search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரீஸ்"

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற 4வது சுற்றுப் போட்டியில் கிரீஸ் வீரர் டிஸ்டிஸ்பசிடம் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். #AustralianOpen #RogerFederer
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4வது சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் கிரீஸ் நாட்டை சேர்ந்த டிஸ்டிஸ்பசை எதிர்கொண்டார்.

    இதில், டிஸ்டிஸ்பசிடம் ரோஜர் பெடரர் 7 - 6, 6 - 7, 5 - 7, 6 - 7 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார். இந்த வெற்றியின் மூலம் டிஸ்டிஸ்பஸ் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். இந்த போட்டி சுமார் மூன்றே முக்கால் மணி நேரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. #AustralianOpen #RogerFederer
    கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் இன்று அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake #Greece
    ஏதென்ஸ்:

    கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.



    நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கிரீஸ் நாட்டில் இந்த அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #Earthquake #Greece
    கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். #GreeceForestFires
    ஏதென்ஸ்:

    கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகர் அருகில் உள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. கடற்கரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. 

    தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு தப்பி ஓடினர். எனினும் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.

    சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. வனப்பகுதி வழியாக கார்களில் சென்ற பயணிகளும் தீயில் சிக்கிக்கொண்டர். 

    முதல் கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர் என்றும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது.

    தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். #GreeceForestFires
    ×