search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருமல்"

    சளி பிடித்து 7 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும் விட்ட குறை தொட்ட குறையாக சளி முழுமையாய் விடவில்லையே என்பர். இதற்கான காரணத்தை அறந்து கொள்ளலாம்.
    சளித்தொல்லை: இந்த சீசனில் அநேகர் சிந்திய மூக்கும், லொக், லொக்கென்ற இருமல் சத்தத்துடனும் இருக்கின்றனர். சளிபிடித்து 7 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும் விட்ட குறை தொட்ட குறையாக சளி முழுமையாய் விடவில்லையே என்பர்.

    இதற்கான சில காரணங்கள்: சளி முழுமையாய் விடவில்லை என்பதுதான். மேலும் வீட்டில் உள்ள சுவிட்சுகள், கதவு கைப்பிடிகள், உடன் இருப்பவர்கள், பாதிக்கப்பட்டவரின் காபி கப், டம்ளர், டி.வி. ரிமோட், குழாய் பிடிகள், துண்டுகள், ஒரே கப்பில் வைக்கும் டூத் பிரஷ்கள் இவை சளி, ஜலதோஷம் இவற்றினை பரப்பலாம். அல்லது மேலும் தூண்டி விடலாம். கவனம் தேவை.

    • நூற்றுக்கணக்கான வைரஸ்கள் ஜலதோஷத்தினை உருவாக்க வல்லவை. ஆக ஒன்றை அடுத்து பாதிப்பாக ஜலதோஷம் தொடரலாம்.

    • அலர்ஜி இருக்கக்கூடும். அலர்ஜியின் காரணத்தினை கண்டறிந்து அதனை தவிர்க்க வேண்டும்.

    • கிருமிகள் பாதிப்பு இருக்கலாம்.

    • ஆஸ்துமா மற்றும் சுவாச குழாய் பாதிப்புகள் இருக்கின்றதா என மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    • நிமோனியா போன்ற பாதிப்புகளுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம்.

    • அசிடிடி பிரச்சினை, வயிற்று பிரட்டல், அடிக்கடி ஏப்பம் போன்ற பிரச்சினைக்கு கவனம் செலுத்துங்கள்.

    • தொடர் இருமல் இருந்தால் டி.பி. பாதிப்பு உள்ளதா என்பதனையும் அறிய வேண்டும்.

    • நோய் எதிர்ப்பு குறைபாடு இருக்கலாம். மருத்துவ ஆலோசனை மூலம் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
    குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலையில் அத்தகைய உணவுகள் உடலை மேலும் பலவீனப்படுத்தும். உடல் உபாதைகள் ஏற்படவும் வழி வகுத்துவிடும். துரித உணவுகள் உடலுக்கு கேடு விளைவிப்பவை. அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைத்துவிடும்.

    தொண்டை எரிச்சல் பிரச்சினையும் அதிகமாகிவிடும். தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்றாலும் குளிர்காலத்துக்கு உகந்ததல்ல. மார்புச்சளி இருக்கும் போது உணவில் தயிர் சேர்த்துக்கொண்டால் அது சளியை இறுக வைத்துவிடும். குளிர் பானங்கள் பருகுவதும் தொண்டை வலியை அதிகப்படுத்திவிடும்.

    வறுத்த உணவு வகைகளையும் சாப்பிடக்கூடாது. அவையும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்திவிடும். காபின் கலந்த பானங்கள், மது பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த திராட்சை பழம், மிளகுத்தூள், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, அன்னாசிபழம், கொய்யா போன்றவற்றையும், வைட்டமின் இ சத்துக்களை கொண்ட கீரை வகைகள், பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகள், ப்ரோக்கோலி, நெல்லிக்காய், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.

    அதுபோல் செலினியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்திருக்கிறது. அந்த சத்து நிறைந்த இறால், முட்டை, இறைச்சி வகைகளை சாப்பிடலாம். சிக்கன் சூப் பருகுவதும் சளிக்கு இதமாக இருக்கும். கிரீன் டீ பருகுவதும் சளித்தொல்லைக்கு நிவாரணம் தரும். அதில் சளி பிரச்சினைக்கு காரணமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் இருக்கிறது. குறைந்தபட்சம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகுவதும் அவசியமானது.
    சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.
    இருமல்: கடந்த ஒரு மாத காலமாக பலருக்கும் சளி, இருமல் பிரச்சனைதான். மருந்து சாப்பிட்டு சளி கூட நீங்கி விட்டது. இருமல் தான் நிற்கவே இல்லை என பலரும் கூறுகின்றனர். பல இருமல் மருந்துகளை சாப்பிட்டும் குறையவில்லை என்பதும் தொடர் இருமல் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால் சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.

