search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறைவேற்றம்"

    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #RajyaSabha #10pcquota #economicallybackward
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.
     
    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க., தி.மு.க.,  ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.



    இந்த மசோதா மீதான விவாதம் சுமார் 10 மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்றது. இறுதியில், வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது. 

    இந்நிலையில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக 165 வாக்குகள் பதிவாகின. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. #RajyaSabha #10pcquota #economicallybackward
    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #LokSabha #10pcquota #economicallybackward
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.
     
    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர் சந்த் கேலாட் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை சட்டமாக்க, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த மசோதா மீதான விவாதம் மாலை 6 மணியில் இருந்து நடைபெற்றது. சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக இந்த
    விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலர் இரவு 10 மணிக்கு மேல் மக்களவைக்கு வருகை தந்தனர். இறுதியில், வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது. வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் தான் இந்த மசோதா நிறைவேற்றம் அடையும்.

    இந்நிலையில், இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகளும் எதிர்ப்பு தெரிவித்து 3 வாக்குகளும் பதிவாகின. இதனால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் நாளை பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெறவுள்ளது. #LokSabha #10pcquota #economicallybackward
    இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி படிப்பில் முறைகேட்டை தடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. #Homeopathy #LokSabha
    புதுடெல்லி:

    இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி படிப்பில் முறைகேடுகளை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும் ஓமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    2 மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இது தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இதன் மீதான விவாதத்துக்கு மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி ஸ்ரீபாத நாயக் பதில் அளித்து பேசுகையில், “இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு, ஓமியோபதி மருத்துவ கல்லூரி தொடங்கியவர்கள், புதிய ஓமியோபதி படிப்புகளை தொடங்கியவர்கள், மாணவர் எண்ணிக்கையை உயர்த்தியவர்கள், ஓராண்டுக்குள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும், இல்லாவிட்டால், அவர்கள் அளிக்கும் பட்டம், அங்கீகரிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்தார். #Homeopathy #LokSabha #tamilnews 
    நாடாளுமன்ற மக்களவையில், ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. #HumanTrafficking #LokSabha
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவையில், ‘ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. ஆட்கள் கடத்தப்படுவதை தடுப்பதும், கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதும், கடத்தல்காரர்களை தண்டிப்பதும் இதன் நோக்கம் ஆகும்.

    ஆள் கடத்தலை தடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கும், கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் பணிக்காக சிறப்பு அதிகாரியை நியமிப்பதற்கும் மாநில அரசுகளுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.



    ஆண், பெண் இருபாலருக்கு மட்டுமின்றி, வெளிநாட்டினருக்கும் இம்மசோதா பொருந்தும் என்று விவாதத்துக்கு பதில் அளித்தபோது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார். மனிதர்களை வாங்குவதும், விற்பதும் முதல்முறையாக குற்றம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். #HumanTrafficking #LokSabha #tamilnews 
    பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளின் சொத்துகளை பறிப்பதற்கான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. #Parliament #EconomicOffenders
    புதுடெல்லி:

    விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள், வங்கிகளை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். தற்போதைய சட்டங்களில், அத்தகையவர்களின் சொத்துகளை பறிப்பதற்கான ஷரத்துகள் இல்லை. இதனால், வங்கிகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, இதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.



    அதன்படி, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் மசோதா-2018 என்ற புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது.

    ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள், இந்த மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியதுடன், இந்தியாவில் சட்ட நடவடிக்கைகளுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள மறுத்தால், அவர்கள் மீது தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.

    அவர்கள் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் ஆஜராகாவிட்டால், அவர்களுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்படும். அதன்பிறகும் அவர்கள் வராவிட்டால், கோர்ட்டு மூலம் அவர்களை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியும் நியமிக்கப்படுவார்.

    பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கு அந்த குற்றவாளி, உரிமை கொண்டாட முடியாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 19-ந் தேதி, இந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதற்கு மத்திய நிதி மந்திரி பியுஷ் கோயல் பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு, வெளிநாட்டுக்கு தப்பியவர்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கம். அவர்கள் திரும்பி வந்துவிட்டால், அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படமாட்டாது. அவர்கள் வழக்கை சந்தித்து, தங்களை நிரபராதி என்று நிரூபிக்க முயற்சிக்க வேண்டும்.

    அவர்கள் கோர்ட்டை பயன்படுத்துவதற்கான உரிமையை மத்திய அரசு தடுக்காது. வெளிநாட்டுக்கு தப்புவதை தடுப்பதற்கும் மசோதாவில் வழி உள்ளது. விசாரணை அமைப்பாக அமலாக்கத்துறை செயல்படும். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட நடைமுறைகளும் இந்த சட்டத்தில் பயன்படுத்தப்படும்.

    குற்றவாளிகளை பரிமாற்றம் செய்துகொள்வதற்காக 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அந்த ஒப்பந்தம் செய்து கொள்ளாத நாடுகளுடனும் தூதரக வழிமுறைகளை முழுமையாக பயன்படுத்தி, குற்றவாளிகளை மீட்க முயற்சிப்போம்.

    பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு தப்பியவர்கள், இந்தியாவில் உள்ள தங்களது சொத்துகளை காப்பாற்றி கொள்ளலாம் என்ற நிலை இனிமேல் இருக்காது.

    இவ்வாறு பியுஷ் கோயல் பேசினார்.

    பின்னர், இந்த மசோதா, மாநிலங்களையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இதனால், இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிவிட்டது.   #Parliament #EconomicOffenders #tamilnews 
    இஸ்ரேல் நாடு, யூத நாடாகி உள்ளது. இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி நிறைவேறியது. #Israel #NationState
    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாடு, யூத நாடாகி உள்ளது. இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி நிறைவேறியது. இந்த நாட்டின் முழுமையான தலைநகராக ஜெருசலேம் விளங்கும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.



    இந்த மசோதா நிறைவேறி இருப்பதற்கு இஸ்ரேலிய அரபு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ புகழ்ந்து உள்ளார். இது சிறப்புவாய்ந்த தருணம் என அவர் கூறி உள்ளார்.

    8 மணி நேர விவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு நடந்தது. 62 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 55 பேர் எதிராக ஓட்டு போட்டனர்.

    இஸ்ரேல் மக்கள் தொகையில் (90 லட்சம்) 20 சதவீதத்தினர் இஸ்ரேலிய அரபு மக்கள் ஆவர். இப்போது இஸ்ரேல், யூத நாடு ஆகி விட்டதால் அரபி மொழிக்கான அந்தஸ்து குறைந்து விடும் என சொல்லப்படுகிறது.

    சட்டப்படி அவர்கள் சம உரிமை பெற்றிருந்தாலும்கூட இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக குறை கூறுகின்றனர்.

    அகமது டிபி என்ற அரபு எம்.பி. கருத்து தெரிவிக்கையில், “இந்த மசோதா நிறைவேறி இருப்பது, ஜனநாயகம் செத்து விட்டதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.  #Israel #NationState #Tamilnews 
    ×