என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 133013
நீங்கள் தேடியது "slug 133013"
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் லாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார். விராட் கோலி #NZvIND #ViratKohli
நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நேப்பியரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 45 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் 10430 ரன்கள் குவித்துள்ளார். 21 ரன்கள் எடுத்தபோது, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 10405 ரன்களுடன் 10-வது இடத்தில் இருந்த லாராவை முந்தினார்.
சச்சின் தெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். குமார் சங்ககரா 14234 ரன்களுடன் 2-வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 13707 ரன்களுடன் 3-வது இடத்திலும், ஜெயசூர்யா 13430 ரன்களுடன் 4-வது இடத்திலும், 12650 ரன்களுடன் ஜெயவர்தனே 5-வது இடத்திலும், 11739 ரன்களுடன் இன்சமாம் உல் ஹச் 6-வது இடத்திலும், கல்லீஸ் 11579 ரன்களுடன் 7-வது இடத்திலும், 11363 ரன்களுடன் கங்குலி 8-வது இடத்திலும், 10889 ரன்களுடன் டிராவிட் 9-வது இடத்திலும் உள்ளனர். தற்போது 10430 ரன்களுடன் விராட் கோலி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி சச்சின் தெண்டுல்கர், லாரா, பாண்டிங்கை விட சிறந்த வீரர் என்ற மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார். #ViratKohli
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்சில் 123 ரன்கள் குவித்தார். 75-வது டெஸ்டில் 127-வது இன்னிங்சில் அவர் தனது 25-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்டில் அதிவேகத்தில் 25-வது செஞ்சூரியை பிராட்மேனுக்கு பிறகு அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
தெண்டுல்கர் 130 இன்னிங்சிலும், கவாஸ்கர் 138 இன்னிங்சிலும், ஹெய்டன் 134 இன்னிங்சிலும் 25 சதங்களை எடுத்து இருந்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் கோலி 6-வது செஞ்சூரி அடித்து தெண்டுல்கரை சமன் செய்தார்.
இந்த நிலையில் விராட் கோலியின் பேட்டிங்கை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். தெண்டுல்கர், லாரா, ரிக்கி பாண்டிங்கை விட கோலி சிறந்த வீரர் என்ற புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக வாகன் கூறியதாவது:-
விராட் கோலியை போன்ற சிறந்த வீரரை நான் பார்த்தது இல்லை. அதே நேரத்தில் தெண்டுல்கர், லாரா, ரிக்கி பாண்டிங் ஆகியோரை நான் அவமதிக்கவில்லை. ஆனால் கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கோலியே சிறந்த வீரர். அவரைவிட சிறந்த பேட்ஸ்மேனை நான் பார்த்தது கிடையாது.
நெருக்கடியான நேரத்தில் கையாள்வதில் விராட் கோலி உயர்ந்த திறமையையும், நம்ப முடியாத மனநிலையையும் கொண்டிருக்கிறார். சச்சின் மீது இருந்த எதிர்பார்ப்பு அப்படியே அவரிடம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் விராட் கோலியை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரும் பாராட்டியுள்ளார். அவர் கூறும்போது, “லாரா, பாண்டிங், தெண்டுல்கர் ஆகியோரது அனைத்து சாதனைகளையும் விராட் கோலி முறியடிப்பார். தற்போதுள்ள புள்ளி விவரங்களின்படி இந்த 3 பேரையும் விட கோலி சிறந்த வீரர் அல்லது சமமானவராக கருதுகிறேன்” என்றார்.
இந்த ஆண்டில் விராட் கோலி டெஸ்டில் இதுவரை 1223 ரன் எடுத்துள்ளார். சராசரி 58.23 ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக அவரது டெஸ்ட் சராசரி கிட்டத்தட்ட 70 வரை உள்ளது. இதே காலக்கட்டத்தில் ஒருநாள் போட்டியில் அவரது சராசரி 94.47 ஆகும்.