    * தேன் மிகச் சிறந்தது வறட்டு இருமலுக்கு என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1-2 டீஸ்பூன் தேனினை வெதுவெதுப்பான நீரில் 2-3 முறை அன்றாடம் குடித்து வர இருமல் கட்டுப்படும். இதனை சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

    * பைன் ஆப்பிள்: அன்னாசி பழமானது மூக்கு, சைனஸ் பகுதிகளில் உள்ள வீக்கத்தினை குறைக்க வெகுவாய் உதவுகின்றது. இருமல் இருக்கும் பொழுது அன்னாசி பழ ஜூஸ் சிறிதளவு அவ்வப்போது குடிப்பது சளியினை வெளியேற்றி இருமலைக் குறைக்கும்.

    * அதிமதுரம்: இதற்கு பல நாடுகளில் இன்று வரவேற்பு வெகுவாய் கிடைத்துள்ளது. அதிமதுர பொடி வாங்கி 2 கப் நீரில் 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின் இறக்கி 15-20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பின் இதனை வடிகட்டி காலை-மாலை இரு வேளை அருந்துங்கள். இருமல் வெகுவாய் கட்டுப்படும்.

    * வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு கொப்பளியுங்கள்.

    நெஞ்செரிச்சல்: அசிடிடி-நெஞ்செரிச்சல் என்ற இந்த இரு வார்த்தைகளை கேட்காதவர், அனுபவிக்காதவர் மிகக் குறைவு எனலாம். இதற்கு தானே மருந்து கடையில் மருந்து வாங்கி எடுத்துக் கொள்பவர்கள் ஏராளம். ஆனால் இது அடிக்கடி அவர்களை தாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

    மிக அதிகமாகவும், அடிக்கடியும் இந்த ஆசிட் கட்டுப்படுத்தும் மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

    விடாமல் அசிடிடி நிவாரண மருந்தினை பாக்கெட்டிலேயே வைத்து உணவு போல் அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு

    * நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது

    * தேவையான சத்துக்களான பி12, கால்ஷியம், இரும்பு மற்றும் மக்னீஷிய சத்துக்கள் உறிஞ்சப்படுவது வெகுவாய் குறைகின்றது.

    * உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.



    இயற்கை முறையில் அசிடிடி பாதிப்பினை தடுக்க சில முறைகள் இருக்கின்றன.

    * குளிர்ந்த பால் அருந்துவது அசிடிடி பாதிப்பினை வெகுவாய் குறைக்கும். நீக்கும். உங்களுக்கு சளி பாதிப்பு ஏற்படாது எனில் ஐஸ்கிரீம் கூட எடுத்துக் கொள்ளலாம்.

    * மோர் குடிக்கலாம். இதனை அன்றாடம் அடிக்கடி கூட குடிக்கலாம்.

    * சிகரெட், மது இரண்டினையும் அடியோடு தவிர்த்து விடவேண்டும்.

    * பாதாம் வயிற்றிலுள்ள ஆசிட் சக்தியினை குறைத்து விடும். சாப்பிட்ட பிறகு 3-4 பாதாம் மென்று சாப்பிடுங்கள்.

    * மசாலா, எண்ணெய், காரம் இவைகளை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

    * போதுவான தூக்கமின்மை நெஞ்செரிச்சல், ஆசிட் எதிர்ப்பு ஆகியவற்றினை உருவாக்கும். எனவே குறைந்தது 7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் இரவில் தேவை.

    * ஆப்பிள், வாழைப்பழம் உண்ணலாம்.

    * சோற்றுக்கற்றாழை ஜூஸ் மிக நல்ல சிகிச்சை ஆகும்.

    * அரிசி உணவும் நெஞ்செரிச்சல், ஆசிட் இவற்றுக்கு நல்ல தீர்வாகும்.

    இன்னும் ஒரு 30 நாட்கள் லேசான குளிர் இருக்கலாம்.

    ஆனால் பலருக்கு இந்த குளிர் நாட்கள் சளி, ஜீரம், ஆஸ்துமா என பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம், தோய்க்கும் துணிகளை வீட்டுக்குள்ளேயே அதுவும் சூரிய ஒளி இல்லாத இடத்தில் ஈரத் துணிகளை காயப் போடுவது தான். நம்மில் அநேகருக்கு பல கிருமி, பூஞ்ஞைகளை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. சிலருக்கு இந்த ஈர துணிகளை உள்ளே காயப்போடும் பொழுது அந்த ஈரம் அவரைத் தாக்குவதால் சளி, ஆஸ்த்மா பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு மிக அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கான தகுந்த பாதுகாப்பினை இவர்கள் மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
    ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும். இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம்.
    ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும். இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம். அடிக்கடி சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சில உணவுகளை சேர்த்து கொள்வதன் மூலம் சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் அவை சளி, இருமலை அதிகரித்து விடக்கூடும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    சேர்க்கவேண்டியவை: இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம். இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும். மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மோர் பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.

    தவிர்க்கவேண்டியவை: சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். ஒருவேளை அதை சாப்பிடவேண்டும் என்றால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.

    பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியன என்பதால், தவிர்க்கவும். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு மற்றும் திராட்சை மற்றும் ஐஸ்கிரீம், சாக்லேட் தவிர்ப்பது நல்லது. இரவில் பாசிப்பயறைத் தவிர்க்கவும்.
    ×