search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிஷிகோரி"

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். #AustralianOpen #Djokovic #Medvedev #Nishikori
    மெல்போர்ன்:

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 12-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அத்துடன் அவர் இந்த மாத இறுதி வரை நம்பர் ஒன் வீரராக நீடிப்பதை உறுதி செய்தார்.



    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-3, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ‘வைல்டு கார்டு’ வீரர் அலெக்ஸ் போல்ட்டை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்) 7-6 (8-6), 6-1, 6-2 என்ற நேர்செட்டில் போர்ச்சுகல் வீரர் ஜாவ் ஜோய்சாவை வெளியேற்றி 7-வது முறையாக 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் டானில் மெட்விடேவ் (ரஷியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாப்லோ கார்ரினோ பஸ்டா (ஸ்பெயின்), போர்னா கோரிச் (குரோஷியா), லூகாஸ் பொய்லி (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதேபோல் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 4-வது சுற்றில் சிமோனா ஹாலெப்-செரீனா வில்லியம்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    2018-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) தொடக்க சரிவில் இருந்து மீண்டு வந்து 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் சீன தைபே வீராங்கனை சு வெய் ஹிக்கை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 7-6 (7-5), 6-2 என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்தின் டிம் பாசின்ஸ்கியை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி கண்டார். மற்ற ஆட்டங்களில் கரோலினா பிலிஸ்கோவா (செக் குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), செவஸ்டோவா (லாத்வியா) ஆகியோர் வெற்றி கண்டனர்.

    மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் நிஷிகோரி, சுவிட்டோலினா 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். #AUSOpen
    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 8-ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்), 2-வது சுற்றில் கரோல்விக்கை (குரோஷியா) எதிர்கொண்டார்.

    இதில் நிஷிகோரி 6-3, 7(8) - 6(6), 5-7, 5-7, 7(9)-6(7) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற நிஷிகோரி 3 மணி நேரம் 48 நிமிடங்கள் போராட வேண்டியிருந்தது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள கரோலினா பிலிஸ்கோவா (செக்குடியரசு) 4-6, 6-1, 6-0 என்ற கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த பிரிங்கிளை வீழ்த்தினார். 6-வது வரிசையில் இருக்கும் சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் குஷிமோவாவை (சுலோவாக்கியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.


    ரயோனிக்

    மற்ற ஆட்டங்களில் மேடிசன் கெயஸ் (அமெரிக்கா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்) கேமிலா (இத்தாலி) ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் மற்றொரு போட்டியில் 6-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக் - சுவிட்சர்லாந்தின் ஸ்டன் வாரிங்கா மோதினார்கள்.

    இந்த ஆட்டம் 4 மணி நேரம் 1 நிமிடம் வரை நீடித்தது. நான்கு செட் வரை சென்ற இந்த ஆட்டத்தில் நான்கு செட்களும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ரயோனிக் 6(4) - 7(7), 7(8) - 6(6), 7(13) - 6(11), 7(7) - 6(5) என கடும் போராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்றார்.
    பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் 7-5, 7-5 என நேர்செட் கணக்கில் டிமிட்ரோவை வீழ்த்தி நிஷிகோரி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். #Nishikori
    பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. காலிறுதி ஒன்றில் 6-ம் நிலை வீரரரான கிரிகோர் டிமிட்ரோவ் ஜப்பானைச் சேர்ந்த கெய் நிஷிகோரியை எதிர்கொண்டார். இதில் 7-5, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார் நிஷிகோரி.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜெரேமி சார்டி யசுடாக்கா உசியமாவை எதிர்கொண்டார். இதில் சார்டி 6-4, 3-6, 7(7) - 6(4) வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் மெட்வெதேவ்- ரயோனிக், டிசோங்கோ- டி மினாயுர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை ஜப்பான் வீரர் நிஷிகோரி வீழ்த்தினார். #ATPFinal #RogerFederer #KeiNishikori
    லண்டன்:

    ‘டாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலை நகர் லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)-9-வது இடத்தில் இருக்கும் நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் மோதினார்கள். 1 மணி 27 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் நிஷிகோரி 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் பெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கினார்.



    ‘குயர்டன்’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 7-6 (7-5), 7-6 (7-1) என்ற நேர்செட்டில் 7-ம் நிலை வீரர் மரின் சிலிச்சை (குரோஷியா) தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 6 நிமிடம் நீடித்தது.  #ATPFinal #RogerFederer #KeiNishikori
    ஜப்பான் வீரர் நிஷிகோரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் செர்பியா வீரர் ஜோகோவிச். #Wimbledon2018 #Djokovic #nishikori
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    முதல் காலிறுதியில் 12-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 24-ம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை நிஷிகோரி 6-3 எனக் கைப்பற்றினார்.



    அதன்பின் இரண்டு செட்டுகளையும் 6-2, 6-2 என எளிதில் கைப்பற்றி ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார். 
    ×