என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 132687
நீங்கள் தேடியது "ரிச்சர்ட்சன்"
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. #AUSvSL
இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. பகல் - இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பேட்டிங் தேர்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமானே 12 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சண்டிமல் 5 ரன்னிலும், கருணரத்னே 24 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், தனஞ்ஜெயா டி சில்வா 5 ரன்னிலும் வெளியேறினர்.
ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள்
அதன்பின்னர் ரோசன் சில்வாவுடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்த ரோசன் சில்வா 56 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். ஒருபுறம் டிக்வெல்லா நிலைத்து நிற்க மறுபக்கம் பெரேரா 1 ரன்னிலும், லக்மல் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 106 ரன்னுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டார்க்
இதற்குமேல் நின்று ஆடினால் பலனில்லை என்பதை புரிந்து கொண்ட டிக்வெல்லா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த டிக்வெல்லா 64 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை அணி 144 ரன்கள் எடுத்திருந்தது. சமீரா ரன்ஏதும் எடுக்காமல் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது.
டிக்வெல்லா
ஆஸ்திரேலிய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

இலங்கைக்கு எதிரான பிரிஸ்பேன் முதல் டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய லெவன் அணியில் புதுமுக வீரர்களான ரிச்சர்ட்சன், கர்ட்டிஸ் பேட்டர்சன் இடம்பிடித்துள்ளனர் #AUSvSL
ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான பகல்-இரவு ஆட்டமாக நடக்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து காயம் காரணமாக ஹசில்வுட் விலகியுள்ளார். மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார்.
இதனால் பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் துணைக்கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய கர்ட்டிஸ் பேட்டர்சன், இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் விராட் கோலியை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் நாளைய போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரிச்சர்ட்சன், பேட்டர்சன் பெயர் இடம்பிடித்துள்ளது. இதனால் இருவரும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. மார்கஸ் ஹாரிஸ், 2. ஜோ பர்ன்ஸ், 3. கவாஜா, 4. மார்னஸ் லாபஸ்சேக்னே, 5. டிராவிஸ் ஹெட், 6. கர்ட்டிஸ் பேட்டர்சன், 7. டிம் பெய்ன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 8. பேட் கம்மின்ஸ், 9. மிட்செல் ஸ்டார்க், 10. ரிச்சர்ட்சன், 11. நாதன் லயன்.

முதுகுவலி காரணமாக இலங்கை தொடரில் இருந்து ஹசில்வுட் விலகியுள்ளார். ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 24-ந்தேதி பிரிஸ்பேனில் (பகல்-இரவு ஆட்டம்) தொடங்குகிறது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் விலகியுள்ளார். முதுகுவலி காரணமாக அவதிப்பட்ட ஹசில்வுட்டுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில் காயத்தின் தன்மை அதிகமாகியிருப்பது தெரிய வந்தது.
ரிச்சர்ட்சன்
அவருக்குப்பதில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் விராட் கோலியை மிகவும் அருமையான வகையில் பந்து வீசி வீழ்த்தியவர் ரிச்சர்ட்சன். இதனால் டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

×

X