search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 135775"

    • ஊட்டி கிரசன்ட் பள்ளியின் வெள்ளிவிழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி கிரசன்ட் பள்ளியின் வெள்ளிவிழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளர் உமர் பரூக் வரவேற்றார். தமிழக கவர்னரின் நேர்முக செயலாளர் ஆனந்தராவ் விஸ்ணுபாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் வண்ண வண்ண உடையில் கலை நிகழ்ச்சிகள், கலை இலக்கியம், நாட்டுபற்று என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
    • விருதுகளை மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் முதல்வர்கள், தலைமையாசிரியர்களுக்கான சிறப்பு ஆய்வு கூட்டம் மற்றும் சிறந்த முதல்வர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பார்த்தசாரதி தலைமை வகித்தார். கோவை கற்பகம் பல்கலைக்கழக சிறப்பு பயிற்றுநர் ஆதிபாண்டியன், பல்கலைக்கழக கல்வித்துறை பேராசிரியர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறந்த முறையில் பணியாற்றி வரும் முதல்வர்களுக்கான விருதுகளை மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் சாரண இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பற்றி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷன் பேசினார். நிகழ்ழ்சியில் மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள், கப்பத்தொரை ஸ்ரீ ராம கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி செயலாளர் மற்றும் இயக்குநர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பஸ்சில் பைக்காரா அழைத்து சென்று காண்பிக்கப்பட்டது.
    • பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம் காரம் உத்தரவின்பேரில் முரம்பிலாவு மற்றும் கடசன கொல்லி ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள் அனைவரும் யானைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் வழங்கி, யானைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பின்பு பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் பொதுமக்கள் என சுமார் 60- பேரை பஸ்சில் பைக்காரா அழைத்து சென்று காண்பிக்கப்பட்டது. பின்னர் மதிய உணவு வழங்கி அனைவரும் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    • ரூ.1.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அம்ரித் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 83 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதையடுத்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில், வருவாய்த்துறை சார்பில், பந்தலூர் வட்டம் புஞ்சவ யல் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் மகன்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிக்காகவும், கோத்தகிரி வட்டம் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட அருவங்காடு பகுதியை சேர்ந்த செல்வன், உதயகுமாருக்கு இந்திய சர்வதேச அளவிலான மல்யுத்த போட்டியில் கலந்து கொள்வதற்காகவும், மாவட்ட கலெக்டர் விருப்புரிமை நிதியிலி ருந்து ரூ.50 ஆயிரம் காசோலையி னையும், மாவட்ட மா ற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், சுற்றுலாத்துறை அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6,840 மதிப்பில் 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் என மொத்தம் ரூ.1.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தகம் மற்றும் இலக்கிய திருவிழா 2023-ஐ முன்னிட்டு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சார்பில் ரூ.25 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பில் காசோலைகள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) தனபிரியா, மணிகண்டன், கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ஸ்ரீதர், மோகனகுமாரமங்கலம், ஜனார்த்தனன் (கோத்தகிரி) உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகின்றன.
    • திட்ட மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    ஊட்டி

    குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் குன்னூர் அருகே உள்ள தேனலை கிராமத்தில் நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் மத்தியில் சமூக சேவையை வலியுறுத்தும் வகையில் இம்முகாமில் ஒவ்வொரு நாளும் தூய்மைப்பணிகள், கிராம மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நட்டு அதை வளர்த்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வரலாற்று தகவல்களை எடுத்துரைத்து பல்வேறு சாதனை விருதுகளைப் பெற்று வரும் மாணவன் செல்வன் கிரினித் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர்களர்கள், முனைவர் கருப்பாயி, முனைவர் பேமலானி, முனைவர் ரோஸ் மற்றும் லீமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரோஜாரமணி, ஆசிரியை பவித்ரா மற்றும் ஊர் பிரமுகர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். திட்ட மாணவிகளும் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் செல்வன் கிரினித்துக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

    • கடைகளுக்கான டெண்டர் கடந்த 10-ந் தேதி விடப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.
    • அ.தி.மு.க சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக கடைகளை கட்டியிருந்தது.இந்த கடைகள் இங்கு இருக்கக்கூடிய 120 சாலையோர வியாபாரிகளுக்கு வழங்குவதாக நகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த கடைகளுக்கான டெண்டர் கடந்த 10-ந் தேதி விடப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

    ஆனால் இந்த அறிவிப்பை சாலையோர வியாபாரிகளுக்கு யாருக்கும் தெரிவிக்கவில்லை எனக் கூறி சாலையோர வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அ.தி.மு.க மாவட்ட செயலாளரை சந்தித்து டெண்டர் பிரச்சினை குறித்து எடுத்துரைத்தனர்.

