என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 134629
நீங்கள் தேடியது "பந்துவீச்சு"
மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. ஆடும் லெவனில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார். #AUSvIND #TeamIndia #VijayShankar
மெல்போர்ன்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்:-
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்) கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகம்மது சமி, யுஸ்வேந்திர சாஹல்
ஆஸ்திரேலியா: அலெக்ஸ் காரி (விக்கெட் கீப்பர்) ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா,
கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். #AUSvIND #TeamIndia #VijayShankar

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில், அம்பத்தி ராயுடு, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ் கழற்றி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர், கேதர் ஜாதவ், சேஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்:-
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்) கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகம்மது சமி, யுஸ்வேந்திர சாஹல்
ஆஸ்திரேலியா: அலெக்ஸ் காரி (விக்கெட் கீப்பர்) ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா,
கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். #AUSvIND #TeamIndia #VijayShankar
இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார். #ENGvIND #TeamIndia #ZaheerKhan
மும்பை:
இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றின.
இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்தியா எசக்ஸ் அணியுடன் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பதால் டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
5 டெஸ்ட் தொடர் என்பதால் நீண்ட நாட்கள் நடைபெறும். அனைத்து பவுலர்களும் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருப்பது அவசியம். இந்த டெஸ்ட்டில் தொடர்ந்து இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர் ஆகிய 5 வேகப்பந்து வீரர்கள் உள்ளனர். இதில் பும்ரா உடல் தகுதியுடன் இல்லை. இஷாந்த், உமேஷ், முகமது ஷமி ஆகிய 3 பேர், 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் வலியுறுத்தி உள்ளார். #ENGvIND #TeamIndia #ZaheerKhan
×

X