search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணர்"

    இத்துதியை திருமணம் ஆக வேண்டிய காளையரும், கன்னியரும் தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
    தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ணருக்மிணீ
    ப்ரியவல்லபவிவாஹம் தேஹிமே
    ஸீக்ரம்வாஸுதேவ நமோஸ்துதே.
    ஸ்ரீக்ருஷ்ண பூஜா கல்பம்

    பொதுப்பொருள்:

    தேவகியின் மைந்தனான கிருஷ்ணா, ருக்மிணிக்குப் பிரியமானவனே, நமஸ்காரம். எனக்கு சீக்கிரம் திருமணம் நிகழ அருள்புரிவாய் வாசுதேவனே! தங்களை வணங்குகிறேன்.
    கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்று நமக்குத் தெரியும். இது தவிர பிறபல சிறப்புகள் உள்ளன. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்று நமக்குத் தெரியும். இது தவிர பிறபல சிறப்புகள் உள்ளன அவை:

    1. ஆதிசங்கரர் ஞானபீடத்தை நிறுவிய நாள்.
    2. மாவலிச் சக்கரவர்த்தி முடிசூடிய நாள்.
    3. புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற நாள்.
    4. சமண மத மகாவீரர் நிர்வாணம் அடைந்ததும் வீடு பேறும் அடைந்த தினம்.

    5. குருகோவிந்த்சிங் சீக்கியமத அமைப்பான 'கல்சா'வை அமைத்த தினம்.
    6. சாவித்திரி யமனிடம் வாதிட்டு சத்தியவான் உயிரை மீட்டநாள்.
    7. நசிகேதன் யமனுலகுக்குச் சென்று வரம் பெற்று திரும்பிய நாள்.
    8. கோவர்த்தன பூஜை செய்யும் நாள்.

    9. மாவலிபூஜை செய்யும் நாள்.
    10. வங்காளத்தில் காளி பூஜை செய்யும் நாள்.
    11. ராமர் சீதையை ராவணனிடமிருந்து மீட்டு அயோத்தி திரும்பிய நாள். (ராமாயண காலத்திற்கு பிறகுதான் தீபாவளி வந்தது. ஆனால் சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாள். ஐப்பசி மாதம் திரியோதசி, சதுர்த்தி, அமாவாசை, சுக்கிலபட்ச பிரதமை நாள்)
    12. தீபாவளி தினத்தை அரசு விடுமுறை என அறிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடும்படி செய்தது மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர் என அவர் எழுதிய 'அயினி அக்பர்' என்ற நூல் கூறுகிறது.
    கலியுகம் எப்படி இருக்கும் என்பதை தங்கள் கண்களால் பார்க்க வைத்து, அதற்கு சரியான விளக்கத்தையும் அளித்த கிருஷ்ணன் செய்த அற்புதத்தை பார்க்கலாம்.
    பாண்டவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் கிருஷ்ணர். அப்போது அவர்களில் பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வருக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

    அதை அவர்கள் கிருஷ்ணரிடம் கேட்கவும் செய்தனர். ‘பரந்தாமா! இன்னும் சில காலத்தில் துவார யுகம் முடிந்து கலியுகம் தொடங்க உள்ளது. அந்த கலியுகம் எப்படி இருக்கும்?’ என்று கேட்டனர்.

    அதற்கு கிருஷ்ணர், ‘கலியுகம் பற்றி சொல்வது என்ன? அது எப்படியிருக்கும் என்று உங்களுக்கு நேரடியாகவே காட்டுகிறேன்’ என்றார்.

    பின்னர் நான்கு அம்புகளை எடுத்து, நான்கு திசைகளில் எய்தார். இப்போது நால்வரிடமும் திரும்பி, நீங்கள் நான்கு திசைக்கு ஒருவராக சென்று, அங்குள்ள அம்புகளைக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிட்டார். அதன்படியே நால்வரும் திசைக்கு ஒருவராகச் சென்றனர்.

    முதலில் பீமன், தான் சென்ற திசையில் இருந்த அம்பை எடுத்துக் கொண்டு திரும்பும் போது ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

    அடுத்து அர்ச்சுனன் தான் சென்ற திசையில் இருந்த அம்பை எடுத்தான். அப்போது ஒரு குயிலின் அற்புதமான இசைக் குரலைக் கேட்டான். அந்த ஒலி வந்த திசையில் பார்த்தபோது திடுக்கிட்டான். அங்கு இனிய குரல் கொண்ட குயில், ஒரு வெண் முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. ‘மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய குணமா?’ என்ற குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

    அடுத்தது சகாதேவன். அவனும் கிருஷ்ணர் எய்த ஒரு அம்பை எடுத்தபடி திரும்புகையில் ஒரு காட்சியைக் கண்டான். பசு ஒன்று அழகிய கன்றை ஈன்றெடுத்தது. தன் நாவால் கன்றை வருடி சுத்தம் செய்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் நாவால் வருடுவதை, தாய் பசு நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அப்போது கன்றின் உடலில் காயங்கள் உண்டாகியிருந்தது. ‘தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?’ என்ற குழப்பத்தோடு சகாதேவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

    இறுதியாக நகுலன் தனக்கான அம்பை எடுப்பதற்காகச் சென்றான். அந்த அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் கிடந்ததைக் கண்டான். அதை எடுக்க முன்னேறியபோது, மலையின் மீது இருந்து ஒரு பெரிய பாறை வேகமாக உருண்டு கீழே வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்து உடைத்து தள்ளி விட்டு அது வேகம் பிடித்து வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறிய செடியில் மோதி அந்தப் பாறை நின்று விட்டது. நகுலனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். ‘சிறிய செடி எப்படி இந்த பாறையைத் தாங்கி நிறுத்தியது?’ என்ற குழப்பத்தோடு கிருஷ்ணரிடம் வந்தான்.