    இதனை கேட்டறிந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் இது குறித்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும் நகராட்சி ஆணையாளர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அ.தி.மு.க சார்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாக தெரிவித்தார்.

    • வெளிபுல் மைதானத்தில் பா.ஜ.க மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    • விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் பல்வேறு செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் பொது வெளிபுல் மைதானத்தில் பா.ஜ.க மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கீழ் கோத்தகிரி தலைவர் விஜய் குமார் மற்றும் பெள்ளி தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் கே. ஜெ. குமார், மண்டல் பொது செயலாளர்கள் ரமேஷ், கிருஷ்ணா குமார் மற்றும் மண்டல் அணி தலைவர்கள், கிளை தலைவர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் பல்வேறு செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

    • சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
    • சாலை 5 மாதத்தில் பெயர்ந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பாய்கடை ஹாப்பிவேலி பகுதியில் சுமார் 400 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உபயோகித்து வந்த சிமெண்ட் சாலை பழுதடைந்ததால் அதனை சரி செய்து தர வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் மனு மூலமாக கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்திற்கு தெரிவித்தனர்.

    பழுதடைந்த சாலை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் புதிய சாலை அமைக்க நுழைவு வரி திட்டம் மூலம் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தனர். அதன் மூலம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

    5 மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது அந்த சாலையில் சிமெண்ட் மற்றும் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை 5 மாதத்தில் பெயர்ந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தரமற்ற பொருட்களை கொண்டு சாலை அமைக்கப்பட்டதா என்ற கேள்வியும் இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

    • சத்துணவு ஊழியர்க ளுக்கு குடும்ப பாதுகாப்பு டன் கூடிய சட்டப்பூர்வ ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முன்பு சத்துணவு சங்கம் சார்பில்

    ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி வட்டார தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார். செயலாளர் ராமு வரவேற்றார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது:-

    சத்துணவு ஊழியர்க ளுக்கு குடும்ப பாதுகாப்பு டன் கூடிய சட்டப்பூர்வ ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க

    வேண்டும். காலி பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலு வைத் தொகை மற்றும் பணப்பலன்களை உடனடி யாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டை

    மற்றும் உணவு மானி யத்தை மாதம் தோறும் 5-ந் தேதிக்குள் வழங்க

    வேண்டும். காலிப்பணியி டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு 50 சத வீதம் ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆ.ராசா எம்.பி.தொடங்கி வைத்தார்.
    • சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு பகுதியில் எம்.பி.நிதியில் அமைக்கப்பட்டு உள்ள உயர் கோபுர மின் விளக்கை தி.மு.க துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    தமிழக சுற்றுலாதுறை அமைச்சர் கா.ராமசந்திரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார்,நகர செயலாளர் ஜார்ஜ், நகரமன்ற உறுப்பினர் டாக்டர்.விசாலாட்சி,திமுக பிரமுகர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    முன்னதாக தி.மு.க துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசாவுக்கு தி.மு.க பிரமுகர் விஜயகுமார் ஏற்பாட்டில் பட்டாசு வெடித்து ஆளுயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்க பட்டது.

