search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    • சின்னசேலம் அருகே 6-ம் வகுப்பு மாணவி மாயமானார்.
    • அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் அக்கம் பக்கத்தில் தனது மகளை தேடினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 39) விவசாயி. அவரது மகள் பொன்னி (வயது14) இவர் புக்கிரவாரி யில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3-ந் தேதி இரவு வழக்கம் போல் இரவு வீட்டில் தூங்கினார். அதிகாலை 3:30 மணி அளவில் அவருடைய தந்தை அய்யப்பன் எழுந்து பார்த்தபோது மாணவியை காணவில்லை. இதனால். அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் அக்கம் பக்கத்தில் தனது மகளை தேடினார். இதனால் சந்தேகம் அடைந்த அய்யப்பன் கீழ்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி பொன்னி என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவதற்காக மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • முதலிடம் பிடித்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கௌசிகா, இராண்டாமிடம் பிடித்த ஹரிணி ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    வேதாரண்யம் :

    வேதாரண்யம்அடுத்த ஆயக்காரன்புலம் பெ ண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்சென்னை மாமல்லபுரத்தில் நடை பெறும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவதற்காக மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைபள்ளி 11-ம் வகுப்பு மாணவிகள் கெளசிகா, ஹரிணி சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர்.

    மாணவி கெளசிகாவை தமிழக அரசு சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் இலவசமாக அழைத்து சென்று மீண்டும் சென்னை போட்டியில் பங்குபெறச் செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததனர்.

    இதில் நாகைப்பட்டினம் மாவட்டத்தில் 19 வயதுக்கு ட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடம் பெற்ற ஆயக்காரன்புலம் அரசு பெண்கள்மேல்நி லைப்பள்ளி மாணவி கௌசிகா இராண்டாம் இடம்பெற்ற ஹரிணி ஆகியோ ருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது .பள்ளி தலைமை ஆசிய ர்ஸ்டெல்லாஜேனட் தலை மையில் நடைபெற்ற விழாவில் மாணவிகளுக்கு சால்வை, திருக்குறள் நூல்பரிசளித்தனர். இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை யாசிரியர் பரஞ்ஜோதி, ஆசிரியர் சிலம்புசெல்வன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் பொற்றோர்கள் கலந்துகொண்டனர்.

    • மதுரையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மதிச்சியத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. எனவே அவரை பெற்றோர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போதுஅவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மதுரை தல்லாகுளம் அனைத்து போலீசில் புகார் கொடுத்தனர்.

    இதன் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் அக்பர்கான் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் இது தொடர்பாக மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் மாணவியும், மேளக்காரர் தெருவை சேர்ந்த பாபு மகன் வசந்தகுமார் (வயது 19) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், அவரது வீட்டிற்கு மாணவி சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானதும் தெரியவந்தது.

    இது தொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.

    • பாராட்டு விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் டி .கே .பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • வெற்றி பெற்ற மாணவி மீனாவுக்கு பதக்கம் அணிவித்து பெரிய பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் அருகே கோவிந்த பேரி ஊராட்சியில் ஞானமறவா நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிள்ளை குளத்தை சேர்ந்த சங்கர்- காஞ்சனா தம்பதி மகள் மீனா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். தற்போது நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பாராட்டு விழா கோவிந்தபேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் டி .கே .பாண்டியன் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் இசேந்திரன் வரவேற்றார். ஞானம் மறவா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் சேவியர் ஞானம் வாழ்த்தி பேசினார். வெற்றி பெற்ற மாணவிக்கு பதக்கம் அணிவித்து பெரிய பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் இசக்கி பாண்டியன், பொன்னுத்தாய், நாகராஜன், சுகிர்தா விவசாய சங்க தலைவர் சிங்கக்குட்டி,ஆசிரியர்கள் வேலம்மாள், சுப்பையா, அப ராஜிதன், உத்திராட் ஜெயா, லிங்கசாமி, மாலதி,பிரின்ஸ் ஜோசப், விஜி, சுமதி பாலா, ரஜி ஹனிபர் ,மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் அன்னகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • மாணவியின் மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த வற்புறுத்தியுள்ளார்
    • வாலிபரின் காதல் லீலை அத்துமீறி செல்வதை பார்த்த மாணவி பயந்து அரண்டு போய் உள்ளார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 28- வயதுடைய வாலிபர் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி. எஸ். சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவ் வழியாக சென்ற கல்லூரி மாணவிக்கு வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

