என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 132635
நீங்கள் தேடியது "செவியா"
கோபா டெல் ரே கோப்பைக்கான காலிறுதி ஆட்டத்தின் முதல் லெக்கில் பார்சிலோனாவை 2-0 என வீழ்த்தியது செவியா. #Barcelona
கோபா டெல் ரே கோப்பைக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - செவியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணியும் அவரவர் சொந்த மைதானத்தில் தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டிகளில் எந்த அணி அதிக கோல் அடித்துள்ளதோ, அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
அதன்படி பார்சிலோனா - செவியா இடையிலான முதல் லெக் செவியாவிற்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் செவியா 2-0 என வெற்றி பெற்று பார்சிலோனாவிற்கு அதிர்ச்சி அளித்தது.
ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் செவியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பப்லோ சராபியா 58-வது நிமிடத்திலும், விஸ்சாம் பென் யாட்டர் 76-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
பார்சிலோனா தொடர்ந்து நான்கு முறை கோபா டெல் ரே கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருந்த பார்சிலோனாவிற்கு செவியா முட்டுக்கட்டை போட்டுள்ளது.
பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறும் 2-வது லெக்கில் செவியாவிற்கு எதிராக மூன்று கோல் அடித்தால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பார்சிலோனா உள்ளது.

×

X