search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாராகி"

    நமீதா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அகம்பாவம்’ படத்தின் இயக்குனர் வெளியேற்றப்பட்டுள்ளார். #Namitha #Agambavam
    ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் `அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் இது. பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை படமாக உருவாக்கி வருகிறார்கள்.

    இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வில்லனாக நடித்து தயாரித்தும் வருகிறார் வாராகி. ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ் இயக்கி வந்தார். தற்போது இப்படத்தில் இருந்து ஸ்ரீமகேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார். 

    இதுகுறித்து தயாரிப்பாளர் வாராகி கூறும்போது, ‘இயக்குனர் ஸ்ரீமகேஷ், பட வாய்ப்பு இல்லாமல் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். அவருடைய வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த, இப்படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தேன். குடிக்காமல் படப்பிடிப்பை முடித்து தரும்படி கேட்டுக் கொண்டு ஒப்பந்தம் செய்தேன். ஆனால், அவர் ஒப்பந்தத்தை மீறி தினமும் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். இதனால், இந்த படத்தில் இருந்து அவரை நீக்கி விட்டேன். நானே இப்படத்தை இயக்கவும் முடிவு செய்துவிட்டேன்’ என்றார்.



    தயாரிப்பாளர் வாராகி இதற்கு முன், ‘சிவா மனசில புஷ்பா’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அகம்பாவம்’ படத்தில் மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சின்னு சதீஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்தியன் பாஸ்கர் சண்டைக் காட்சிகளை அமைத்து வருகிறார்.
    எதிரிகளின் தொல்லை, துன்பம், கஷ்டம் வரும் போது வாராகிமாலையில் உள்ள மிருககுண மாரணம் 17 என்ற பாடலை பாடி வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.
    மிருககுண மாரணம் 17:-

    “பாடகச் சீரடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
    ஓடவிட்டே கை உலக்கை கொண்டு உதிரமெல்லாம்
    கோடகதிட்டு வடித்தெடுத்து ஊற்றி குடிக்கும் எங்கள்
    ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் என் அம்பிகையே…”

    விளக்கம்:- வாராகி என்னும் பஞ்சமியை தொழுத அன்பர்கள் பகைவரை ஓடவிட்டு தன் கையில் இருக்கும் உலக்கை கொண்டு அடித்து உதிரத்தை குடித்தும் தன் நெஞ்சில் பூசியும் தன் ஆவேசத்தை தீர்த்து கொள்பவள் இந்த வாராகி.

    பயன்பாடு:- பகைவர் வேண்டும் என்றே துன்புறுத்தும் போது அன்னையை இப்பாடலை பாடி வணங்கலாம்.
    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் மாறந்தை என்னும் கிராமத்தில் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் மாறந்தை என்னும் கிராமத்தில் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இது 108 திவ்யதேச ஆலயங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் ஆலயத்தின் துணைக் கோவிலாகும். ஆலயத் தில் 9 அடி ராஜகோபுரம் மிகவும் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து செல்கையில் தெற்கு திசையில் விநாயகர் சன்னிதி உள்ளது. இதையடுத்து ஈசான மூலையில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது. தொடர்ந்து பலிபீடம் காணப்படுகிறது.

    அடுத்ததாக கருவறை மண்டபம். இதன் மத்தியில் பெருமாளை வணங்கியபடி கருட பகவான் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். கருவறை மண்டபத்தின் தெற்கு திசையில் ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இவர் நின்ற கோலத்தில் கதாயுதத்தை கையில் தாங்கியவாறு உள்ளார். பக்தர்கள் தங்கள் மனக்குறை விலக, இந்த ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகிறார்கள்.

    ஆஞ்சநேயரைக் கடந்ததும், பெருமாள் சன்னிதியைக் காணலாம். கருவறையில் வராக மூர்த்தியாய் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறார். இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும், வலது காலை தொங்க விட்டு, மடியில் தாயாரை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் அற்புத தரிசனம் அது. தாயாரின் ஆனந்த அமர்ந்த கோலம் மற்றும் சவுந்தரியமான பார்வை சேவிக்கும் பொழுது, நம்முள் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

    ஆலயத்தில் அருளும் தாயாரின் திருநாமம் ஆதி லட்சுமி. தாயார் பெருமாளிடம் ஒன்றியே சேவை சாதிப்பதால் அவருக்கென்று தனிச் சன்னிதி இல்லை. பெருமாள், கல்யாண குணம் கொண்டவராக இந்த ஆலயத்தில் திகழ்கிறார். பெருமாளுக்கு வலது புறத்தில் சக்கரத்தாழ்வார் அருள்கிறார்.

