search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலைத்தளம்"

    சிவகாசி போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீசாரை சினிமா வசனத்துடன் கிண்டல் செய்து நடித்து ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
    சிவகாசி :

    கேலி, கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு கருத்து பதிவிட்டு சிலர் வீண் வம்பையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தை பற்றி, அந்த போலீஸ் நிலையத்தின் வாசலிலேயே கேலியான சினிமா வசனத்தை நடித்துக்காட்டி 4 வாலிபர்கள் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அந்த போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முத்துமாரியப்பன் அளித்த புகார் வருமாறு:-

    நான் பணியில் இருந்தபோது தூத்துக்குடியில் நடைபெற்ற அரசியல் தலைவர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு 4 வாலிபர்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நான், அந்த வாலிபர்களுக்கு அனுமதி அளித்தேன். பின்னர் சிறிது நேரத்தில் எனது ‘வாட்ஸ்அப்’பில் ஒரு நம்பரில் இருந்து வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது.

    அந்த வீடியோவை பார்த்த போது, அதில் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீஸ் நிலையத்தை அவதூறான முறையிலும், கிண்டல் செய்தும் சினிமா வசனத்துடன் அந்த 4 வாலிபர்களும் நடித்துக் காட்டுவது போல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் வழக்குப்பதிவு செய்தார். தகாத வார்த்தையால் பேசுவது, காவல்துறையை களங்கப்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஆனையூர் துலுக்கப்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 25), தங்கேஸ்வரன் (23), ராமச்சந்திராபுரம் குருமகன் (24), சுப்பிரமணியபுரம் ஈஸ்வரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    போலீசாரையும், போலீஸ் நிலையத்தையும் கிண்டல் செய்து போலீஸ் நிலைய வாசலில் நின்று வாலிபர்கள் நடித்துக் காட்டிய வீடியோ வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவில் சேவை வழங்கி வரும் அரசு வலைத்தளங்களில் ஹேக்கர்களின் கைவரிசை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #cryptocurrency #Hacking



    இந்தியாவில் உள்ள அரசு வலைத்தளங்களில் கிரிப்டோ-ஜாக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு வலைத்தளங்களில் துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்களை ஹேக்கர்கள் கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருப்பதி நகராட்சி மற்றும் மச்சேர்லா நகராட்சி வலைத்தளங்கள் ஹேக் செயய்ப்பட்டு கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென காயின்ஹைவ் ஸ்க்ரிப்ட்டை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அரசு சேவைகள் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள அரசாங்க வலைத்தளங்களை தினந்தோரும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையின்படி அரசு வலைத்தளங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் பயனரின் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன்பின் மின்சாரம் அல்லது இண்டர்நெட் இணைப்பு போன்றவற்றை பயன்படுத்தி கிரிப்டோகரென்சி மைனிங் செய்யப்படுகிறது.



    மொனேரோ எனும் கிரிப்டோகரென்சியை மைன் செய்ய ஹேக்கர்கள் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். மொனேரோ வகையை சேர்ந்த கிரிப்டோகரென்சியை டிராக் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் அரசாங்க வலைத்தளங்களில் அதிகமானோர் பயன்படுத்தி வருவதோடு, இவற்றின் பாதுகாப்பு போதுமான அளவு செய்யப்படாததால் ஹேக்கர்கள் இவற்றை தேர்வு செய்கின்றனர். 

    இதேபோன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் பயன்படுத்தி வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளமும் மொனேரோ கிரிப்டோகரென்சி மைனிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது முன்னதாக கண்டறியப்பட்டது. 

    புதிய மால்வேர் மூலம் நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருப்பது ஹேக்கர்களுக்கு அதிளவு லாபத்தை ஈட்டித்தருகிறது.
    எகிப்து நாட்டில் இணைய வழி குற்றத்தை தடுக்கும் வகையில் வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. #Egypt #Internet
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் இணைய வழி குற்றத்தை தடுக்கும் வகையில் வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தேசபாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான வலைத்தளங்களை முடக்க இச்சட்டம் வழிவகை செய்யும்.



    நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் இந்த சட்ட மசோதா நிறைவேறியது. இதையடுத்து அதிபர் அப்தெல் பாட்டா அல்-சிசி இந்த புதிய சட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தார்.

    இந்த சட்டத்தின் படிஇணையத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தளங்களை உருவாக்கி நடத்துபவர்கள் மற்றும் அந்த வலைத்தள பக்கங்களை பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

    நாட்டின் நிலையற்ற தன்மை மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை எதிர்கொள்ள புதிய சட்டம் உதவும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

    ஆனால், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் எதிரிகளையும் நசுக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

    மேலும் இந்த சட்டம் கையெழுத்தாவதற்கு முன்னதாகவே சுமார் 500 வலைத்தளங்கள் முடக்கப்பட்டுவிட்டதாக கெய்ரோவை தலைமையகமாக கொண்ட சுதந்திரமான சிந்தனை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சங்கம் தெரிவித்துள்ளது.  #Egypt #Internet #Tamilnews
    உலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக வலைத்தள வாசிகள் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #SocialMediaDay




    தொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.

    இணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது. 

    ஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர்.

    மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் சமூக வலைத்தளம் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.


    கோப்பு படம்

     - உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக இருக்கும் நிலையில், இணையத்தை பயன்படுத்துவோர் மட்டும் சுமார் 420 கோடி என கண்டறியப்பட்டு இருக்கிறது.

    - உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 300 கோடி ஆகும்.

    - உலகின் பிரபல பிராண்டுகள் குறைந்தபட்சம் இரண்டுக்கும் அதிகமான சமூக வலைத்தள சேனல்களை பயன்படுத்துகின்றன.

    - வியாபாரம் செய்வோரில் 81% பேர் ஏதேனும் வகையில் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

    - 2017-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2017 மூன்றாவது காலாண்டு வரை மட்டும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12.1 கோடியாக அதிகரித்தது. அந்த வகையில் ஒவ்வொரு 15 நொடியிலும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் சேர்கின்றனர்.

    - ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் தினமும் 6000 கோடி குறுந்தகவல்கள் தினசரி அடிப்படையில் பரிமாறப்படுகின்றன.
     

    கோப்பு படம்

    - சமூக வலைத்தள விளம்பரங்களில் மட்டும் 2017-ம் ஆண்டு சுமார் 4000 கோடி டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது.

    - உலகின் 38 சதவிகித நிறுவனங்கள் 2015-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தள செலவினங்களை சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கின்றன, இது முந்தைய ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    - ட்விட்டரில் குறிப்பிட்ட பிரான்டு மீது புகார் தெரிவிப்போர் அந்நிறுவனத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    - ஃபேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள் தினமும் சராசரியாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.

    - ஸ்னாப்சாட் தளத்திலும் வீடியோக்கள் தினமும் சுமார் 800 கோடி முறை  பார்க்கப்படுகின்றன.

    - 2018-ம் ஆண்டு மொத்த ஆன்லைன் தரவுகளில் 74 சதவிகிதம் வீடியோவாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    உலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் இத்துறை சார்ந்த வளர்ச்சி பல்வேறு பரிணாமங்களை கடந்து வருகிறது. உலக அரசியல் வரை ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்கினாலும், இவற்றால் நமக்கு ஏற்படும் அபாயங்களும் அதிகமாவதை அனைவரும் உணர வேண்டிய காலக்கட்டம் இது. #SocialMediaDay 
    சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து பதில் மனு தாக்கல் செய்யாத யாகூ, முகநூல் வலைத்தளங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Google #Facebook #Fine
    புதுடெல்லி:

    சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து ஐதராபாத்தை சேர்ந்த பிரஜாவாலா என்ற தொண்டு நிறுவனம் 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கு 2 வீடியோ ஆதாரங்களுடன் ஒரு கடிதம் எழுதியது. அதில் ஆபாச வீடியோ காட்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.



    இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த வழக்கு கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது அனைத்து சமூக வலைத்தளங்களும் தாங்கள் இதுபற்றி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த பதிலை அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் முக்கிய வலைத்தளங்கள் இதுபற்றி எந்த பதில் மனுவையும் நேற்று தாக்கல் செய்யவில்லை.

    இதையடுத்து நீதிபதிகள் அமர்வு சமூக வலைத்தளங்கள் பதில் மனுதாக்கல் செய்யாததை சுட்டிக் காண்பித்து யாகூ, முகநூல் (பேஸ்புக்) இந்தியா, முகநூல் அயர்லாந்து, கூகுள் இந்தியா, கூகுள், மைக்ரோ சாப்ட் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.  #Google #Facebook #Fine 
    பிளிப்கார்ட் தளத்தின் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் நிறுவனம் 1600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது.
    புதுடெல்லி:

    அமெரிக்க ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் இந்திய ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-ல் 77% பங்குகளை சுமார் 1600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது. இது அந்நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது இருக்கிறது.

    இந்தியாவில் 11 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனம் மொத்தம் 20.8 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. பென்டொன்வில், அர்கன்சாஸ் சார்ந்த வால்மார்ட்  பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வாங்குவதாக வால்மார்ட் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    பிளிப்கார்ட் தளத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால், ஒப்பந்தம் கையெழுத்தானதும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். பிளிப்கார்ட் தளத்தை துவங்கும் போது சச்சின் மற்றும் பின்னி இருவரும் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றினர். பிளிப்கார்ட் நிறுவன இணை நிறுவனர் சச்சின் பன்சால் நிறுவனத்தில் தனது 5.5% பங்குகளை வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறார். 

    ஒப்பந்தம் கையெழுத்தானதும் பின்னி பன்சால் நிறுவன பணியை தொடர்ந்து மேற்கொள்கிறார். ஜப்பானின் சாஃப்ட் பேங்க் நிறுவனமும் பிளிப்கார்ட் தளத்தில் தனது 20% பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது.
    ×