    இப்போது பாண்டவர்களில் நான்கு பேரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சிகளையும், அவற்றால் மனதில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையும் கிருஷ்ணரிடம் கூறினார்கள். அதற்கு தகுந்த விளக்கத்தை அளிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர்.

    அனைத்தும் அறிந்த கிருஷ்ண பகவான், மெல்லிய சிரிப்போடு அவர்கள் நான்கு பேரும் கண்ட காட்சிகளைப் பற்றி விளக்கத் தொடங்கினார்.

    முதலில் பீமனிடம் இருந்து தொடங்கினார். ‘பீமா! கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் உள்ள செல்வம் அபரிமிதமாக இருந்தாலும் கூட, அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வத்தை ஈட்டி சேமித்து வைப்பார்கள். நீ கண்ட கிணறுகளைப் போல. ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வந்தர்களாக மாறிக் கொண்டே இருக்க, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்.’

    அடுத்தது அர்ச்சுனன் கண்ட காட்சிக்கான விளக்கத்தைக் கூறினார். ‘அர்ச்சுனா! கலியுகத்தில் போலி மத குருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் நீ கண்ட குயிலைப் போல, இவர்கள் மக்களை ஏமாற்றி, சுரண்டி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள்.’

    இப்போது சகாதேவனுக்கான விளக்கத்தை கூறினார் கிருஷ்ணர், ‘சகாதேவா! கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண் மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால், அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். நீ கண்ட பசு- கன்றைப் போல, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்.’

    இறுதியாக நகுலனுக்கான விளக்கம். ‘நகுலா! கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தில் இருந்தும், நற்குணத்தில் இருந்தும் விலகுவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும், அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இப்படிப்பட்டவர்களை, பாறையை நிறுத்திய சிறிய செடியைப் போல, இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும்.’

    கலியுகம் எப்படி இருக்கும் என்பதை தங்கள் கண்களால் பார்க்க வைத்து, அதற்கு சரியான விளக்கத்தையும் அளித்த கிருஷ்ணனை, நான்கு பேரும் வணங்கி நின்றனர்.
    கிருஷ்ண பகவானை துதித்து இவர் எழுதிய மந்திரத்தை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை நினைத்து உச்சரித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது உறுதி.
    பாண்டவர்களில் ஒருவர் சகாதேவர். சிறந்த ஞானம் உள்ளவர். பலவித ஜோதிட சாஸ்திரம் எழுதி ஜோதிடக்கலையில் வல்லவராக திகழ்ந்தார். கிருஷ்ண பகவானை துதித்து இவர் எழுதிய மந்திரத்தை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை நினைத்து உச்சரித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது உறுதி. அந்த சக்திவாய்ந்த மந்திரம் இதோ...

    ஓம் நமோ விஸ்வரூபாய
    விஸ்ய சித்யந்த ஹேதவே
    விஹ்வேஸ்வராய விஸாவாய
    கோவிந்தாய நமோ நமஹ நமோ
    விக்ஞான ரூபாய
    பரமானந்த ரூபிணே
    கிருஷ்ணாய கோபிநாதாய
    கோவிந்தாய நமோ நமஹ

    ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம், பூரி ஜகன்னாதர் ஆலயம். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம், பூரி ஜகன்னாதர் ஆலயம். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு. அந்தக் கோவிலின் கருவறை தான், துவார யுகத்தில் வாழ்ந்த கிருஷ்ணனின் ஆயுள் முடிவுற்ற இடம் என்று நம்பப்படுகிறது.

    கிருஷ்ணர் அவதார முடிவில், அந்த உடலை விட்டு நாராயணர் சென்ற பின்னர், யாதவ குலத்தினர், அவர் உடலுக்கு மரியாதை செய்து, கங்கையில் விட்டனர். கிருஷ்ணரோ இயற்கையான ‘வாசி யோகி’. ஒரு வாசி யோகியின் உடலுக்கு அழிவு கிடையாது.

    அது எப்போதும் நல்ல சக்தியை பரப்பிக்கொண்டிருக்கும். கங்கையில் கிருஷ்ணரின் உடல் விடப்பட்டதை கண்டுகொண்டிருந்த ஒருவர், அந்த உடலை மீட்டு, அதை சமாதி வைத்து ஒரு ஆலயமாக எழுப்பினார். ஆலய கருவறையை ‘சங்கு’ வடிவில் அமைத்தார். கோவிலை அமைத்தவர் போகர் சித்தர் என்று சொல்கிறார்கள். 
    பகவான் கிருஷ்ணன் வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தருகிறார். அப்போது நீராடி இறைவனைப் பூஜித்தபடி இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.
    கிருஷ்ணபெருமானுக்கு மிகவும் பிரியமான மாதம் வைகாசி மாதமே. இந்த மாதத்தில் பகவான் மனிதர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி கங்கை, யமுனை, காவேரி, சிந்து, கோதாவரி, சரஸ்வதி, துங்கபத்ரா, கிருஷ்ணா போன்ற எல்லா புனித நதிகளையும் அழைத்து வைகாசி மாதத்தில் சூரிய உதயம் முதல் ஆறு நாழிகை வரை எல்லா தீர்த்தங்களிலும் தங்கி இருக்கும்படி கூறினார். அந்த சமயத்தில் புனித நதிகளில் நீராடுபவர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பேன் என்றும் விஷ்ணு கூறினார்.

    பகவான் கிருஷ்ணன் வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தருகிறார். அப்போது நீராடி இறைவனைப் பூஜித்தபடி இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.    
    ×