    ஆலயத்தின் தல விருட்சம் வில்வ மரமாகும். இந்தக் கோவிலில் முக்கியமான 2 பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. ஒன்று காலசர்ப்ப தோஷம் நிவர்த்தி, மற்றொன்று திருமணம் கைகூட பெருமாள் மற்றும் தாயாருக்கு மாலை சமர்ப்பித்தல். காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டி தோஷ நிவர்த்தியடைகின்றனர். திருமணம் கைகூட வேண்டுபவர்கள், இரண்டு மாலைகளுடன் திருக்கோவிலுக்கு வர வேண்டும். அந்த மாலைகள் பெருமாள் மற்றும் தாயாரிடம் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து ஒரு மாலையைத் திருப்பித் தரப்படும். அதை பத்திரமாக வீட்டில் வைக்க வேண்டும். இந்த பிரார்த் தனையை தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் மேற்கொள்ள வேண்டும். முடிவில் ஆனந்தமான செய்தி உங்களை வந்தடையும்.

    புரட்டாசி மாதம் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் பெருமாளுக்கு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் வரும் மூல நட்சத்திரத்தன்று வடைமாலை சாத்தப்படுகிறது. ஆவணி மாத மூலமும், அனுமன் ஜெயந்தியும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்- சாயல்குடி இடையில் கடலாடி அமைந்துள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
    வாராகி பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வாராகிக்கு உகந்த மந்திரங்களை பார்க்கலாம்.
    பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

    தியான சுலோகம்

    முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
    கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

    மந்திரம்


    ஓம் வாம் வாராஹி நம:
    ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

    காயத்ரி மந்திரம்

    ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
    சினிமாவில் இருந்து விலகி, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நமீதா, ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கும் `அகம்பாவம்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. #Agampavam #Namitha
    ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் `அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். 
    திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்காக 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்துள்ளார்.

    ஸ்ரீமகேஷ் இயக்கும் இந்த படத்தில் படத்தின் தயாரிப்பாளரான வாராகி, கொடூரமான வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.



    ஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சின்னு சதீஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    ஸ்ரீமகேஷ் இதற்கு முன்பாக சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பரபரப்பான சமூக போராட்டம் கொண்ட விதையாக உருவாக இருக்கிறது அகம்பாவம். 

    பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து  அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் படத்தின் கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. 



    இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பண்ருட்டி, தேனி, கல்வராயன் மலை, சேலம் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. #Agampavam #Namitha

    வாராகி வழிபாடு ஒரு மனிதனை நிகராற்ற ஞானியாக ஆற்ற கூடிய வழிபாடு, அந்த கால விதிகளை கடைபிடித்தால் மட்டுமே அன்னை நமக்கு நலம் அருள்வாள்.
    வாராகி வழிபாடு ஒரு மனிதனை நிகராற்ற ஞானியாக ஆற்ற கூடிய வழிபாடு, அந்த கால விதிகளை கடைபிடித்தால் மட்டுமே அன்னை நமக்கு நலம் அருள்வாள். வாராகி பற்றி ஒருசில பக்தர்கள் கோபநிலை, அதிகம் உக்ரம் பெருகுதல், ஏவல் தெய்வம் இப்படி எல்லாம் சொல்ல கேள்விபட்டு இருக்கிறேன். உண்மை என்னவென்றால் வாராகி அன்புக்கு குழந்தை. அவளுக்கு உரிய இலக்கணம் நம்மிடத்தில் இருந்தால் இவ்வுலகமில்லை. ஏழு லோகத்திலும் அவரை

    வாராகி ஏவல் தெய்வம் என்று பலர் கூறகேட்டேன். அது உண்மை இல்லை. ஏவல், பில்லி எனும் கெட்ட சக்திகளை அழிக்கவே அன்னை அவதாரம். ‘‘பெற்ற பிள்ளைக்கு இவ்வுலகில் கெடுதல் செய்யும் தாய் உண்டோ?’’, பூலோகம் காக்க அவதரித்த தாய் அதை அழிப்பாளா? அவள் அழிக்க பிறந்தது, அதர்மத்தை மகா சத்ருகளை ஏவல், ஏவி விடும் சத்ருகளை மட்டுமே. ஆக நீங்கள் அன்னையை கவலை இன்றி வழிபடலாம்.

    வாராகி வழிபாடு முறைகள் :

