்ளது. அதில் நீண்ட தூரம் ஓடுவதன் முலமாக அந்த உணர்வை பொதுமக்களும் பெறச் செய்வதுடன், இளைஞர்களும் தன்னைப் பின் தொடர்ந்து இத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் ஊக்கத்தையும் மா.சுப்பிரமணியன் ஏற்படுத்தி இருக்கிறார்.

    பொதுநல நோக்கத்துடன் ஒவ்வொரு முறையும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல கிலோ மீட்டர் தூரம் ஓடி வரும் மா.சுப்பிரமணியன் தனது 100-வது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்திருப்பது, அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும் உயிர்த்துடிப்புள்ள சாதனையாகும்.

    மா.சுப்பிரமணியனுக்கு தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், கழக இளைஞர்களும் தமிழ் நாட்டின் இளைய தலைமுறையினரும் தங்கள் உடல் நலனைத் தக்கப்படிப் பேணி, அதனை பொதுநலனுக்கு உரிய முறையில் நெடுங்காலம் பயன்படும் வண்ணம் செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #Marathon #MaSubramanian #MKStalin

    5 ஆண்டுகளில் 100 போட்டிகளில் ஓடி மாரத்தான் ஓட்டத்தில் மா.சுப்பிரமணியன் சாதனை படைத்துள்ளார். #Marathon #MaSubramanian

    சென்னை:

    சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் இன்று பெசன்ட்நகரில் நடந்த 21.1 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடினார்.

    பெசன்ட்நகர் ஆல்காட் பள்ளியில் போட்டி தொடங்கியது. 21.1 கிலோ மீட்டர் தூரம் ஓடி அதே இடத்தில் போட்டியை நிறைவு செய்தனர். இந்த தூரத்தை மா.சுப்பிரமணியன் 2.31 மணியில் ஓடி முடித்தார்.

    மா.சுப்பிரமணியனுக்கு இது 100 வது போட்டி ஆகும். கடந்த 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக இருப்பவர். 2004-ல் நடந்த சாலை விபத்தில் கால்  உடைந்தது.

     


    இருப்பினும் தனது மன வலிமையால் 2014 பிப்ரவரி 9-ந்தேதி மாரத்தான் போட்டி ஓட தொடங்கினார். தொடர்ந்து இளைஞர்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாரத்தான் போட்டிகளில் ஓடி வருகிறார்.

    5 ஆண்டுகளில் 25 முறை 21.1கி.மீ. தூரம் பங்கேற்று ஓடியதற்காக, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்ற 21.1 கி.மீ. தூரம் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு 29-வது மாரத்தான் போட்டியை முடித்து ஆசியா புக் ஆப் ரெக்கார்டு 50-வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்து, வேல்டு ரெக்கார்ட்ஸ் யுனிவர்சிட்டியால் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார்.

     


    மேலும் இண்டர் நே‌ஷனல் கோல்டன் டிஸ்க் விருதை வேல்டு ரெக்கார்டு யூனியன் வழங்கியது. வேல்டு கிங் டாப் ரெக்கார்டு 2018 எனும் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

    இம்மாரத்தான் சாதனைகளைப் பாராட்டி திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

    மாரத்தான் போட்டிகளில் சாதனை படைத்த மா.சுப்பிரமணியனுக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர். #Marathon #MaSubramanian

    ×