    வாலிபர் மாணவியை கண்மூடித்தனமாக காதலிக்க தொடங்கி உள்ளார். ஒரு கட்டத்தில் மாணவி உண்மையாக காதலிக்கிறாரா என தெரிந்து கொள்ள விரும்பிய வாலிபர், மாணவியின் மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த வற்புறுத்தியுள்ளார். வாலிபரின் காதல் லீலை அத்துமீறி செல்வதை பார்த்த மாணவி பயந்து அரண்டு போய் உள்ளார்.

    மாணவி தனது வீட்டில் கூறியுள்ளார். அவரது தந்தை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.இதனால் உஷாரான போலீசார் வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வாலிபரிடம் விசாரித்த போது தான் மாணவியை காதலிப்பதாகவும் அவள் தனக்கு வேண்டும் எனவும் கூறிவருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 4 மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவமனை நர்சிங் கல்லூரியில் படித்து வரும் 19 வயதுடைய மாணவி நேற்று பிற்பகலில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவியின் தோழிகள் செல்போனில் தொடர்பு கொண்டபோது தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் சுல்தான் அலாவுதீன் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இளம்பெண்

    சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் ஜக்கம்மாள்புரம் ஆகாஷ் நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது 22 வயது மகள் சம்பவத்தன்று மாயமானார்.

    இவர் ராயகிரி ஆவுடையா புரத்தை சேர்ந்த குமார் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. மகள் மாயமானது குறித்து கந்தசாமி கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீண்டும் மாயம்

    சிவகாசி டி.கான்சா புரத்தை சேர்ந்தவர் மாணவி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு செல்போன் மூலம் தேனி சின்னமனூரை சேர்ந்த பிரதீப் என்பவர் பழக்க மானார்.

    நாளடைவில் இவர்க ளுக்குள் காதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி சம்பவத்தன்று மாயானார். உடனே அவரது தந்தை தேனிக்கு சென்று போலீஸ் உதவியுடன் தனது மகளை மீட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அந்த மாணவி மீண்டும் மாயமானார். இதுகுறித்து மாரனேரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மகனுடன் இளம்பெண்

    ராஜபாளையம் தொம்ப குளத்தை சேர்ந்தவர் பெரு மாள். இவரது மகள் நிகிதா தனது மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் தனது மகனுடன் நிகிதா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை கீழராஜகுலராமன் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டுள்ளார்.
    • சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே குள்ளஞ்சாவடியை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரில், சமிட்டிக்குப்பம் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது மகளை பெண் கேட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியில் சென்ற எனது மகளை சுரேஷ் கடத்தி சென்று இருக்கலாம் என புகார் அளித்ததன் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 

    • டெல்லியில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
    • விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

    உடுமலை :

    வருகிற 15 ந் தேதி டெல்லியில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதை யொட்டி அணிவகுப்பை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும் .இந்த சுதந்திர தின விழா அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு உடுமலை ஸ்ரீ. ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிக்கும் தேசிய மாணவர் படை மாணவி ஆர்.அபர்ணா மற்றும் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளரான இந்த கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியரான தேசிய மாணவர் படை அலுவலர் பி.கற்பகவள்ளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காருண்யா பல்கலைக்கழகத்தில் பயிற்சி முடித்து இன்று கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகின்றனர்.

