search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துகொண்டிருப்பதாக கூறினார். #RahulGandhi #Congress
    நான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன்- ராகுல்

    I am wedded to the Congress party- Rahul

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து விட்டதாக தெரிவித்தார். ஆனால், இது குறித்து பிரதமர் மோடி, ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வருவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

    முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், திருமணம் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் கட்சியையே தாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் 2019 பொதுத்தேர்தலில் மோடி அரசை வீழ்த்துவதற்கே முன்னுரிமை கொடுப்பதாகவும், பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு மெகா கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக பலவேறு கட்சிகளுடன் பேசி வருவதாகவும் ராகுல் தெரிவித்தார். #Rahulgandhi #Congress
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதை அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Sterliteprotest #Rahulgandhi
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அவ்வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனமும், வேதனையும் வெளியிட்டுள்ளார்.


    ’ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 9 பேரை போலீசார் சுட்டுக்கொன்ற போலீசாரின் செயல் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்துக்கு காட்டுமிராண்டித்தனமான உதாரணமாக அமைந்துள்ளது. இவர்கள் அநீதிக்கு எதிராக போராடியதற்காக இவர்கள் கொல்லப்பட்டனர். இறந்த தியாகிகள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குடுபத்தாருடன் எனது நினைவுகளும், பிரார்த்தனைகளும் இணைந்திருக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். #Sterliteprotest #policefiring #Rahulgandhi
    ×