search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெட்மையர்"

    பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 77 ரன்னில் சுருண்டது. #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்திருந்தது. 2-ம் நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் 289 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹெட்மையர் 81 ரன் எடுத்தார்.


    ஜோசப்

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 30.2 ஓவரில் 77 ரன்னுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக ஜென்னிங்ஸ் 17 ரன் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் ரோச் 11 ஓவர் வீசி 17 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், ஜோசப் தலா 2 விக்கெட்டும், கேப்ரியல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


    ஹோல்டர்

    212 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி இதுவரை 339 ரன் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 4 விக்கெட் உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வலுவான நிலையில் உள்ளது. இன்று 3-ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. பிராத்வைட், அறிமுக வீரர் கேம்ப்பெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேம்ப்பெல் 44 ரன்கள் எடுத்த நிலையிலும், பிராத்வைட் 40 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.


    ஷாய் ஹோப்

    ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அதேபோல் ரோஸ்டன் சேஸ் (54), ஹெட்மையர் (56 அவுட் இல்லை) ஆகியோரும் அரைசதம் அடித்தனர். ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 82.4 ஓவர் வரை 240 ரன்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது. அதன்பின் 6 ஓவர்களுக்குள் விரைவாக நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.


    பென் ஸ்டோக்ஸ்

    இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் 89.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. ஹெட்மையர் 56 ரன்களுடன் களத்தில் உள்ளார்.


    ஹெட்மையர்

    இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் யுவராஜ் சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்க விரும்பவில்லை. கார்லஸ் பிராத்வைட்டை ரூ.5 கோடிக்கு கொல்கத்தா ஏலம் எடுத்தது. #IPL2019 #IPLAuction2019
    ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுவராஜ் சிங்கிற்கு அடிப்படை விலையாக 1 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அவரை எந்த அணி உரிமையாளர்களும் ஏலம் எடுக்க விரும்பவில்லை. இதனால் அவர் ஏலம் போகவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி கேப்டனான கார்லஸ் பிராத்வைட்டை எடுக்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டின. இறுதியில் கொல்கத்தா அணி ஐந்து கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஹென்ரிக்ஸை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    ஐபிஎல் ஏலத்தில் ஹனுமா விஹாரி 2 கோடி ரூபாய்க்கும், ஹெட்மையர் 4.20 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டார்கள். #IPL2019 #IPLAuction2019
    2019 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் வீரராக மனோஜ் திவாரி ஏலம் விடப்பட்டார். இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோல் புஜாரா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் ஏலம் போகவில்லை.

    அடுத்து ஹனுமா விஹாரி ஏலத்திற்கு வந்தார். இவருக்கு அடிப்படை விலையாக ரூ. 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன், டெல்லி கேப்பிட்டல், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஹெட்மையர் ஏலத்திற்கு வந்தார். இவருக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்காள தேசம் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக்கைப்பற்றியது. #BANvWI
    வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. ஷத்மான் இஸ்லாம் (76), ஷாகிப் அல் ஹசன் (80), லித்தோன் தாஸ் (50), மெஹ்முதுல்லா (136) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காள தேசம் 154 ஓவரில் 508 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரோச், வாரிகன், பிஷு, பிராத்வைட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. மெஹிது ஹசன் மிராஸ் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 111 ரன்னில் சுருண்டது. ஷாய் ஹோப் (10), ஹெட்மையர் (39), டவ்ரிச் (37) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். மெஹிது மிராஸ் மிராஸ் 7 விக்கெட்டும், சாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    397 ரன்கள் பின்தங்கியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி பாலோ-ஆன் ஆகி 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 2-வது இன்னிங்சிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹெட்மையர் மட்டும் தாக்குப்பிடித்து 92 பந்தில் 9 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 93 ரன்கள் குவித்தார்.


    ஹெட்மையர்

    ரோச் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க 213 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காள தேசம் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கள் சாய்த்த மெஹிது ஹசன் மிராஸ் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை வங்காள தேசம் 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரரான ஹெட்மையருக்கு பொறுமை தேவை. அவர் ஆடுகளத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என லாரா தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒருநாள் போட்டியில் அதிரடி காட்டிய இளம் வீரரான ஹெட்மையர் 7 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.



    மைதானத்தில் இறங்கியதும் அனைத்து பந்துகளையும் அடித்து விளையாட நினைக்கிறார். இந்நிலையில் ‘‘ஹெட்மையர் பொறுமை காக்க வேண்டும். அவராகவே கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’’ என்று லாரா தெரிவித்துள்ளார்.
    ×