    1. வாராகி வழிபாடு வீட்டில் செய்ய ஒரு தனி இடம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
    2. எந்த இடத்தில், எந்த நேரத்தில் செய்கி றோமோ அதே இடத்தில் தான் தினசரி செய்ய வேண்டும்.
    3. வழிபாட்டிற்கு அன்னையின் படம், அல் லது விளக்கு ஜோதி வடிவாகவே வழிபாடு செய்யலாம், நாம் வடக்கு, மேற்கு நோக்கி அமரலாம்.
    4. காலை, மாலை குளிக்கின்றபோது தண்ணீரில் துளசி, வில்லம் ஒரு கைபிடி போட்டு குளிக்க வேண்டும்.
    5. பூஜை அறையில் அன்னை படத்தை வைப்பதை காட்டிலும் தனி அறையில் பூஜை செய்வதுதான் சிறப்பு.
    6. அன்னைக்கு அருகில் ஒரு விநாயகர் சிலை, அல்லது படத்தை வசதிக்கு ஏற்றார்போல் வைத்து கொள்வது நலம்.
    7. தினசரி பூஜை செய்யும் இடத்தில் பன்னீரில் மஞ்சள் தூள் கலந்து 5 ஏலக்காய் நுணுக்கி அதில் போட்டு அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
    8. வெள்ளிக்கிழமை, பஞ்சமி தோறும் மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
    9. பூஜை செய்யும் போது நீலம் மற்றும் சிகப்பு நிற ஆடையை பயன்படுத்துவது நலம்.
    10. தர்பை பாய், அல்லது கம்பளி போர்வை ஆசனத்திற்கு பயன்படுத்த நலம்.
    11. சுத்தமான மஞ்சள், குங்குமம் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.
    12. சாம்பிராணி புகையில், வெண்கடுகு, வெள்ளை குங்கிலியம் சேர்த்து போடுவது சிறப்பு.
    13. வாராகி அன்னை படம், விநாயகர் படம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்க வேண்டும்.



    பூஜை முறை :

    1. பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியம் எல்லாம் சேகரித்து வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
    2. முதலில் குருவை- மானசீகமாக வழிபாடு செய்து “குருவடி சரணம் திருவடிசரணம்” என்று 9 முறை கூறவும்.
    3. பின்பு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு 21 முறை விநாயகாய நம என கூறி அர்ச்சிக்க வேண்டும்.
    4. விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும்.
    5. வாராகி அன்னையை துளசி, வில்லம், நீலசங்கு பூ மூன்றையும் கலந்து “வாராகி மூல மந்திரம் மற்றும் “வாராகி மாலை” பாடி அர்ச்சனை செய்ய வேண்டும்.
    6. பூஜையில் அமர்ந்த பின் எழக் கூடாது.
    7. அர்ச்சனை முடித்த பிறகு அன்னைக்கு பிடித்த நைவேத்தியம் வைத்து தீபஆராதனை காண்பித்து வாராகி தேவி பாதம் பணிந்தேன் என கூறி பணிந்து கீழே விழுந்து வணங்க வேண்டும்.
    8. பஞ்சமி, அம்மாவாசை அன்று, ஒரு ஐந்து நபருக்கு உணவளித்தால் நலம்.
    9. கீழே விழுந்து வணங்கிய பிறகு, சங்கு நாதம் ஒலிக்க வேண்டும், அல்லது மணி இசைத்து மீண்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.
    10-. பின் நைவேத்தியம் பகிர்ந்து கொடுத்து நாமும் உண்ணலாம்.
    11. கண்டிப்பாக நேரம் தவறக்கூடாது, ஆரம்ப நாளில் எந்த நாளில் நேரத்தில் செய்தீர்களோ அதே நேரத்தில்தான் செய்ய வேண்டும்.
    12. ஒருவேளை வெளியூர் சென்றால் ஒரு அம்மன் ஆலயம் சென்று வழிபாடு செய்து மாற்றிக் கொள்ளலாம். இந்த எளிமையான வழி பாட்டை அனைவரும் செய்து அன்னையின் அருளை பெறலாம்.
    13. அன்னையின் கோடிக்கணக்கான மந்திரமும், இந்த வாராகி மாலை ஒன்றுக்கு சமம். ஆக இதே ‘பாமாலை’ சக்தி எண்ணிலடங்கா இது ஒன்றே பூஜைக்கு போதுமானது.

    திரையுல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஸ்ரீரெட்டி நடிக்கும் அவரது வாழ்க்கைப் படத்திற்கு இயக்குநர் வாராகி எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். #SriReddy #Varaki
    தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி திரையுலகில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி செக்ஸ் ரீதியாக பயன்படுத்திக்கொண்டனர் என்று புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் செக்ஸ் புகார் கூறினார்.

    ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறிவிட்டேன் என்று கூறிய அவர். தற்போது சென்னையில் தங்கி இருக்கிறார்.

    ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை தமிழில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். அலாவுதீன் என்பவர் இயக்குகிறார். சித்திரைச்செல்வன், ரவிதேவன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களையும் படத்தில் காட்சிபடுத்துகிறார்கள்.