    இவர்கள் இருவரையும் உடுமலை ஸ்ரீ. ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி செயலாளர் சுமதிகிருஷ்ணபிரசாத், இயக்குனர் ஜெ.மஞ்சுளா, முதல்வர் என்.ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியைகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    • மசினகுடி பெட்ரோல் பங்க் முதல் வனச்சோதனை சாவடி வரை நடைபெற்றது.
    • தமிழ் நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புற நடமான புலியாட்டம் ஆடப்பட்டது.

    குன்னூர்:

    உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் புலிகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது.

    முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் டி.வெங்கடேஷ், துணை இயக்குனர் அருண்குமார் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    பேரணியானது மசினகுடி பெட்ரோல் பங்க் முதல் வனச்சோதனை சாவடி வரை நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள், வனப்பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காடுகள் மற்றும் புலிகள் பாதுகாப்பு குறித்து ஓவியம், கட்டுரை, பேச்சு பேட்டிகளும் நடத்தப்பட்டது.

    வெற்றி பெற்றவர்களுக்கு தெப்பக்காடு யானைகள் பயிற்சி முகாம் மையத்தில் நடந்த விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதேபோல் குன்னூர் பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் வண்டிச்சோலை, சிம்ஸ்பூங்கா, டெ்போர்ட், குன்னூர் மார்க்கெட், குன்னூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவிகள் விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சி நடத்தினர்.

    இதை தொடர்ந்து தமிழ் நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புற நடமான புலியாட்டம் ஆடப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் புலி வேடமிட்டு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அழிவு நிலையில் உள்ள புலிகளை காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நாடகமும் நடித்து காட்டப்பட்டது.

    நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அதிகாரி சிந்தியா ஜார்ஜ், சர்வதேச புலிகள் தினத்தின் தலைமை கூற்றாகிய புலிகள் பாதுகாப்பு மனிதர் கையில் எனும் கருத்தை கொண்டு இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

    • 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மரியம் பள்ளி அளவில் முதலிடம் பெற்றதைப் பாராட்டி நினைவு விருது வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி அருணாச்சலம் ஹாலில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சென்ட்ரல் சார்பில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மரியம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றதைப் பாராட்டி ஸ்ரீ செல்வநாயகம் பாப்பாத்தியம்மாள் நினைவு விருது மற்றும் ரூ.ஆயிரம் ரொக்கப்பரிசினை சுழற்கழகம் சார்பில் கர்னல் செல்வநாயகம் சம்சு வழங்கினார்.

    சாதனை விருது பெற்ற மாணவி மரியத்தை பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர். குற்றாலம் சென்ட்ரல் ரோட்டரியின் தலைவர் ராஜகுலசேகர பாண்டியன், செயலாளர் பாபுராஜ், யூத் சர்வீஸ் தலைவர் பெல் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

    • மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்தது

    பெரம்பலூர்:

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு பெரம்பலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கலையரசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் தாலுகா, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, பள்ளியை அரசுடைமையாக்க வேண்டும். இந்த சம்பவத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் தொடரும் மாணவர்களின் மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்."

    • சின்னசேலம் பள்ளியில் இறந்த மாணவியின் சொந்த ஊரில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
    • போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கலவரம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்திலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த நிலையில், கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவி உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாணவி படித்த தனியார் பள்ளி முன் ஸ்ரீமதியின் இறப்புக்கு நீதி கேட்டு இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் செய்தனர். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நைனார்பாளையம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் வேப்பூர் பகுதிகளிலும் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு கிராம மக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தலைமையில் 250-க்கும் மேற்பட்டபோலீசார் வேப்பூர் கூட்ரோடு, பெரியநெசலூர், தொண்டாங்குறிச்சி, கழுதூர் உள்ளிட்ட பகுதிகளில்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தண்ணீர்பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் இறுதி சடங்கு முடியும் வரை வேப்பூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுத்தப்பட்டுள்ளது.

    ×