டெண்டுல்கர், லாரா போன்று விராட் கோலியும் சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் புகழாரம் சூட்டியுள்ளனர். #AUSvIND #SteveWaugh #BrianLara #SachinTendulkar #ViratKohli
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
தற்போதுள்ள இந்திய அணி கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுவதை என்னால் ஏற்க இயலாது. நான் விளையாடிய இந்திய அணிகளை விட தற்போதுள்ள அணி சிறந்ததாக கருதவில்லை. வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க அவர் அவ்வாறு கூறி இருக்கலாம். இது போன்ற கருத்துக்களை அவர் தவிர்த்து இருக்கலாம்.
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானதே தற்போதுள்ள இந்திய அணி நல்ல தயார் நிலையில் ஆஸ்திரேலியாவை சந்திக்க இருக்கிறது. இதனால் இந்த தொடர் பரபரப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஸ்டீவ்வாக் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 1999-ல் உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #AUSvIND #SteveWaugh #BrianLara #SachinTendulkar #ViratKohli

விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர் மிகப்பெரிய வெற்றியை நேசிக்கிறார். டெண்டுல்கர், லாரா போன்றே விராட் கோலியும் சிறந்த வீரர். அபாயகரமான பேட்ஸ்மேன். சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகி உள்ளார்.
தற்போதுள்ள இந்திய அணி கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுவதை என்னால் ஏற்க இயலாது. நான் விளையாடிய இந்திய அணிகளை விட தற்போதுள்ள அணி சிறந்ததாக கருதவில்லை. வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க அவர் அவ்வாறு கூறி இருக்கலாம். இது போன்ற கருத்துக்களை அவர் தவிர்த்து இருக்கலாம்.
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானதே தற்போதுள்ள இந்திய அணி நல்ல தயார் நிலையில் ஆஸ்திரேலியாவை சந்திக்க இருக்கிறது. இதனால் இந்த தொடர் பரபரப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஸ்டீவ்வாக் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 1999-ல் உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #AUSvIND #SteveWaugh #BrianLara #SachinTendulkar #ViratKohli
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரரான ஹெட்மையருக்கு பொறுமை தேவை. அவர் ஆடுகளத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என லாரா தெரிவித்துள்ளார். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒருநாள் போட்டியில் அதிரடி காட்டிய இளம் வீரரான ஹெட்மையர் 7 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மைதானத்தில் இறங்கியதும் அனைத்து பந்துகளையும் அடித்து விளையாட நினைக்கிறார். இந்நிலையில் ‘‘ஹெட்மையர் பொறுமை காக்க வேண்டும். அவராகவே கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’’ என்று லாரா தெரிவித்துள்ளார்.

இளம் வீரரான பிரித்வி ஷா சில நேரம் சச்சினாகவும், சில நேரம் சேவாக்காகவும், சில நேரம் லாராவாகவும் தெரிகிறார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். #RaviShastri
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. ராஜகோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றுடன் முடிந்த 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இளம் வீரரான பிரித்வி ஷா டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 154 பந்தில் 19 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 53 பந்தில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காலும் இருந்தார். மூன்று இன்னிங்சில் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
அறிமுக தொடரிலேயே ஆட்ட நாயகன் (முதல் டெஸ்ட்) மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்ற பிரித்வி ஷாவை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார்.
பிரித்வி ஷா குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘பிரித்வி ஷா கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர். அவர் மும்பை அணிக்காக 8 வயதில் இருந்தே விளையாடி கொண்டிருக்கிறார்.
அவர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். அவர் சில நேரம் சச்சினைப் போன்றும், சில நேரம் சேவாக் போன்று, ஆடுகளத்தில் விளையாடும்போது சில நேரத்தில் பிரையன் லாரா போன்றும் விளையாடுகிறார்.
தொழில் தர்மத்தை உணர்ந்து தலைநிமிர்ந்து நின்றால் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.’’ என்றார்.

இந்திய மண்ணில் லாரா இடம்பிடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் கூட தொடரை வெல்ல முடியவில்லை என்று ஹோல்டர் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி என்றாலும், பேட்டிங் மிகவும் மோசமாக இருந்ததால் பெரும்பாலான முன்னாள் வீரர்கள் விமர்சனம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் லாரா இடம் பிடித்திருந்த அணியால் கூட இந்திய மண்ணில் தொடரை கைப்பற்ற முடியவில்லை என்று தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டன் கூறுகையில் ‘‘நாங்கள் நம்பர்-1 அணியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அதுவும் அவர்களுடைய சொந்தத மண்ணில். 1994-ல் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய மண்ணில் வெற்றி பெற்றது கிடையாது என்பதை வரலாறே சொல்லும். அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியை பார்த்தீர்கள் என்றால், பிரையன் லாரா மற்றும் தலைசிறந்த வீரர்கள் இருந்தார்கள்’’ என்றார்.

×

X