search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிமூட்டம்"

    போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று கடும் பனியால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர்.
    போச்சம்பள்ளி:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பனி நிலவிவரும் நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கடும் பனி நிலவி வருகிறது.

    போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று காலை நேரங்களில் பனியின் காரணமாக வழக்கத்தைவிட கடும் குளிர் ஏற்பட்டது. பனியின் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவில் உள்ளதால் குறைவான வேகத்திலே இன்று வாகனங்கள் இயக்கப்பட்டது. மேலும், வாகன ஓட்டிகள் பனியின் காரணமாக முகப்பு விளக்கு எரிய விட்டவாறு செல்கின்றனர்.

    டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வழக்கமாக பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். தற்போது போச்சம்பள்ளி பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் தாவரங்கள், புல்வெளிகள் எங்கும் பனி படர்ந்துள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோயால் பாதிப்படைந்து அவதி அடைந்து வருகின்றனர்.
    சளி, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளனர். அதேபோல் இரவில் உறைப்பனி கொட்டுவதால் பூக்கள், காய்கறி, பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
    தலைநகர் டெல்லியில் இன்று காலை அதிக அளவில் பனி மூட்டம் நிலவியதால் ரெயில்களின் புறப்பாடு, வருகை நேரத்தில் தாமதம் ஏற்பட்டது.
    வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.

    குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் இன்று காலை டெல்லி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முடியாமல் ரெயில்கள் தவித்தன. அந்த அளவிற்கு பனி மூட்டம் நிலவியது. அதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்தும் ரெயில்கள் புறப்பட முடியவில்லை.

    பனி மூட்டத்துடன் காற்று மாசும் மோசமடைந்துள்ளது. இதனால் இன்று காலை 9 ரெயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
    ×