    இந்த படத்துக்கு தடைவிதிக்க முற்பட்டால் பெரிய விளைவுகள் ஏற்படும் என்று ஸ்ரீரெட்டி எச்சரித்து உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி படத்துக்கு இயக்குநரும், நடிகருமான வாராகி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறியுள்ள ஸ்ரீரெட்டி வாழ்க்கையை படமாக்குவது கலாசாரத்துக்கு எதிரானது. அவரது கதையை படமாக எடுக்கக் கூடாது. மீறி எடுத்தால் அதை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த தலைப்புக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார். #SriReddy #Varaki

    வாராகி மாலையும் அதனை படித்து அன்னையை பூஜிப்பதால் ஏற்படும் அற்புதங்களையும் அவளுக்கு பிடித்த நைவேத்தியம் என்ன வென்று பார்க்கலாம்.
    என் வாராகி பக்த கோடிகளே நான் இரு வாரங்களாக வாராகி மாலை விளக்கங்கள் கொடுத்து வந்தேன். அன்னையின் மாலை கேட்டு கண்ணீர் மல்க என் அன்னையின் மகத்துவத்தை அறிந்து மகிழ்ந்து கூறிய உங்கள் மனதையும் பொற்பாதங்களையும் வணங்கி மகிழ நான் கடமைபட்டுள்ளேன். இவ்வாரம் வாராகி மாலை படித்து அன்னையை பூஜிப்பதால் ஏற்படும் அற்புதங்களையும் அவளுக்கு பிடித்த நைவேத்தியம் என்ன வென்று பார்க்கலாம், மேலும் வாராகி மாலையில் இன்னும் 6 பாடல்கள் உள்ளது. அதை பாடலாக மட்டும் கொடுத்துவிடுகிறேன். எல்லா பாடல்களுமே அன்னை நம்மை காக்கும் கவசமாக நிற்கும் அற்புத பாடல்களே. அதை மட்டும்கொடுத்து அதன் அற்புதங்களை விளக்குகின்றேன்.

    25. ‘‘சிந்தை தெளிந்து வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
    அந்தி பகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
    நிந்தனை பண்ணி மதியாத உலத்தர் நிணம் அருந்தி
    புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹி நற்பொற் கொடியே...’’

    26. ‘‘பொருப்புக்கு மாறுசெய் பாழியும் தோளும் பொருப்பைவென்ற
    மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் எனது
    இருப்புக் கடிய மனதில் குடிகொண்டு எதிர்த்தவரை
    நெருப்புக்குவால் என கொல்வாய் வாராஹி என் நிர்குணியே’’

    விளக்கம்:-
    இப்பாடலை மனம் ஒருநிலைபடுத்த பாடினால் மனம் தெளிந்து ஒற்றுமைபடும். முயற்சித்து அருள் பெருக.

    27. ‘‘தேறிட்ட நின்மலர்ப்பாத அரவிந்தத்தை சிந்தை செய்து
    நீறு இட்டவர்க்கு வினைவருமோ? நின் அடியவர் பால்
    மாறிட்டவர் தமை வாளாயுதம் கொண்டு வாட்டி இரு
    கூறிட்டு எறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.’’

    28. ‘‘நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமாள்
    அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே
    சரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி
    எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே’’

    29. ‘‘வீற்றிருப்பாள் நவகோணத்திலே, நம்மை வேண்டுமென்று
    காத்திருப்பாள் கலி வந்தனுகாமல் என் கண் கலக்கம்.
    பார்த்திருப்பாள் அல்லல் எங்கே என்று அங்கு சபாசம் கையில்
    கோர்த்திருப்பாள், இவளே என்னை ஆளும் குலதெய்வமே’’

    30. சிவஞான போதகி செங்கைப் கபாலி, திகம்பரி நல்
    தவமாகும் மெய்அன்பர்கே இடர்சூடும் தரியலரை
    அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி, இங்கு நலமாய் வந்தெனைக் காக்கும் திரிபுரை நாயகியே...

    (முற்றும்)

    சினிமா உலகில் உள்ள தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு மிரட்டல் விடுத்து அவர்கள் மூலம் பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சி செய்கிறார் என்று வாராகி குற்றம் சாட்டியுள்ளார். #SriReddy
    சமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. 

    இதை தொடர்ந்து தமிழ்சினிமா பக்கம் பார்வையை திருப்பிய ஸ்ரீ ரெட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே முகாமிட்டுள்ளாதுடன் ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டை வீசினார். 

    இவரின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக நடிகரும், தயாரிப்பாளருமான வாராகி, ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை வைத்து படம் தயாரிக்கபோவதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான வாராகி, ராகவா லாரன்ஸுக்கு தமிழ் திரையுலகம் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். இதுபற்றி வாராகி கூறும்போது,

    "சினிமா துறையில் இதுவரை நடக்காத ஒரு விஷயத்தில் ஸ்ரீ ரெட்டி புதுவிதமான முயற்சி எடுத்திருக்கிறார். அதாவது சமூகத்தில் பிரபலமாக உள்ளவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சொல்லி, அதன்மூலம் மிரட்டி வாய்ப்பு தேடுவது என்கிற தவறான முன்னுதாரணத்தை அவர் உருவாக்கியுள்ளார். 

    கடந்த நான்கு மாதங்களாக பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் கூறிய இவர், தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி, ஒரு திட்டத்துடன் தனது மிரட்டலை தொடர்ந்து வருகிறார். 

    ஆனால் இதுவரை அப்படி எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. இதிலிருந்தே சிலரை மிரட்டி பணம் பறிப்பது, அல்லது வாய்ப்பு கேட்பது தான் அவரது நோக்கமாக இருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது. 

    தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு திறமை இருக்குமேயானால், தனது படத்தில் வாய்ப்பு தர தயார் என சமீபத்தில் கூறியிருந்தார். ஸ்ரீ ரெட்டிக்கும் அதுதான் நோக்கம் என்றால் அந்த வாய்ப்பை நேர்மையாக ஏற்று இருக்கவேண்டும். ஆனால் லாரன்ஸின் பெருந்தன்மையான செயலை முழுமனதாக ஏற்காமல் லாரன்ஸையே விமர்சித்துதான் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.



    ராகவா லாரன்ஸ் மிகவும் நேர்மையானவர். இந்த சமுதாயத்தில் சமூக சிந்தனையுடன் செயல்படக்கூடியவர். நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி மக்களால் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடிகராகவும் இருக்கிறார்.

    அப்படிப்பட்ட ராகவா லாரன்ஸ், தனது பெருந்தன்மையை புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கும் ஸ்ரீரெட்டி போன்ற தவறான நபர்களுக்கு வாய்ப்பு தருவதை தவிர்க்கவேண்டும் என அவரிடம் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். ஆந்திராவில் பலர் மீது குற்றச்சாட்டுக்களை வீசிய ஸ்ரீ ரெட்டி, இனி அங்கே தனது பருப்பு வேகாது என தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்படிப்பட்டவருக்கு  வாய்ப்பு கொடுப்பது தமிழ் சினிமாவில் ஒரு தவறான உதாரணத்தை உருவாக்கிவிடும். 

    நீங்கள் இந்த சமூகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்துகொண்டிருக்கும்போது, இது தவறான ஒரு நடைமுறையை உருவாக்கிவிடும். அதன்பின் ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பல்கள் பாரம்பரியமான தமிழ் சினிமாவில் உள்ளே நுழைய ஊக்கம் கொடுப்பது போலாகிவிடும். ஆகவே இதுபோன்ற நபர்களை தயவுசெய்து புறக்கணியுங்கள். 

    இதை வாராகி என்கிற தனிப்பட்ட நபரின் கோரிக்கையாக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே உங்களிடம் வைக்கும் கோரிக்கையாக இதை நீங்கள் பார்க்கவேண்டும். எங்கள் கோரிக்கையை நிச்சயம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம்" 

    என வாராகி இவ்வாறு கூறியுள்ளார்.
    வாராகி வழிபாடு மிகவும் கட்டுபாட்டுக்கு உரியது. அனைத்தும் புரிந்து தான் நெருங்க வேண்டும். வாராகி மாலையின் பொருளையும் படிப்பதால் கிடைக்கும் பயனையும் அறிந்து கொள்ளலாம்.
    வாராகி வழிபாடு மிகவும் கட்டுபாட்டுக்கு உரியது. அனைத்தும் புரிந்து தான் நெருங்க வேண்டும்.

    பகைமுடித்தல்:-

    வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
    சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவிஎங்கள்
    கருத்திற் பயிலும் வாராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
    பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறிகாணும் பகைத்தவர்கே...

    பொருள்:-

    வாராகியின் வல்லமை புரியாமல், அவள் வணங்கும் பக்தனை பகைத்து கொண்டால் இவள் பொருத்திருக்கமாட்டாள். ருத்திரனின் இயக்கம் இருக்கும் இந்த வாராகியாகப்பட்டவள், தன் பக்தனுக்கு தீங்கு இழைத்தவர்களை கண்டு கண்சிவந்து வெட்டி வீழ்த்துவாள் பொருத்திருக்கமாட்டாள் பக்தனை காப்பதில் அவ்வளவு  ஆவேசம்.

    பயன்:-

    வேண்டுமென்றே ஒருவர் நமக்கு தீங்கு செய்தால் அதை விலக்க இதை படிக்கலாம்.

    வாக்கு வெற்றி:-

    “பாப்பட்டசெந்தமிழ் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
    பூசப்பட்டதும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
    கூப்பிட்டது உன்செவி கேட்கலையோ? அண்ட கோளமட்டும்
    தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யானர்தெரு எங்குமே

    விளக்கம்:-

    பொதுவாக நம் தாய் தந்தை என்று தான் நாம் விரும்பி வணங்கும் தெய்வத்தை அழைக்கின்றோம். இது நமக்கும் நாம் வணங்கும் தெய்வத்திற்கும் உள்ள

    நெறுக்கத்தை காட்டுகின்றது. மேலும் செந்தமிழ் பாக்களால் உன்னை அர்ச்சித்ததெல்லாம் தீயில் எரிந்ததா புகழ்ந்து கூப்பிட்டது உன்  கமல செவிகளில்

    விழவில்லையோ? வானமுகடு வரை நெருப்பால் இந்த உலகம் அழிந்ததா என மனம் உருகி வேண்டுகின்ற வடிவத்தை சொல்லுகின்றது.