    • ஊர் பொதுமக்கள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    • 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டத்தில் வீரசைவ லிங்காயத்தார் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்களின் சமுதாய முன்னேற்றத்திற்க்கு நீலகிரி மாவட்ட வீர சைவ லிங்காயத்து முன்னேற்ற சங்கம் அமைத்து பல நலத்திட்டங்கள் சமுதாயம் சார்ந்த மற்றும் சமுதாய அல்லாத மக்களுக்கும் செய்து வருகின்றனர். இதில் 3 வருடங்களுக்கு ஒருமுறை புதிதாக பொறுப்பாளர்களை நியமித்து செயல்படுத்தி வரும் தங்களின் குலதெய்வமான ஸ்ரீமகாலிங்கசுவாமி கோவிலில் பொதுகுழுவை கூட்டி வரும் 3 ஆண்டுகளு க்கு தலைவறாக தூனேரி ஆசிரியர் போஜன் கொணவ க்கரை மணி செயலா ளறாகவும் கதுகதொ ரை லிங்கராஜ் பொரு ளாளறாகம் தேர்ந்தெடு க்க பட்டனர். மு ன்னாள் செயலாளர் விஸ்வ நாதன் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.இதில் அனைத்து ஊர் பொதுமக்கள் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

    • யானைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை.
    • நீலகிரி கலெக்டர் தகவல் அளித்தார்.

    ஊட்டி

    மனித- யானைகள் மோதல்களை தடுக்க நிரந்தர தீா்வு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் திட்டங்கள் வகுத்துள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தாா்.

    இதுகுறித்து ஊட்டியில் நிருபர்களிடம் அவா் கூறியதாவது:-

    உணவு மற்றும் தண்ணீா் தேடி கேரளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், ஓவேலி வழித்தடம் வழியாக முதுமலை புலிகள் காப்பகம் சென்று கா்நாடக மாநிலம் மற்றும் சத்தியமங்கலம் வனப் பகுதி வரை ஆண்டு முழுவதும் யானைகள் இடம் பெயா்ந்து வருவது வழக்கம். இந்த நிலையில் கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு இடம்பெயரும் யானைகள் ஓவேலி பகுதியில் மனிதா்களை தாக்குவது அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் யானைகள் தாக்கியதில் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். எனவே இனி வரும் காலங்களில் இப்பகுதியில் யானைகள் தாக்கி மனிதா்கள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க மாவட்ட நிா்வாகம், வனத் துறை மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து குழு அமைக்கப்பட்டுள்ளது

    குறிப்பாக கேரளத்தில் இருந்து ஓவேலி பகுதிக்கு யானைகள் வருவதை கண்டறிய பாா்வுட், சுண்டி, நாயக்கன்பாறை, வட்டப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் 5 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, அந்த முகாம்களில் கும்கி யானைகளை கொண்டு 40 வேட்டை தடுப்பு காவலா்கள் மற்றும் யானை விரட்டும் குழுவினரை பணியமா்த்தி 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவ டிக்கை எடுத்துள்ளது.அதேபோல தனியாா் தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிட்டி ருக்கும் நேரங்களில் தொழிலா ளா்களை வேலைக்கு அனுப்பக் கூடாது என தோட்ட உரிமையாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.

    அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வேலைக்கு செல்வதை தவிா்த்து காலை 8:30 மணிக்கு மேல் பிற்பகல் 2:30 மணி வரை தனியாா் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்களை பணியமா்த்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல ஓவேலி பகுதியில் வெளிநாட்டு வன வில ங்கு ஆராய்ச்சி யாளா்களை கொண்டு கிராம பகுதியில் யானைகள் வருவதை தடுப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் தேவையின்றி இரவு நேரங்களில் வெளியே வரக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அச்சப்படாத அளவுக்கு கிராமத்துக்குள் யானைகள் நுழைவதை தடுக்க ஓவேலி, கூடலூா், நாடுகணி வரை உள்ள வன எல்லைகளில் புதிதாக வேலிகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொ ள்ள ப்பட்டு வருகிறது. இ வ்வா று அவர் கூறினார்.

    வனத்துறை கள இயக்குநா் வெங்கடேஷ் கூறுகையில், கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை தமிழக அரசின் முதன்மை வன பாதுகாவலா் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் யானை வழித் தடங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவடையும் பட்சத்தில் யானை வழித்தட ங்களில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும். ஓவேலி மற்றும் அத னை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவதை கண்டறிய அதிநவீன ட்ரோன் கேமராக்களை கொண்டு தொடா் கண்காணிப்பு ப் பணிகள் மேற்கொ ள்ளப்படும் என்றாா்.

    ×