    பயன்பாடு:-

    மிக பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கும்போது இப்பாடலை பாடி தற்காத்து கொள்ளலாம்.

    தேவி வருகை:-

    எங்கும் எரியக் கிரிகள் பொடிபட, எம்பகைஞர்
    அங்கம் பிளந்திட விண்மீன் கிழிந்திட ஆர்தெழுந்து
    பொங்கும் கடல்கள் சுவறிட சூலத்தை போகவிட்டு
    சிங்கத்தின் மீது வருவாள் வாராகி சிவசக்தியே

    விளக்கம்:-

    வாராகியின் கோபம் எப்படிபட்டது தெரியுமா? அன்னை வருகிறாள், மிகபெரிய உக்ர ரூபிணியாய் சிம்ம வாகனத்தில் ஏறி நின்றே வருகின்றாள். அவள்

    வருவதற்கு முன்பே அவள் சூலம் பாய்ந்து வருகின்றது. இந்த நிகழ்வு நடக்கின்றபோது, நெருப்பு பறக்கின்றதாம், மலைவெடித்து சிதறுகின்றதாம், பகைவர்கள்

    உடல் பிளந்து விழுகின்றார்கள். விண்ணும் மண்ணும் பிளக்கின்றது, கடல் வற்றிபோகின்றது. அவள் சக்திக்கு இது ஒரு விளக்கம்.

    பயன்:-

    உடல்நிலை பெரிதும் பாதிக்கின்றபோது இப்பாடலை படித்து பயன்பெறலாம்.

    ஆன்ம பூஜை:-

    ‘‘சக்தி கவுரி மகாமாயி ஆயிஎன் சத்துருவைக்
    குத்தி இரணக் குடலைப் பிடுங்கிக் குலாவிநின்றே
    இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
    நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே.

    விளக்கம்:-

    வாராகி தேவி சக்தி, கவுரி, மகாமாயி என்ற மூன்று தெய்வங்களின் வவானவள். அவள் தன் பக்தனுடைய சத்ருக்களை எப்படி சூரையாயிடுவாள் என

    மேற்கண்ட பாடல் விளக்குகின்றது. வாராகி தன் பக்தனை சோதித்த எதிரியை தன் கூரிய நகங்களால் குத்தி அவள் வயிற்றை கிழித்து பிடுங்கி வீசுகின்றாள். எட்டு திசைகளிலும் மலைகள் வெடித்து சிதறுகின்றது. அப்போது நளின நடையோடு வந்து அவள் குருதி கொண்டு தன் பக்தன் நெற்றியில் வெற்றி திலகமிடுவாள்.

    அமைதியை நோக்கி நாம் செயல்பட நினைத்தால் இப்பாடலை பிராயணம் செய்யலாம்.

    தேவி தாபணம்:-

    ‘‘நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
    நஞ்சணி கண்டத்தி நாராயணி தனை நம்புதற்கு
    வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை  உண்ணக்
    கொஞ்சி நடந்து வருவாள் வாராகி குலதெய்வமே....

    விளக்கம்:-

    தேவி கொஞ்சி அடிமேல் அடி எடுத்து வைத்து நட்ந்து வருகிறாள். எதற்கு, தன்னை வேண்டி நின்ற பக்தரை வருத்துபவரை வதம் செய்ய, அதற்கு ஏன் கொஞ்சி

    நடக்க வேண்டும், தன்னை வணங்கும் பக்தர்களை காக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில்தான் அவள் நஞ்சுடைய கண்டம் உடையவள் என்பது பொருள்.

    பயன்:-

    அன்பாக அன்னையை அழைக்கும் போது இதை பாடலாம்.

    அடக்குதல்:-

    ‘‘மதுமாமிசம் தனைத் தின்பாள் இவாளன்று மாமறையோர்
    அதுவே உதாசினம் செய்தி டுவார் அந்த அற்பர்கள் தம்
    கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடிதடித்து
    விதிர்வானில் வெட்டி எறிவாள் வாராகி என் மெய்தெய்வமே..

    விளக்கம்:-

    வாராகி அன்னை ஆவேசமிக்க தெய்வம், அவளது தன்மை புரியாமல் அவளை அலட்சியம்  ஏளனம் செய்தாலோ அவர்கள் வாயடைத்து ஊமையாய் மாறுவர். மேலும் இரண்டு கூறுகளாக அவர்களை வெட்டி எரிந்து விடுவாள் என்பது பொருள்.

    பயன்:-

    எதிர்ப்புகளை எளிதில் வெல்லலாம்.

    அம்பிகை காட்சி:-

    ‘‘ஐயும் கிலியும் என்று தொண்டர் போற்ற அரியபச்சை
    மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்
    கையும், பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
    வையம் துதிக்க வருவாள் வாராகி மலர்கொடியே...’’

    விளக்கம்:-

    மனதை மகிழ்விக்கும் பச்சை நிறதிருமேனி, கருணை பெருகும் விழிகள், பிரம்பு, கபாலம், சூலம், ஏந்திய திருகரங்கள், இப்படி வெளிப்படுத்துகிறாள். அதுவும் ஐம்

    கலௌம் என்ற பீஜ மந்திரங்களாக மனம் மொன்றித் துதிக்கின்ற அன்பர் முன்காட்சி கொடுக்கின்றாள்.

    பயன்:-

    அம்பிகையை அழைக்க இப்பதிகத்தை பாடலாம்.

    காக்கும் வடிவம்:-

    தாளும் மனமும் தலையும் குலையத் தரியவர்கள்
    மாளும் படிக்க வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
    கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
    வாளும் கட்கமும் சூலமும் ஏந்திவரும் துணையே

    விளக்கம்:-

    வாராகியை மனமொன்றி துதிக்கும் பக்தன் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் வெற்றி சங்கு ஒலிக்க வாளும், சூலமும் தாங்கியவர்களாக துணைக்கு

    வருகிறாள் வாராகி அவளைப் போற்றி பணியும் அன்பர்களுக்கு நவக்கிரகங்களாலோ  பகைவராலோ பயமில்லை, ஏனெனில், வாராகியின் அருள்

    பெருங்கவசமாய் காத்து நிற்கும்.

    பயன்-:--

    தன்னைதற்காத்து கொல்ல இந்த பதிகம் பாடலாம்.

    அன்னையின் அருள்:-

    வரும்துணை என்று வாராகி என்றன் அன்னையை  வாழ்த்தி நிதிம் பொருந்தும் தகைமையம் பூணாதவர்  புலால் உடலை பருந்தும் கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும் விருந்துண்ண பட்டுகிடப்பர் கண்டீர், உடற் வேறுபட்டே

    விளக்கம்:-

    உயிர்துணையாக விளங்கும் அருந் தில் நாயகி வாராகியை பாடிப்பரவுதலே பிறவிபயன். அதை செய்யாதவர்கள் அனைவரும் வெறும் தோல் போர்த்திய உடன் கூடுகள், அந்த  உடற்கூடுகள் பருந்து, கழுகு, பேய் மற்றும் பூதங்களின் விருந்தாகும்.

    பயன்:-

    இதை பாடினால் அன்னை அருள் எளிமையாக கிடைக்கும்.
    மாலை நேர வழிபாடுகளில் முதன்மையான இடம் உக்ர தெய்வங்களுக்கு உண்டு. வாராகியை மாலை நேரம் தொழும்போது மட்டும் இவள் சக்தியும் பெருகும் நம் வலிமையும் பெருகும்.
    வாராகியை இரவு நேர நாயகி என குறிப்பிட்டு இருந்தேன். இதன் சூட்சமம் சொல்கிறேன். அன்னையானவள் இந்த உலகில் தீய சக்திகளிடமிருந்து நம்மை காத்தருளவே அவதரித்தவள். எதிரி ஏவிவிடும் தீய ஆற்றலை அழிக்கவே உருவெடுத்தவள். இந்த தீய சக்தி எனும் பேய், பிசாசு, ஏவல், பில்லி இவை அனைத்திற்கும் வலிமை கூடும் நேரம் இரவு நேரம் தான். இந்த காலகட்டத்தில் தான் இந்த தீயவினைகளை மாந்திரீகன் எனும் சத்ரு ஏவி விடுவான்.

    அப்போது நம்மை காக்க ஒரு சக்தி வேண்டும் அல்லவா? இதை தடுக்க ஒரு மாபெரும் ஆற்றல் வேண்டும் அல்லவா? அந்த மாபெரும் ஆற்றல் கொண்டவள் தான் வாராகி, மாந்திரீகம், ஏவல், பேய் பிசாசுகளிடமிருந்து நம்மை காக்கும் வலிமையான தெய்வம் இந்த பிரபஞ்சத்தில் வேறு தெய்வம் ஏதும் இல்லை என்பது தான் உண்மை. ஏவல், பில்லி சூனியம், யாவையும் தவிடு பொடியாக்கிடவே கையில் உலக்கை வைத்திருக்கிறாள்.

    வாராகி என்ற பெயர் சொன்னாலே இவையாவும் ஓடி ஒளிந்து கொள்ளும், வாராகி வழிபாடு செய்பவர்களை இந்த கெட்ட சக்தி என்றைக்குமே நெறுங்காது. ஆக இந்த கெட்ட துர்சக்திகளிடமிருந்து நம்மை விழுந்து காக்க தான் அன்னைக்கு நாம் இரவு நேர வழிபாடுகளை செய்ய வேண்டும்.

    “வீற்றிருப்பாள் நவ கோணத்தில் நம்மை வேண்டும் என்று காத்திருப்பாள் கலி வந்தனுகாமல் என் கண் கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றகுச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குல தெய்வம்”

    -என்கிறது வாராகி மாலை

    9 வடிவங்களில் வீற்றிருந்து காத்து வருபவளாம் அன்னை கலி என்ற ஒன்று நம்மை நெறுங்காமல் பார்த்து இருப்ப அல்லள் எங்கே நடக்கிறது. என்று இரவு பகலாக, கண்விழித்து காத்து கொண்டு தன் பக்தனை பாதுகாப்பவளாம். இந்த பாதுகாப்பிற்கு தானே நாம் ஆயிரம் ஆலயம் செல்கின்றோம், இவள் ஒருவரை சரணடைந்தால் நாம் அனைத்து தொல்லைகளிலிருந்தும், விடுபடுகின்றோம் என்பது புலப்படுகிறது அல்லவா.

    ஜோதிடப்படி இரவு நேர வழிபாட்டின் சூட்சமம்

    ஜோதிடத்தில் இரவுக்கு அதிபதி சனி- கருப்பு இருட்டு, புதர், எல்லாம் சனி ஆதிக்கம் செய்யும் இடமாகும், நவகிரகங்களிலே இவர் ‘கர்மகாரகன்’ என்று அழைக்கப்படுகிறான். நீதிமதான் இவனே செய்த தவறுக்கு பாரபச்சமின்றி தண்டனை வழங்குபவன். மக்கள் அலறி ஓடுவது எல்லாம் 7 என்ற இவர் காலம் வரும் போது தான்.

    இவர் பார்வையில் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் தப்ப இயலாது. ஒரு வனை கோட்டையிலிருந்து குடிசைக்கு கொண்டு வரும் பார்வை வலிமை சனிபகவானுக்கு உரியது. ஈசன் முதல் சகல தேவர்களையும் ஆட்டி வைத்த வரலாறு இவருக்கு உண்டு, இவர் கட்டுப்பட்டு நிற்கும் ஒரே கடவுள் வாராகி மட்டுமே. வாராகி பக்தனை ஒரு போதும் சனிபகவான் நெறுங்குவதே கிடையாது ஏனெனில் கரிய நிறம், எருமை, இதன் எல்லாம் சனி ஆதிக்கம், ஆகவே இவர் ‘ஆயுள்காரகன்” என்று அழைக்கப்படுகிறான். இதன் காரணத்தினாலே ஆயுள் முடிக்கும் இறைவன் எமதர்மன் எருமையை வாகனமாக வைத்துள்ளார்.

    இந்த எருமையையே வாகனமாக கொண்டு அவதரித்தவள் இந்த வாராகி , தேவர் மூவர் யாவரும் அடிபணிந்து வணங்க தக்க தெய்வ வடிவானவள் இவளை வணங்கும் யாரையும் சனி பகவான் நிச்சயம் தீண்டமாட்டார் என்பது முற்றி லும் உண்மை, வணங்கி பாருங்கள் அனு பவத்தால் உணர்வீர்கள்.

    வாராகி வழிபாட்டை எந்த நேரத்தில் முதல்நாள் தொடங்குகிறோமோ அதே நேரத்தில் தான் எப்போதும் வழிபாடுகளை செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    1. பொதுவாக அம்பிகை என்றாலே மாலைநேர வழிபாடுதான் மகத்தானது. நாம் நினைக்கும் காரியங்கள் தடையின்றி நடக்க மாலை நேர வழிபாடுகளை தான் அதிகம் செய்ய வேண்டும்.

    மாலை நேர வழிபாடுகளில் முதன் மையான இடம் உக்ர தெய்வங்களுக்கு உண்டு. வாராகியே அதன் நாயகியாக விளங்குகிறாள். இவளை மாலை நேரத்தில் தொழும்போது மட்டும் இவள் சக்தியும் பெருகும் நம் வலிமையும் பெருகும்.

    2. வாராகி வழிபாட்டை பொருத்த மட்டில்,

    காலை வழிபாட்டிற்கு :- 25 சதவீதம் நற்பலன்கள்
    மாலை வழிபாட்டிற்கு :- 70 சதவீதம் நற்பலன்கள்
    இரவு நேர வழிபாட்டிற்கு :- 100 சதவீதம் நற்பலன்கள்
    நிச்சயம் உண்டு,

    3. வாராகி வழிபாடு செய்யும் நேர அளவு 8 மணி முதல் 9 மணிக்குள் அமைய வேண்டும். இந்த நேரத்தில் அவளை அர்ச்சித்து பணியும் போது கிடைக்கும் ஆற்றல் அளவற்றது.

    மேலும் வாராகி வழிபாட்டை எந்த நேரத்தில் முதல்நாள் தொடங்குகிறோமோ அதே நேரத்தில் தான் எப்போதும் வழிபாடுகளை செய்ய வேண்டும். நம் சுய வேலைக்காக நேரத்தை அடிக்கடி மாற்றினால் கேட்டபலன் கிடைப்பது கடினம். ஆக காலம் அறிந்து அவளை வழிபட்டு நற்பயன்பெறுங்கள். 
    ×